Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
விளையாட்டு | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News | Page 80
Thursday , 7 July 2022
Home » விளையாட்டுpage 80

விளையாட்டு

இந்திய ஓபன் பேட்மிண்டன் – சாய்னா கால் இறுதிக்கு தகுதி

‘சன்ரைஸ்’ இந்திய ஓபன் சூப்பர்சீரிஸ் பேட்மிண்டன் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டத்தில் இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் 21-16, 21-17 என்ற நேர்செட்டில் சக நாட்டு வீராங்கனை கானே ருத்விகா ஷிவானியை தோற்கடித்து கால் இறுதிக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீராங்கனை ரியா பிள்ளை 6-21, 14-21 என்ற நேர்செட்டில் யுய் ஹஷிமோட்டாவிடம் (ஜப்பான்) தோல்வி கண்டு வெளியேறினார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ... Read More »

உலக கோப்பை கிரிக்கெட் – இந்தியா–ஆஸ்திரேலியா நாளை மோதல்

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2–வது அரை இறுதி ஆட்டம் சிட்னியில் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியனான இந்தியா– ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.டோனி தலைமையிலான இந்திய அணி இந்த உலககோப்பை போட்டித் தொடரில் மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறது. தொடர்ந்து 7 வெற்றியை பெற்று அரை இறுதிக்கு 6–வது தடவையாக முன்னேறி இருந்தது.அபாரமாக ஆடி வரும் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 4–வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுமா? என்று கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் எதிர் நோக்குகின்றனர். ஆனால் ஆஸ்திரேலியாவை ... Read More »

உலகக் கோப்பை கிரிக்கெட் – இறுதி போட்டிக்குள் நுழைந்தது நியூசிலாந்து அணி

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் களமிறங்கி விளையாடிய தென்னாப்ரிக்கா 5 விக்கெட் இழப்புக்கு 43 ஓவர்களில் 281 ரன்களை எடுத்துள்ளது. மழை காரணமாக ஆட்டம் பாதியில் பாதிக்கப்பட்டது. இதனால், ஓவர்கள் குறைக்கப்பட்டு 43 ஓவர்கள் என நிர்ணயிக்கப்பட்டது. இதனால், நியூசிலாந்து அணிக்கு 298 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.தென்னாப்ரிக்கா அணி சார்பில் பிளெஸிஸ் 82 ரன்கள் எடுத்தார். அடுத்தபடியாக டி வில்லியர்ஸ் 65 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தார்.நியுசிலாந்து சார்பில் ஆன்டர்சென் 3 விக்கெட்டுகளையும், பௌல்ட் 2 விக்கெட்டுகளையும் ... Read More »

சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் சி.பா ஆதித்தனின் விளையாட்டு பாசறை சார்பில் கபடி போட்டி

சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் சி.பா ஆதித்தனின் விளையாட்டு பாசறை சார்பில் கபடி போட்டி நடைபெற்றது. சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் சி.பா ஆதித்தனின் விளையாட்டு பாசறை சார்பில் இரண்டு நாள் கபடி போட்டி நடைபெற்றது. இந்த போட்டிக்கு நாம் தமிழர் கட்;சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கினார். இந்த போட்டியில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர் ஆகிய மாவட்டங்களில் இருந்து 42 அணிகள் பங்கு பெற்றன. இப்போட்டியில் முதல் பரிசு தம்பி அணியும், இரண்டாம் பரிசு துறைகோபால் அணியும் வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற வீரர்களுக்கு ... Read More »

உலகக்கோப்பை கிரிக்கெட் – அரையிறுதிக்கு முன்னேறியது தென் ஆப்பிரிக்கா

 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிக்கு தென் ஆப்பிரிக்க அணி முன்னேறியது. சிட்னி மைதானத்தில் இன்று நடைபெற்ற முதல் காலிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா-இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இலங்கை அணிக்கு தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர்கள் கடும் நெருக்கடி அளித்தனர். 4 ரன்களுக்குள் இரண்டு விக்கெட்டுகளை இழந்ததால், அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் நிதானமாக ஆடினர். எனினும், சங்கக்காரா (45), திரிமன்னே (42) ஆகியோர் தவிர மற்ற வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்தனர். 36.2 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் எடுத்திருந்த ... Read More »

