Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
admin | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News | Page 19
Saturday , 24 September 2022
Home » Author Archives: admin (page 19)

Author Archives: admin

பவானிசாகர் அணை எந்நேரமும் நிரம்பும் என்பதால் உபரி நீர் திறக்கப்படும் என அறிவிப்பு

பவானிசாகர் அணை எந்நேரமும் நிரம்பும் என்பதால் உபரி நீர் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 105 அடி உயரமும் 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்ட பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 57 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இன்று காலை நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3028 கனஅடியாகவும், நீர் இருப்பு 32.4 டிஎம்சி ஆகவும் நீர்மட்டம் 104.54 அடியாகவும் இருந்தது. அணையிலிருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக பவானி ஆறு மற்றும் ... Read More »

பெண்ணாக பிறந்ததால் 15 நாள் ஆன குழந்தையை கொன்று ஆற்றில் புதைத்த தந்தை

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே பிறந்து 15 நாளேயான பெண் குழந்தையை கொன்று ஆற்றில் புதைத்ததாக தந்தை கைது செய்யப்பட்டார். திருக்கோவிலூர் அருகே உள்ள சுந்தரேசபுரத்தைச் சேர்ந்தவன் வரதராஜன். இவனது மனைவி சவுந்தர்யா. இவர்களுக்கு திருமணமாகி 15 மாதங்கள் ஆன நிலையில், கடந்த 15 நாட்களுக்கு முன்பு குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் திடீர் என்று குழந்தை காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்த சவுந்தர்யா உறவினர்களுடன் தேடியுள்ளார். அப்போது அருகில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் பள்ளம் ஒன்றில் சந்தேகப்பட்டு மண்ணை தோண்டிய போது, துணியால் சுற்றப்பட்ட ... Read More »

காவல்துறையின் செரிமனி பரேட் நிகழ்ச்சி

காவல்துறையின் செரிமனி பரேட் மற்றும் பயிற்சி காவலர்களுக்கான நினைவூட்டல் பயிற்சி கோவை காவல் பயிற்சி பள்ளியில் நடைபெற்றது. ஆண்டுதோறும் காவல்துறையினரின் வாகனங்களை ஆய்வு செய்வதற்கென செரிமனி பரேட் நடத்தப்படுகிறது. அந்தவகையில் கோவை காவல் பயிற்சி பள்ளியில் இன்று நடைபெற்ற செரிமனி பரேட் நிகழ்ச்சியில், கோவை காவல் ஆணையர் சுமித் சரண் கலந்து கொண்டு, காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் கோவை மாநகர காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஆயுதப்படை மற்றும் அதிரடிப்படை வாகனங்களை ஆய்வு செய்து, வாகனங்களின் பராமரிப்பு, திறன் மற்றும் அதன் ஓட்டுனர்களின் ... Read More »

ராஜராஜ சோழனின் 1034ஆம் ஆண்டு சதய விழா

தஞ்சையை ஆண்ட மாமன்னன் ராஜராஜ சோழன் 1034ம் ஆண்டு சதய விழாவையொட்டி தஞ்சை நகரம் மற்றும் பெரியக்கோவில் ஆகியவை வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழா கோலம் பூண்டுள்ளது. ராஜராஜ சோழன் பிறந்த நாள் அரசு சார்பில் ஆண்டு தோறும் சதய விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் படி 1034ம் ஆண்டு சதய விழா இன்று மங்கல இசையுடன் தொடங்குகிறது.இதனையொட்டி பெரியக்கோவில் மற்றும் தஞ்சை நகர் முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. மேலும் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா மற்றும் ... Read More »

