Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
admin | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News | Page 21
Saturday , 24 September 2022
Home » Author Archives: admin (page 21)

Author Archives: admin

குட்டியை ஏற்க மறுத்த பன்றி குடும்பத்தைச் சேர்ந்த தபீர்

கொலம்பிய விலங்கியல் பூங்காவில் தாயால் கைவிடப்பட்ட தபீர் எனப்படும் பன்றிக் குடும்பத்தைச் சேர்ந்த குட்டியை ஊழியர்கள் வெற்றிகரமாக வளர்த்து வருகின்றனர். லாஸ் ஆகாரஸ் விலங்கியல் பூங்காவில் கடந்த மாதம் தபீர் எனப்படும் பன்றி ஒன்று குட்டியை ஈன்றது. ஆனால் அந்தக் குட்டிக்கு பால் கொடுக்க மறுத்ததுடன் அருகில் சேர்த்துக் கொள்ளவும் தாய் ஒப்பவில்லை. இதனைக் கண்ட விலங்கியல் பூங்கா ஊழியர்கள் பழங்கள் மற்றும் சத்தான உணவுப் பொருட்களைக் கொடுத்து குட்டி தபீரைக் காப்பாற்றினர். தற்போது குட்டி தபீர் ஆரோக்கியத்துடனும், சுறுசுறுப்புடனும் இருப்பதாகவும், அதனை தாயுடன் ... Read More »

காரை மட்டும் சுற்றிச் சுற்றி வந்த செம்மறிக் கூட்டம்

ஒரே இடத்தைச் சுற்றிச் சுற்றி வருவதற்கு தாங்களே மிகச் சிறந்த உதாரணம் என்பதற்கு செம்மறி ஆட்டுக் கூட்டம் மீண்டும் நிரூபித்துள்ளது. நேபாளத்தில் டோல்பா என்ற இடத்தில் பெண்மணி ஒருவர் 50க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை மேய்ச்சலுக்காகக் கொண்டு சென்றார். அப்போது சாலையில் நின்ற கார் ஒன்று செம்மறிக் கூட்டத்தை மறைக்கவே, வழி தெரியாமல் முன்னே சென்ற ஆடுகள் தாங்களாகவே காருக்குப் பின்னால் சென்றன. அதனைப் பார்த்து பின்னால் வந்த ஆடுகளும் அதேபோல் பயணிக்க, அனைத்து ஆடுகளும் காரையே சுற்றிச் சுற்றி வந்தன. இதனைக் கண்ட ... Read More »

சீனாவில் அறிமுகமானது 5ஜி இணையசேவை..

இணையத்தின் தற்போதைய அதிவேகமாகக் கருதப்படும் 5 ஜி தொழில்நுட்பம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சீனா மொபைல்ஸ், சீனா டெலிகாம் மற்றும் சீனா யுனிகாம் ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளன. இதற்கு குறைந்தபட்ச மாதாந்திரக் கட்டணமாக இந்திய மதிப்பில் சுமார் ஆயிரத்து 272 ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சக் கட்டணமான 6 ஆயிரம் ரூபாய் செலுத்துவோருக்கு ஒரு நொடிக்கு ஒரு ஜி.பி என்ற வேகத்தில் 300 ஜி.பி. டேட்டாவைப் பெற முடியும். பெய்ஜிங், ஷாங்காய் போன்ற முதல் தர நகரங்கள், வூகான், நஞ்சிங் ... Read More »

இம்ரான் கான் பதவிவிலகக் கோரி ஆசாதி பேரணி-போராட்டம்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இரண்டே நாட்களில் பதவி விலக வேண்டும் என அந்நாட்டு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. கராச்சியில் இருந்து பல்லாயிரக்கணக்கானோருடன் புறப்பட்ட விடுதலைப் பேரணி நேற்று இஸ்லாமாபாத்தில் நிறைவடைந்தது. இம்ரான் கானின் போலியான அரசு விலக வேண்டும் என வலியுறுத்தி போராட்டக்காரர்கள் கோஷம் எழுப்பினர். கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கள்ள ஓட்டுகள் மூலம் இம்ரான் கான் ஆட்சியைப் பிடித்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. பாகிஸ்தானின் பொருளாதார நிலைமை மிகவும் கவலையளிப்பதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்கள், வாய்ப்பளித்தால் ஆறு வாரங்களுக்குள் அதனை சீரமைக்க தங்களால் ... Read More »

லாரி மீது பேருந்து மோதல்… நடத்துநர் பலி, ஓட்டுநர் உள்ளிட்ட 13 பேர் காயம்…

சென்னையில் பாடி அருகே, சாலையில் முன்னால் சென்ற கண்டெய்னர் லாரி மீது, அரசுப் பேருந்து மோதியதில் பேருந்தின் நடத்துனர் உயிரிழந்தார். ஒட்டுனர் உள்ளிட்ட 13 பேர் காயமடைந்தனர். இன்று அதிகாலை தாதான்குப்பம் ரயில்வே மேம்பால சாலையில் பாடி நோக்கி சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது, பின்னால் வந்த அரசுப் பேருந்து மோதியுள்ளது. இதில் பேருந்தின் முன்பக்கம் சிதைந்து பலத்த சேதம் ஏற்பட்டது. நடத்துனர் வீரமுத்து என்பருக்கு தலை மற்றும் மார்பில் காயம் ஏற்பட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். ... Read More »

