கியூபா மற்றும் மெக்சிகோவுக்கு அருகே உள்ள கரீபியன் தீவில் நித்யானந்தா பதுங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் அவரை கைது செய்ய சர்வதேச போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். கரீபியன் தீவில் நித்யானந்தா பதுங்கல் – கைது செய்ய இண்டர்போல் தீவிரம் நித்யானந்தா பெங்களூர்: இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் ஆசிரமங்களை நடத்தி வரும் சாமியார் நித்யானந்தா மீது பல்வேறு புகார்கள் எழுந்தன. குஜராத்தில் உள்ள ஆசிரமத்தில் தனது மகள்களை கடத்தி சிறை வைத்துள்ளதாக பெங்களூரை சேர்ந்த ஜனார்த்தன சர்மா என்பவர் போலீசில் ... Read More »
இந்தியா
ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சிக்கு ரூ.80 ஆயிரம் கோடியை ஒதுக்கியது மத்திய அரசு
ஜம்மு காஷ்மீரில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு 80 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை கடந்த ஆண்டு ஆகஸ்டு 5ம் தேதி மத்திய அரசு நீக்கியது. பின்னர் அந்த மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்தது. இதனால் ஏற்பட்ட சட்டம் ஒழுங்கு பிரச்சனையை சமாளிக்க மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு, தகவல் தொடர்பு துண்டிப்பு, இணையதள வசதி நிறுத்தம் என பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. இந்நிலையில் தற்போது படிப்படியாக இயல்பு நிலை திரும்பியதை தொடர்ந்து, ... Read More »
இன்று சரிவுடன் வர்த்தகத்தைத் துவக்கிய இந்திய பங்கு சந்தைகள் அதலிருந்து ஒரளவு மீண்டு முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளன.
மும்பை பங்குசந்தை சென்செக்ஸ் இன்று துவக்கத்தில் 400 புள்ளிகள் வீழ்ச்சியுடன் 40,754 புள்ளிகளில் வர்த்தகத்தை துவக்கியது. எனினும் பிறகு ஓரளவு சென்செக்ஸ் சரிவில் இருந்து மீண்டது. தேசிய பங்கு சந்தையின் நிப்டி 39 புள்ளி 30 குறைந்து 12 ஆயிரத்து 13 என்ற அளவில் வர்த்தகமானது.நேற்று மாலை சென்செக்ஸ் 40,581 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. கோடக் மஹிந்திரா வங்கி, எஸ்.பி.ஐ., ஆக்சிஸ் வங்கி, எச்.டி.எஃப்.சி. வங்கி, எல் அன்டு டி ஆகியவற்றின் பங்குகள் ஒன்று முதல் ஒன்றரை சதவிகிதம் சரிவை சந்தித்தன. டி.சி.எஸ், டெக் ... Read More »
நாட்டின் வளர்ச்சிக்காக பல திட்டங்கள்: மத்திய பட்ஜெட் 130 கோடி மக்களின் விருப்பத்தை நிறைவேற்றும்; பிரதமர் மோடி டுவிட்
டெல்லி: பிப்ரவரி முதல் தேதி தாக்கலாக உள்ள மத்திய பட்ஜெட், 130 கோடி இந்தியர்களின் விருப்பங்களை பிரதிபலிப்பதாக இருக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் இரண்டு மாத கால பட்ஜெட் கூட்டத் தொடர் ஜன.31ம் தேதி தொடங்குகிறது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்.1ம் தேதி, தனது 2வது மத்திய பட்ஜெட்டை சமர்ப்பிக்க வாய்ப்புள்ளது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஜன.31ம் தேதி மக்களவை மற்றும் மாநிலங்களவையின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றவுள்ளார். அதன்பிறகு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் ... Read More »
டெல்லியில் காற்றின் தரம் மிக மோசமாக உள்ளது
டெல்லியில் காற்றின் தரம் மிக மோசமாக உள்ளது என வானிலை முன்னறிவிப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்து உள்ளது. டெல்லி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் காற்றின் தரம் 314 ஆக உள்ளது என்று காற்றின் தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பு (சஃபர்) தெரிவித்துள்ளது. காற்றின் தரம் மதுரா சாலையில் 338 ஆக உள்ளது. இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையம் 328, டெல்லி பல்கலைக்கழகம் 317, திர்பூர் 316, அயனகர் 310, சாந்தினி சவுக் மற்றும் லோதி சாலை ... Read More »
சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்தை ஊக்குவிக்க 2,636 சார்ஜ் மையங்கள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் : தமிழகத்தில் 256 இடங்களில் அமைகிறது
டெல்லி : சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்தை ஊக்குவிக்க 2,636 சார்ஜ் மையங்கள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பெட்ரோல், டீசலால் இயக்கப்படும் வாகனங்கள் விடும் கரும்புகையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் இந்தியாவில் பேட்டரி வாகனங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த வாகனங்களுக்கு மின்சாரம் சார்ஜ் செய்யும் மையங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்தை ஊக்குவிக்க 2,636 சார்ஜ் மையங்கள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பேட்டரியில் இயங்கும் வாகன தயாரிப்பு (எஃப்ஏஎம்இ -இந்தியா 2) ... Read More »
எப்போதும் பாகிஸ்தானை பற்றியே பேசுவது ஏன்? பிரதமருக்கு மம்தா கேள்வி
மேற்கு வங்காளம் மாநிலத்தின் சிலிகுரியில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்ற முதல் மந்திரி மம்தா பானர்ஜி, எப்போதும் பாகிஸ்தானை பற்றியே பேசுவது ஏன்? பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பியுள்ளார். மேற்கு வங்காள மாநிலம் சிலிகுரியில் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து முதல் மந்திரி மம்தா பானர்ஜி தலைமையில் இன்று பேரணி நடந்தது. அப்போது மம்தா பானர்ஜி பேசியதாவது: தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் குடியுரிமை திருத்த சட்டம் ஆகியவற்றுக்கு எதிராகப் போராடி வருகிறேன். மக்கள் அனைவரும் என்னுடன் ... Read More »
குடியுரிமை சட்டத்தில் இருந்து ஒரு அங்குலம்கூட பின்வாங்க மாட்டோம் -அமித் ஷா உறுதி
எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு வந்தாலும் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்துவதில் இருந்து அரசு பின்வாங்கப் போவதில்லை என உள்துறை மந்திரி அமித் ஷா தெரிவித்தார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு (சிஏஏ) எதிராக நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். –– ADVERTISEMENT –– இது ஒருபுறமிருக்க, குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து, பாஜக சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் ... Read More »
3 ஆண்டுகளாக கழிவறையில் வசித்து வரும் 72வயது மூதாட்டி
ஓடிசா மாநில பழங்குடியின மூதாட்டி ஒருவர் கடந்த 3 ஆண்டுகளாக கழிவறையில் வசித்து வரும் அவலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மயூர்பஞ்ச் பகுதியை சேர்ந்த திரௌபதி பெஹரா என்ற அந்த மூதாட்டி கணவர் இறந்ததால், மகள் மற்றும் பேரனுடன் வசித்து வருகிறார். வீடு கட்ட வசதியில்லாததால், ஊராட்சி சார்பில் கட்டித்தரப்பட்ட கழிவறையில் அவர்கள் மூவரும் வசித்து வருகின்றனர். அந்த சிறிய அறைக்குள் சமையல் செய்வதோடு, அதனுள்ளேயே மூதாட்டி படுத்துக் கொள்கிறார். அவரது மகளும் பேரனும் வெளியில் படுத்துறங்குகின்றனர். மூதாட்டிக்கு வீடு கட்டித்தர தனக்கு அதிகாரம் இல்லை ... Read More »
43 பேரை காவு கொண்ட தீ விபத்தின் எதிரொலியாக அதிரடி நடவடிக்கை
டெல்லியில், 43 பேரை காவு கொண்ட கொடூர தீ விபத்துக்கு பின்னர், முறையான அனுமதியின்றி இயங்கும் தொழிலகங்களுக்கு சீல் வைக்கும் நடவடிக்கைகளை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர். அனாஜ் மண்டியில், குறுகலான பகுதிகளில் உள்ள தொழிலகங்களில், தொழிற்துறை, தீயணைப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறையினர், சோதனைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். முறையான அனுமதி பெறாத தங்கள் தொழிலகங்களுக்கு சீல் வைக்கப்படலாம் என்ற அச்சத்தில், அவற்றின் உரிமையாளர்கள், முன்னறிவிப்பின்றி மூடியுள்ளனர். இதனால், வேலையிழந்து தவிப்பதாக, தொழிலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். Read More »