Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
விளையாட்டு | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News | Page 9
Thursday , 7 July 2022
Home » விளையாட்டுpage 9

விளையாட்டு

3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ; டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வுசெய்தது இந்திய அணி

இலங்கைக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. இலங்கைக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா அபார வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ள நிலையில், மூன்றாவது மற்றும் கடைசி போட்டி பல்லேகெலேவில் ((pallekele)) தொடங்கியுள்ளது. இதில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகார் தவான், லோகேஷ் ராகுல் ஆகியோர் களமிறங்கினர். இந்தப் போட்டியில் ரவீந்திர ஜடேஜா விளையாட ஐ.சி.சி. தடை விதித்துள்ளதால் ... Read More »

இந்திய அணி கிரிக்கெட் வீரர்கள் என்னுடன் தொடர்பில்தான் இருக்கிறார்கள் ; ஸ்ரீசாந்த்

இந்திய கிரிக்கெட் வாரியம் விளையாட அனுமதி தந்தால் சென்னையில் எனது கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்குவேன் என்று வேகப் பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் கூறியுள்ளார். சூதாட்ட புகாரில் சிக்கிய இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்துக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் விதித்த ஆயுட்கால தடையை கேரள உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இதையடுத்து இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அனுமதிக்காகக் காத்திருக்கும் ஸ்ரீசாந்த் கூறும்போது, ’வாரியத்தின் அனுமதிக்காகக் காத்திருக்கிறேன். அது கிடைத்துவிட்டால் அடுத்த மாதம் சென்னையில் தொடங்கும் புச்சிபாபு கிரிக்கெட் போட்டியில் விளையாடுவேன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நான் ஆடும் முதல் ... Read More »

கோலிக்கு பதிலாக புதிய கேப்டன் ; கிரிக்கெட் வாரியம் திடீர் முடிவு !!

இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டி தொடரில் இருந்து கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு புதிய அணித்தலைவர் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 12 மாதத்தில் இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் உட்பட இந்திய கிரிக்கெட் அணி, 43 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் ஓய்வில்லாமல் விளையாடி வரும் வீராத் கோலிக்கு ஓய்வளிக்க கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு புதிய கேப்டன் நியமிக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ... Read More »

கட்ட துறைக்கு கட்டம் சரியாக இருக்குமா ?…குல்தீப்புக்கு கிடைத்த வாய்ப்பு…

இலங்கையுடனான அடுத்த டெஸ்ட் போட்டியில் ’சைனாமேன்’ வகை பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் களமிறங்குவார் என்று தெரிகிறது. இலங்கையில் இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 2 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ள நிலையில் 3-வது போட்டி, 12-ம் தேதி கண்டியில் தொடங்குகிறது. ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட ரவீந்திர ஜடேஜாவுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் ’சைனாமேன்’ வகை பந்துவீச்சாளரான குல்தீப் யாதவ் இதில் இடம்பெறுவார் என தெரிகிறது. கடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மைதானத்தில் நின்ற வீர்ர்களுக்கு கூல் ... Read More »

ஜடேஜாவுக்கு விளையாட தடை ; இந்திய அணி வருத்தம்…

இலங்கை அணியுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாட ரவீந்திர ஜடேஜாவுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இன்றுடன் முடிவடைந்த கொழும்பு டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 53 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு ஜடேஜா 5 விக்கெட்டுக்கள் வீழ்த்தி உறுதுணையாக இருந்தார். இதனால் அவருக்கு ஆட்ட நாயகன் விருது கிடைத்தது. Ads by Datawrkz போட்டியின்போது ஜடேஜா நடத்தை விதிமுறைகளை மீறியதால் போட்டிக்காக வழங்கப்படும் ஊதியத்தில் ... Read More »

தொடர்ந்து 8 தொடர்களை வென்று இந்திய அணி சாதனை…

இந்திய அணி, தொடர்ந்து 8 தொடர்களை வென்று சாதனை படைத்துள்ளதை அடுத்து கேப்டன் விராத் கோலிக்கு பாராட்டுகள் குவிகிறது. இலங்கை அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று, இந்திய அணி தொடரை கைப்பற்றியது. கொழும்பில் நடைபெற்ற இந்த டெஸ்ட்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 53 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை ஈட்டியது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 622 ரன்களும்‌ இலங்கை அணி 183 ரன்களும் எடுத்தன. ஃபாலோ ஆன் பெற்று இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இலங்கை அணி மூன்றாவது நாள் ... Read More »

ஞாபகம் வருதே …கோஹ்லிக்கு புகழாரம் சூட்டும் அரவிந்த டி சில்வா !!