ஒருநாள் கிரிக்கெட் பேட்டிங் வரிசையில் டோனி முன்னேற்றம்

ஒருநாள் போட்டியின் அடிப்படையில் அணிகள் மற்றும் வீரர்களின் தர வரிசைப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது. இதன் படி அணிகள் தர வரிசையில் ஆஸ்திரேலிய அணி (121 புள்ளிகள்) முதலிடத்திலும், இந்திய அணி (116 புள்ளிகள்) 2-வது இடத்திலும் தொடர்ந்து நீடிக்கிறது. தென் ஆப்பிரிக்க அணி (112 புள்ளிகள்) 3-வது இடத்திலும், இலங்கை அணி (108 புள்ளிகள்) 4-வது இடத்திலும், நியூசிலாந்து அணி (107 புள்ளிகள்) 5-வது இடத்திலும் இருக்கின்றன. பேட்டிங் வரிசையில் தென் ஆப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸ் முதலிடத்திலும், இலங்கை வீரர் சங்கக்கரா ... Read More »

உலக கோப்பை கிரிக்கெட் – ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஜிம்பாப்வேயிடம் இந்தியா திரில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. உலக கோப்பை தொடரில் பி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி, தனது முதல் ஐந்து லீக் போட்டிகளிலும் (பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, யு.ஏ.இ., வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அயர்லாந்து) வெற்றி பெற்று, 10 புள்ளிகளுடன் காலிறுதிக்கு முன்னேறியது. இது வரை இந்த தொடரில் இந்தியா யாரிடமும் தோற்காமல் இருந்து வரும் வேளையில் இந்தியா இன்று தோற்று விடுமோ என்ற நிலை கடைசி 10 ஓவர்களில் பற்றி ... Read More »

உலக கோப்பை கிரிக்கெட் – ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை  வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 36–வது ‘லீக்’ ஆட்டம் நியூசிலாந்தில் உள்ள வெலிங்டனில் இன்று நடைபெற்றது. இதில் ‘பி’ பிரிவில் உள்ள தென்னாப்பிரிக்கா – ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கேப்டன் முகமது தவ்கீர், தென் ஆப்பிரிக்காவை பேட்டிங் செய்யுமாறு பணித்தார். அதன்படி முதலில் ஆடிய தென்ஆப்பிரிக்கா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 341 ரன்கள் குவித்தது. அந்த அணியின் கேப்டன் டி வில்லியர்ஸ் 99 ரன்களும், பெஹார்டியன் 64 ரன்களும், ... Read More »

ஒரு நாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் சங்கக்கரா தொடர்ச்சியாக 4 சதங்கள்

உலக கோப்பையுடன் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து விடைபெற உள்ள 37 வயதான இலங்கை அணியின் விக்கெட் கீப்பர் சங்கக்கரா வியப்பூட்டும் வகையில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார். ஸ்காட்லாந்துக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் சங்கக்கரா 124 ரன்கள் சேகரித்தார். ஏற்கனவே அவர் தனது முந்தைய மூன்று லீக் ஆட்டங்களிலும் சதம் விளாசியிருந்தார். இதன் மூலம் 44 ஆண்டுகால ஒரு நாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில், தொடர்ச்சியாக 4 ஆட்டங்களில் சதத்தை ருசித்த முதல் வீரர் என்ற அபூர்வ சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன்பு பாகிஸ்தானின் ... Read More »

உலக மகளிர் ஹாக்கி லீக்: காலிறுதிக்கு முன்னேறிய இந்தியா

உலக மகளிர் ஹாக்கி போட்டியின் லீக் சுற்றின் 2-வது ஆட்டத்தில் தாய்லாந்து அணியை 6-0 என்ற கணக்கில் துவம்சம் செய்து காலிறுதிக்குள் நுழைந்துள்ளது இந்திய அணி.நேற்று இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் ஜஸ்ப்ரீத் கவுர், ரனி ரனி இருவரும் தலா இரண்டு கோல்களும் அமந்தீப் கவுர், வந்தனா கடாரியா இருவரும் தலா ஒரு கோலும் அடித்து இந்த அதிரடி வெற்றியை சாத்தியப்படுத்தியுள்ளனர். இந்த வெற்றியின் மூலம் ‘ஏ’ பிரிவில் முதலிடத்தை பிடித்துள்ள இந்திய அணி வெற்றிகரமாக காலிறுதிக்குள் நுழைந்துள்ளது.        வியாழக்கிழமை நடைபெற ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com