இந்திய அணியின் நட்சத்திர வீரர் வீராட் கோலி. பேட்டிங்கில் ரன் எந்திரம் போல் செயல்படுகிறார் என்று அவரை பலர் பாராட்டுகிறார்கள்.தனது அதிரடி ஆட்டம் மூலம் பல முன்னாள் வீரர்கள், இன்னாள் வீரர்களை அசர வைத்த அவர் தற்போது தனது செயலால் முகம் சுளிக்க வைத்துவிட்டார்.பெர்த் நகரில் பயிற்சி முடிந்து திரும்பியபோது ஆங்கில பத்திரிக்கை நிரூபரை தகாத வார்த்தையால் திட்டினார். தனது காதலியான நடிகை அனுஷ்கா சர்மா பற்றி அந்த பத்திரிக்கையில் வெளியான கட்டுரையால் அவ்வாறு நடந்து கொண்டார். இதையடுத்து அவரை இந்திய கிரிக்கெட் வாரியம் எச்சரித்து உள்ளது.இந்த நிலையில் வீராட் கோலிக்கு முன்னாள் இந்திய அணி கேப்டன் சுனில் கவாஸ்கர் அறிவுரை கூறியுள்ளார். அவர் கூறியதாவது:–நெருக்கடியான சூழ்நிலையின் போது பொறுமையாக நடந்து கொள்ள வேண்டும். டோனி, லட்சுமணன் போன்றோர் போல் இருக்க வேண்டும். பத்திரிக்கை, மீடியா முக்கிய பங்கு வகிக்கின்றன. கிரிக்கெட் முன்னேற வீரர்கள், மீடியா, ரசிகர்கள், ஸ்பான்சர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.