மும்பை தாக்குதலின் 11-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் நினைவிடத்தில் இன்று காலை ஆளுநர் கோஷ்யாரி, முதலமைச்சர் பட்னாவிஸ் ஆகியோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி கடல்வழியாக மும்பைக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் தீவிரவாதிகள், சத்ரபதி சிவாஜி ரயில்வே ஸ்டேஷன், தாஜ் ஓட்டல், நாரிமன் ஹவுஸ், காமா மருத்துவமனை, ஒபராய் டிரிடென்ட் ஓட்டல், லியோபோல்டு கபே ஆகிய இடங்களில் கொடூரமான தாக்குதலை நடத்தினர். இந்த தாக்குதல்களில் வெளிநாட்டினர் உள்பட 166 பேர் ... Read More »
Author Archives: admin
நாட்டின மாடுகளை பாதுகாக்கும் நோக்கில் தமிழக அரசு செயல்படுகிறது – கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர்
தமிழகத்திலுள்ள நாட்டின மாடுகளின் உற்பத்தியை பெருக்கி, அதன் மூலம் கிடைக்கும் தரமான பாலை பொதுமக்களுக்கு கொடுப்பதற்கான முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டு வருவதாக கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் பகுத்தம்பாளையம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி நிலையத்தின் நிர்வாக கட்டிடத்தினை அமைச்சர்கள் செங்கோட்டையன், உடுமலை ராதாகிருஷ்ணன், மற்றும் கருப்பணன் ஆகியோர் திறந்து வைத்தனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், நாட்டின மாடுகளை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்திலே பர்கூர், புலிக்குளம், காங்கேயம் ... Read More »
கள்ளக்குறிச்சி மாவட்டம் இன்று உதயம்
புதிதாக தோற்றுவிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார். விழுப்புரம் மாவட்டத்தைப் பிரித்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் தோற்றுவிக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஜனவரி மாதம் அறிவித்தார். இதற்கான அரசாணையை கடந்த 13-ந்தேதி தமிழக அரசு பிறப்பித்தது. இதையடுத்து மாவட்ட ஆட்சியராக கிரண்குராலாவும், மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக ஜெயசந்திரனும் நியமிக்கப்பட்டு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், சின்னசேலம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, கல்வராயன்மலை ஆகிய வட்டங்கள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், மாவட்டத்தின் தொடக்கவிழா கள்ளக்குறிச்சி ... Read More »
நீலகிரியில் பூத்துக் குலுங்கும் டைட்டோனியம் மலர்கள்
நீலகிரி மாவட்டத்தில் பனி காலங்களில் மஞ்சள் நிறத்தில் பூத்துக்குலுங்கும் டைடோனியம் மலர்கள் சுற்றுலா பயணிகளின் உள்ளத்தை கொள்ளை கொள்வதாய் அமைந்துள்ளன. சூரியகாந்தி மலர்களை போல் மஞ்சள் நிறத்தில் காணப்படும் இந்த வகை மலர்கள் குன்னூர் – மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் மரப்பாலம் பகுதியில் மிக அதிகமாக உள்ளன. நெடுஞ்சாலையின் இருபுறமும் அதிக அளவில் மலர்கள் காட்சியளிப்பது நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளை மஞ்சள் தூவி வரவேற்பது போல் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது Read More »
கல்கி சாமியார் ஆசிரமத்தில் மீண்டும் வருமான வரித்துறை சோதனை
ஆந்திராவில் உள்ள கல்கி சாமியார் ஆசிரமத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர். சித்தூர் மாவட்டம், வரதய்யபாளையத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படக்கூடிய கல்கி ஆசிரமத்தில் கடந்த மாதம் ஆசிரமத்திற்கு சொந்தமான அலுவலகத்தில் 40 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். இந்தச் சோதனையில் 94 கோடி ரூபாய் ரொக்கம், 24 கோடி ரூபாய்க்கு வெளிநாட்டு பணம் மற்றும் 20 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க, வைர ஆபரணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர். இந்தநிலையில் நேற்று மாலை மீண்டும் வருமான வரித்துறையினர் நான்கு ... Read More »