கோலியின் ஆக்ரோஷமான ஆட்டம் மேற்கிந்திய தீவுகளின் முன்னாள் வீரர் விவியன் ரிச்சர்ட்சை ஞாபகப்படுத்துகிறது என்று இலங்கை அணியின் முன்னாள் வீரர் அரவிந்த டி சில்வா தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறும்போது, ‘இந்திய கிரிக்கெட்டின் வண்ணத்தை மாற்றியவர்கள் சுனில் கவாஸ்கர், கபில் தேவ், சச்சின் டெண்டுல்கர். ஆனால் கோலி இந்திய கிரிக்கெட் அணியை வேறு லெவலுக்கு கொண்டு சென்றிருக்கிறார். அவர் அணியை வழி நடத்தும் விதம், அவரது நம்பிக்கை, ஆக்ரோஷம் ஆகியவற்றைப் பார்க்கும்போது, எனக்கு முன்னாள் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்சை ஞாபகப்படுத்துகிறது. டெஸ்ட் போட்டியில் இலங்கை ... Read More »

மல்யுத்த வீரர் ‘காளீ ‘யை சந்தித்தார் ‘விராத் கோலி’…

இந்திய மல்யுத்த வீரர் காளீ என்கிற தலீப் சிங் ராணாவை, நண்பர்கள் தினத்தன்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி சந்தித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துவருகிறது. இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் வென்று நேற்று சாதனை படைத்தது இந்திய கிரிக்கெட் அணி. போட்டி விரைவில் முடிந்துவிட்டதால் அறைக்கு திரும்பிய கோலி, இந்திய மல்யுத்த வீரர் காளீயை சந்தித்துள்ளார். நண்பர்கள் தினமான நேற்று அவரை சந்தித்த கோலி, டெஸ்டாரெண்டில் அவருடன் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். மற்றொரு படத்தில் ஏழு ... Read More »

ஹாக்கி வீராங்கனை ரயில்முன் பாய்ந்து மரணம் ; கொலையா ? தற்கொலையா என பெற்றோர்கள் பேதலிப்பு …

ஹாக்கி வீராங்கனை, ரயில் தண்டவாளத்தில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஹாக்கி வீராங்கனை ஜோதி குப்தா (20). மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டுள்ள இவர், அடுத்த வாரம் பெங்களூரில் நடக்கும் பயிற்சியில் கலந்துகொள்ள இருந்தார். இவர் நேற்று முன்தினம், ’சர்டிபிகேட்டில் என் பெயரில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்கிறது. அதை திருத்துவதற்காக ரோட்டாக்கில் உள்ள மகரிஷி தயானந்த் பல்கலைக்கழகத்துக்கு செல்கிறேன்’ என்று வீட்டில் கூறிவிட்டு சென்றார். மாலையில் பெற்றோரை போனில் தொடர்பு கொண்ட ஜோதி, ’நான் வந்த பேரூந்து உடைந்துவிட்டது. ... Read More »

உலக சாம்பியன்ஷிப் தடகள போட்டியில் கலந்து கொள்ள இந்திய வீராங்கனை சித்ராவுக்கு அனுமதி மறுப்பு …

உலக சாம்பியன்ஷிப் தடகள போட்டியில் கலந்து கொள்ள இந்திய வீராங்கனை சித்ராவை அனுமதிக்குமாறு இந்திய தடகள சம்மேளனம் விடுத்த கோரிக்கையை, சர்வதேச தடகள சம்மேளனம் நிராகரித்தது. ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற போதும் உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கான அணியில் சித்ராவை , இந்திய தடகள சம்மேளனம் தேர்ந்தெடுக்கவில்லை. இது தொடர்பான வழக்கில் சித்ராவை உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க அனுமதிக்குமாறு கேரள உயர்நீதிமன்றம் தீர்பளித்தது. இதனைத்தொடர்ந்து, நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்துமாறு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயல் இந்திய தடகள சம்மேளனத்திற்கு அறிவுறுத்தினார். ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com