மதம் மாறி 2 பெண்களை திருமணம் செய்த என்ஜினீயர் கைது

முதல் மனைவியை ஏமாற்றி விட்டு 2-வது திருமணம் செய்த குமரி என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர். இவர் 2 பெண்களையும் மணப்பதற்காக கிறிஸ்தவ, முஸ்லிம் மதங்களுக்கு மாறியதாக தகவல் வெளியாகி உள்ளது. குமரி மாவட்டம் செண்பகராமன்புதூரை சேர்ந்தவர் தங்க பொன்சன் (வயது 36). மும்பையில் உள்ள ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் என்ஜினீயராக பணிபுரிந்தார். மும்பையை சேர்ந்தவர் பாத்திமா (39). விபத்தில் கணவரை பறிகொடுத்தவர். தாயுடன் வசித்து வந்த பாத்திமாவுடன் தங்க பொன்சன், நெருங்கி பழக தொடங்கினார். கடந்த 2010-ம் ஆண்டு தங்க பொன்சனுக்கும், பாத்திமாவுக்கும் ... Read More »

டெல்லி விமான நிலையத்தில் வெடிபொருள் கண்டெடுக்கப்பட்டதாக வந்த செய்தி தவறானது

டெல்லி விமான நிலையத்தில் கைவிடப்பட்ட நிலையில் கிடந்த பையிலிருந்து ஆர்.டி.எக்ஸ் வெடிபொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக வெளியான செய்தி உண்மையில்லை என விமான நிலைய துணை காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். மேலும் பையின் உரிமையாளரை கண்டுபிடித்து விட்டதாகவும், ஹரியானாவை சேர்ந்த ஷாகித் கான் என்ற அவர் மும்பையிலிருந்து தனது நண்பர்களுடன் டெல்லி வந்த போது 3வது டெர்மினல் பகுதியில் தனது பையை தவறவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அந்தப் பையில் பொம்மைகள், சாக்லேட்கள் மற்றும் சார்ஜர்கள் இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. அதிலிருந்த சார்ஜர் ஒயர்களை பார்த்து சந்தேகத்தின் பேரில் சோதித்து ... Read More »

சிவசேனா – பாஜக தொடர்ந்து பிடிவாதம்…நீடிக்கும் இழுபறி

சிவசேனா ஆட்சி அமைக்க காங்கிரஸ் எந்த வகையிலும் ஆதரவு அளிக்காது என, மகாராஷ்டிர மாநில மூத்த தலைவர்களிடம் சோனியா திட்டவட்டமாக தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மகாராஷ்டிராவில், மொத்தமுள்ள 288 தொகுதிகளில், பெரும்பான்மைக்கு 145 இடங்கள் தேவைப்படும் நிலையில், பாஜக, சிவசேனா கூட்டணி 161 இடங்களை தனதாக்கியது. சுழற்சி முறையில் முதலமைச்சர் பதவி., அமைச்சரவையில், பாதிக்குப் பாதி என்ற அடிப்படையில் முக்கிய துறைகளை ஒதுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை சிவசேனா வலியுறுத்தி வருகிறது. சிவசேனாவுக்கு, அமைச்சரவையில் முக்கிய இடம் உண்டு என்றும் சுழற்சி முறையில் ... Read More »

கமலேஷ் திவாரி கொலை வழக்கில் முக்கிய நபர் கைது

இந்துசமாஜ் கட்சியின் தலைவர் கமலேஷ் திவாரி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலையாளிகள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் அவர்களுக்கு துப்பாக்கி வழங்கிய யூசுப் கான் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். கான்புர் காவல்துறையினர் மற்றும் குஜராத் தீவிரவாதத் தடுப்பு பிரிவினர் சேர்ந்து எடுத்த அதிரடி நடவடிக்கையில் கொலையாளிகளுக்கு ஆயுதம் வழங்கியதாக 24 வயது இளைஞர் கான்புரில் கைது செய்யப்பட்டார்.அவரிடமிருந்து இரண்டு செல்போன்கள் பறிமுதஸ் செய்யப்பட்டன. Read More »

ரிங்டோன் நேரம் 30 வினாடிகளாக இருக்க வேண்டும்

செல்போன் அழைப்புமணி 30 வினாடிகள் ஒலிக்க வேண்டும் என தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் உத்தரவிட்டுள்ளது. செல்போனில் ஒருவர் அழைக்கும்போது 30 வினாடிகளுக்குள் அழைப்புமணி நின்றுவிடுவதாக புகார் எழுந்தது. இதனால் ஏர்டெல், வோடபோன் ஐடியா உள்ளிட்ட நிறுவனங்கள் பலனடைந்து வருவதாக ஜியோ நிறுவனம் குற்றம் சாட்டியிருந்தது. இந்நிலையில், தரைவழி தொலைபேசி மற்றும் செல்போன் சேவைகள் தொடர்பான சட்டத்தில் புதிய திருத்தங்களை டிராய் நிறுவனம் மேற்கொண்டது. அந்தத் திருத்தங்களின்படி, செல்போனில் அழைப்பு மணி ஒலிக்கும் நேரம் 30 வினாடிகளாக இருக்க வேண்டுமெனவும், தொலைபேசி அழைப்பு ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com