முடிவுக்கு வருகிறது அரசியல் குழப்பம்…
மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி அமைவது உறுதியாகி உள்ளது. இக்கட்சிகள் நாளை ஆட்சியமைக்க உரிமை கோர வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிபெரும்பான்மை கிடைக்காததால் ஆட்சியமைப்பதில் தொடர்ந்து இழுபறி நிலவியது. இதையடுத்து ஆளுநரின் பரிந்துரையை ஏற்று, அந்த மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை மத்திய அரசு அமல்படுத்தியது. இதனிடையே, பாஜகவுடனான கருத்து வேறுபாட்டால் அக்கட்சியுடனான கூட்டணியை முறித்துக் கொண்ட சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸுடன் சேர்ந்து ஆட்சியமைக்கும் முயற்சியில் ஈடுபட்டது. 3 ... Read More »
வைகையாற்று நீரை சாத்தியார் அணைக்கு கொண்டுவர கோரிக்கை
மதுரை வைகையாற்றில் கரைபுரண்டு ஓடும் தண்ணீரை பாலமேடு சாத்தியார் அணைக்கு குழாய் மூலம் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. வாடிப்பட்டி – பாலமேடு சாலையில் அமைந்துள்ள சாத்தியார் அணைக்கு திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையில் பொழியும் மழை நீர் மட்டுமே நீராதாரமாக இருக்கிறது. 8 ஆண்டுகளாக வறண்டு கிடந்த இந்த அணை கடந்த ஆண்டு கஜா புயலின் போது பெய்த மழையில் நிரம்பியதாகக் கூறப்படுகிறது. தற்போது குட்டை போல் காட்சியளித்து வரும் சாத்தியார் அணையை முறையாக தூர்வாரி, வைகையாற்றில் கரைபுரண்டு ஓடும் ... Read More »
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பரவலாக மழை
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று அதிகாலை பரவலாக மழை பெய்துள்ளது. கிண்டி, ராயப்பேட்டை, கோயம்பேடு, மடிப்பாக்கம், வேளச்சேரி, குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்ததால் தெருக்களில் மழைநீர் தேங்கியது. திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். இதனிடையே, வெப்பச் சலனம் மற்றும் லேசான காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் ஆகிய 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது. Read More »
தமிழகத்தில் தேவைக்கு அதிகமாகவே மின்சாரம் உள்ளது – அமைச்சர் தங்கமணி
தமிழகத்தில் தேவைக்கு அதிகமாகவே மின்சாரம் இருக்கிறது என்றும் மின்வெட்டு என்ற பிரச்சனையே இருக்காது என்றும் அமைச்சர் தங்கமணி கூறினார். ஈரோடு மாவட்டம் பாசூர் பாலத்தில் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகளை பார்வையிட்ட அமைச்சர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். கடந்த ஆண்டு கோடையில் 16 ஆயிரத்து 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியானது என்றும் இந்த ஆண்டு அது 17 ஆயிரத்து 500 மெகாவாட்டாக இருக்கும் என எதிர்பார்ப்பதாகவும் கூறினார். Read More »
தமிழகத்தில் மேலும் 3 மருத்துவக் கல்லூரிகள் தொடங்க அரசு விண்ணப்பம்: அமைச்சர் விஜயபாஸ்கர்
தமிழகத்தில் மேலும் 3 மருத்துவக் கல்லூரிகள் தொடங்க அனுமதி கோரி அரசு விண்ணப்பித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை அரசு பன்னோக்கு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற நிழ்ச்சியில், அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு, முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிறப்பாக செயல்பட்ட, நூற்றிற்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகளுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் புதிதாக அமையவுள்ள 6 புதிய மருத்துவ கல்லூரிகள் கட்டும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாகவும், கிருஷ்ணகிரி , நாகப்பட்டினம் , திருவள்ளூர் ... Read More »