டெல்லியில், 43 பேரை காவு கொண்ட கொடூர தீ விபத்துக்கு பின்னர், முறையான அனுமதியின்றி இயங்கும் தொழிலகங்களுக்கு சீல் வைக்கும் நடவடிக்கைகளை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர். அனாஜ் மண்டியில், குறுகலான பகுதிகளில் உள்ள தொழிலகங்களில், தொழிற்துறை, தீயணைப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறையினர், சோதனைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். முறையான அனுமதி பெறாத தங்கள் தொழிலகங்களுக்கு சீல் வைக்கப்படலாம் என்ற அச்சத்தில், அவற்றின் உரிமையாளர்கள், முன்னறிவிப்பின்றி மூடியுள்ளனர். இதனால், வேலையிழந்து தவிப்பதாக, தொழிலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். Read More »
Author Archives: admin
நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4 பேரும் திகார் சிறைக்கு மாற்றம்
நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 4 பேரும் டெல்லி திகார் சிறைக்கு மாற்றப்பட்டனர். இதையடுத்து எந்நேரமும் அவர்களுக்கு தண்டனை நிறைவேற்றப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. டெல்லியில் 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற, நிர்பயா கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பான வழக்கில் பவன்குமார் குப்தா, முகேஷ் சிங், வினய் ஷர்மா, அக்சய் ஆகியோருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதில் வினய் ஷர்மா என்பவன் மட்டும் கருணை கோரி, குடியரசுத் தலைவரிடம் மனு அளித்தான். அதை குடியரசுத் தலைவர் நிராகரித்து விட்டார். ... Read More »
பாஜக அரசின் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு சிவசேனா ஆதரவு
குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கும் நிலையில், அக்கட்சியின் புதிய கூட்டாளியான சிவசேனா ஆதரித்து வாக்களித்திருக்கிறது. அண்மையில், பாஜகவுடனான கூட்டணியிலிருந்து விலகிய சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரசோடு இணைந்து, மகாராஷ்டிராவில் கூட்டணி ஆட்சி அமைத்தது. இந்நிலையில், குடியுரிமை சட்டத்திருத்த மசோதா, மக்களவையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது, 18 உறுப்பினர்களை கொண்ட சிவசேனா, ஆதரவு தெரிவித்து வாக்களித்தது. சட்டவிரோதமாக குடியேறியவர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டு, மண்ணின் மைந்தர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்ற, பால் தாக்கரேவின் கனவை நிறைவேற்றும் வகையிலேயே, மசோதாவை ஆதரித்திருப்பதாக, சிவசேனா ... Read More »
குடியுரிமை மசோதாவிற்கு எதிர்ப்பு.. தீவிரமடையும் போராட்டங்கள்..!
குடியுரிமை மசோதாவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து, வடகிழக்கு மாநிலங்களில், போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. அசாமில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 1955ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்து, மக்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்ட மசோதாவிற்கு, எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. குறிப்பாக, அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில், போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அசாம் உள்ளிட்ட மாநிலங்களில், வடகிழக்கு மாணவர்கள் கூட்டமைப்பு, 12 மணி நேர முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருக்கிறது. இதனால், அசாம் மாநிலத்தின் குவஹாத்தி (Guwahati), திப்ருகார்(Dibrugarh) உள்ளிட்ட இடங்களில், கடைகள், ... Read More »
மேட்டுப்பாளையம்-குன்னூர் மலை ரயில் சேவை மீண்டும் தொடக்கம்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் – குன்னூர் இடையேயான மலை ரயில் சேவை ஒரு வாரத்திற்கு பின் இன்று மீண்டும் துவங்கியது. கடந்த வாரம் பெய்த கன மழையால், மலை ரயில் செல்லும் ஹில்குரோவ் – அடர்லி ரயில் நிலையங்களுக்கிடையே மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்தன. இதனால் கடந்த ஒருவாரமாக ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டிருந்தது. பின்னர் சீரமைப்புப் பணிகள் தொடர்ந்த நிலையில் சேதமடைந்த பகுதிகளில், புதிய தண்டவாளம் பொருத்தப்பட்டு பணிகள் நிறைவுற்றது. இதையடுத்து மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு இன்று காலை 7.15 மணிக்கு ... Read More »
