நியூசிலாந்து அணியுடனான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஸ்மித்தின் சாதனை சதத்தால் ஆஸ்திரேலிய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. சிட்னியில் நடைபெற்ற முதலாவது ஒரு நாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 324 ரன்கள் குவித்தது.அந்த அணியில் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் அதிகபட்சமாக 164 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.இந்தப்போட்டியில் ஸ்மித் 14பவுண்டரிகள் 4 சிக்ஸர்கள் விளாசினார்.சிட்னி மைதானத்தில்164 ரன்கள் குவித்ததன் மூலம் முன்னாள் கேப்டன் ரிக்கிபாண்டிங்கின் சாதனையை சமன் செயதார்.
பின்னர் 325 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நியூசிலாந்து அணி. ஆஸ்திரேலிய வீரர்களின் அபாரமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்து திணறியது. அந்த அணியில் மார்டின் கப்தில் அதிகபட்சமாக 114 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். முடிவில் நியூசிலாந்து 45 ஓவர்களில் 256 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலிய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.