காட்டு யானைகளை கண்டு வாகன ஓட்டிகள் அச்சம் – பீதி

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேரத்தில் சாலையில் சுற்றித்திரியும் யானைகளால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். தமிழக – கர்நாடக எல்லையில் உள்ள சுவர்ணவதி அணை அருகே நேற்றிரவு 2 காட்டு யானைகள் சாலையின் நடுவே நடந்து சென்று கரும்புத் துண்டுகளை தேடின. பின்னர் அந்த யானைகள் சாலையோர வனப்பகுதிக்கு சென்றபின் வாகனங்கள் புறப்பட்டு சென்றன.மைசூரில் இருந்து லாரிகளில் ஏற்றிவரும் கரும்புத் துண்டுகள் ஆங்காங்கே சாலையில் சிதறி விழுவதால் அவற்றை தின்பதற்காக காட்டு யானைகள் அடிக்கடி சாலைகளில் நடமாடுகின்றன. Read More »

சசிகலாவின் ரூ.1600 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கம்

சசிகலாவுக்கு சொந்தமானது எனக் கூறப்படும் ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை, பினாமி பரிவர்த்தனைகள் தடைச் சட்டத்தின் கீழ் முடக்கியுள்ளதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முடக்கப்பட்டுள்ள சொத்துகள் 2016ஆம் ஆண்டு நவம்பர்8ஆம் தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதற்குப் பிறகு வாங்கப்பட்டவை என கூறப்படுகிறது. பினாமி பெயர்களில் இந்த சொத்துகளை சசிகலா வாங்கியதாக சொல்லப்படுகிறது. கடந்த 2017ஆம் ஆண்டு நவம்பரில் ஆப்பரேசன் கிளீன் மணி என்ற பெயரில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையின்போது இந்த முறைகேடு கண்டறியப்பட்டுள்ளது. அப்போது சசிகலா மற்றும் அவரது ... Read More »

அடுத்த 2 நாட்களுக்கு தென்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

வெப்பசலனம் காரணமாக அடுத்த இரு நாட்களுக்கு தென்மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாகவும், இரண்டு மூன்று நாட்களில் மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அது மாறும் என்றும் வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர். அரபிக் கடலில் அதிதீவிர புயலாக மாறிய மஹா புயல் நாளை இரவு அல்லது 7ஆம் தேதி அதிகாலை குஜராத் அருகே கரை ... Read More »

வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை – வியாபாரிகளுக்கு எச்சரிக்கை

வெங்காய விலை உயர்வு கட்டுக்குள் கொண்டுவரப்படும் என்றும், வியாபாரிகள் அதிகமாக கையிருப்பு வைத்திருந்தாலோ, அதிக விலைக்கு விற்றாலோ நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தொடர் மழை காரணமாக திண்டுக்கல், திருச்சி, கரூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் சின்ன வெங்காயம் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வரத்து குறைந்து கடந்த வாரம் கிலோ 60 ரூபாய்க்கு விற்கப்பட்ட சின்ன வெங்காயம் 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் அதிக மழை பெய்ததால் அங்கிருந்து விற்பனைக்கு வரும் பெரிய வெங்காயம் ... Read More »

மஹா’ புயல் வருகிற 6ந் தேதி குஜராத்தில் கரையைக் கடக்கும்

அரபிக் கடலில் உருவான “மஹா” புயல் அதிதீவிர புயலாக மாறி, வரும் 6-ம் தேதி குஜராத் மாநிலம் துவாரகா அருகே கரையைக் கடக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகம், வடதமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More »

இந்திய ராணுவத்திற்கு தேர்வான கல்லூரி மாணவி

வடகர்நாடகாவில் இருந்து இந்திய ராணுவத்திற்கு கல்லூரி மாணவி பீமக்க சவ்கானா தேர்வாகி உள்ளார். தேர்வில் பங்கேற்ற பெண்களில் இவர் ஒருவர் மட்டுமே வெற்றிபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அனைத்து துறைகளிலும் பெண்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்தி வருகிறார்கள். அதேபோல ராணுவத்திலும் சேர்ந்து பெண்கள் தாங்கள் ஆண்களுக்கு நிகரானவர்கள் என்பதை உலகிற்கு நிரூபித்து வருகிறார்கள். தார்வார் மாவட்டம் மடிக்கோப்பா கிராமத்தை சேர்ந்தவர் பீமக்க சவ்கானா(வயது 18). இவர் அப்பகுதியில் உள்ள கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கு சிறுவயதில் இருந்தே ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்காக சேவை ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com