இந்திய வம்சாவெளியை சேர்ந்த 19 வயது இளம்பெண் கொடூரமாக கொலை
இந்திய வம்சாவெளியை சேர்ந்த 19 வயது மாணவி, அமெரிக்காவில் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத்தை பூர்வீகமாக கொண்ட இளம் பெண், சிகாகோ இல்லினாய்ஸ் பல்கலைகழகத்தில் மருத்துவத்துறையில் இளங்கலை பயின்று வந்தார். இதனிடையே தனது மகளை காணவில்லை என்று கடந்த சனிக்கிழமை அவரது பெற்றோர்கள் அளித்த புகாரின்பேரில், போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பல்கலைகழக வளாகத்தில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் அவரது காரின் பின் இருக்கையில் அந்த மாணவி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பிரேத பரிசோதனையில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ... Read More »
பாதுகாப்பு படையினர் என்கவுன்ட்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் நடைபெற்ற என்கவுன்ட்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். டிராப்கம் Drabgam என்ற பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக வந்த தகவலை அடுத்து, பாதுகாப்பு படையினர் நேற்று அப்பகுதியை சுற்றி வளைத்தனர். தீவிரவாதிகள், பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதைத் தொடர்ந்து இருதரப்புக்கும் இடையே சண்டை மூண்டது. இதில், இர்ஃபான் அகமது ரத்தர், இர்ஃபான் ஷேக் ஆகிய 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகள் வசமிருந்த ஏராளமான ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. இந்த இருவரும் மிகவும் ஆபத்தான, தேடப்பட்டு வந்த ஹிஸ்புல் முஜாகிதீன் ... Read More »
ரூ.20,000க்கு விற்கப்பட்ட பெண் குழந்தையை ஒரு மணி நேரத்தில் மீட்ட அரசு அலுவலர்கள்
சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அருகே, பிறந்து சில நாட்களில், 20 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்ட பெண் குழந்தை, அரசு அலுவலர்களால், ஒரு மணி நேரத்தில் மீட்கப்பட்டது. இந்த குழந்தையை பெற்றெடுத்த தம்பதிக்கு ஏற்கனவே, இரண்டு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளன. 4ஆவதாக, பிறந்த பெண் குழந்தையை வளர்க்க முடியாமல், டேனிஷ்பேட்டையைச் சேர்ந்த 15 ஆண்டுகளாக குழந்தைபேறு இல்லாத தம்பதிக்கு 20 ஆயிரம் ரூபாய்க்கு விற்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதையறிந்த கிராம நிர்வாக அலுவலர், அந்த தம்பதியை அழைத்து ஒரு மணி நேரத்தில் குழந்தையை ... Read More »
கார்ட்டோசாட் 3 செயற்கைக்கோள் நாளை விண்ணில் ஏவப்படுகிறது-இஸ்ரோ சிவன்
கார்ட்டோசாட் 3 செயற்கைக்கோளை சுமந்து செல்லும் பிஎஸ்எல்வி சி-47 ராக்கெட்டை நாளை காலை 9.28 மணிக்கு விண்ணில் ஏவப்படுவதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இஸ்ரோ தலைவர் சிவன் இன்று காலை சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கார்ட்டோசாட் 3 செயற்கைக்கோளும், அமெரிக்காவை சேர்ந்த 13 நானோ செயற்கைக்கோள்களும் நாளை காலை 9.28 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளதாக தெரிவித்தார். ஸ்ரீஹரிகோட்டாவில் இதற்கான 26 மணி நேர கவுன்ட்-டவுன் இன்று காலை 7.28 மணிக்கு தொடங்கி ... Read More »
மறைமுக தேர்தல் தொடர்பான அவசர சட்டத்தை செல்லாது என அறிவிக்கக் கோரி மனு
மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு நேரடி தேர்தலுக்கு பதிலாக மறைமுக தேர்தல் நடைபெறும் என தமிழக அரசு பிறப்பித்த அவசர சட்டத்தை செல்லாது என அறிவிக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முகமது ரஸ்வி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி மக்கள் பிரதிநிதிகள், மக்களால் நேரடியாகத் தேர்வு செய்யப்படும்போது தான் இணக்கமான சூழல் ஏற்படும் என்றும், அதுவே கவுன்சிலர்கள் சேர்ந்து தேர்வு செய்யும் நபர்களுக்கும், மக்களுக்கும் நேரடித் தொடர்பு இருக்காது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ... Read More »