எட்டாவது ஐ.பி.எல்.இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி தொடக்க விழா இன்றிரவு 7.30 மணிக்கு கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் மைதானத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. நாளைய தினம் ஆரம்பமாகும் இந்த போட்டிகள் எதிர்வரும் மே 24 ஆம் திக வரை நடைபெறவுள்ளது. இதேவேளை இன்றைய தினம் நடைபெறவுள்ள தொடக்க விழாவில் பல கோலிவூட் நட்சத்திரங்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 8 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டிகள் சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, மொகாலி, விசாகப்பட்டினம், ராய்ப்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெறறவுள்ளது. உள்ளூர் வெளியூர் ... Read More »
விளையாட்டு
ஐ.பி.எல். கிரிக்கெட்ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்
8-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 8-ந் தேதி முதல் மே 24-ந் தேதி வரை நடக்கிறது. 8 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டி சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, மொகாலி, விசாகப்பட்டினம், ராய்ப்பூர் உள்பட பல்வேறு இடங்களில் நடைபெறுகிறது. உள்ளூர், வெளியூர் அடிப்படையில் நடைபெறும் இந்த லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது 7 லீக் ஆட்டங்களை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் விளையாடுகிறது. சென்னையில் வருகிற 9-ந் தேதி நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் ... Read More »
மலேசியன் ஓபன் பேட்மிண்டன் – சாய்னா தோல்வி
மலேசியன் ஓபன் பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடைபெற்று வருகிறது. பெண்களுக்கான ஒற்றையர் அரையிறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால், ஒலிம்பிக் சாமபியனான சீனாவின் லீ சூய்ருய்யை எதிர்கொண்டார். இதில் சாய்னா முதல் செட்டை 21-13 என எளிதில் வென்றார். இதனால் சாய்னா இறுதி போட்டிக்கு முன்னேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சுதாரித்துக்கொண்டு விளையாடிய சீன வீராங்கனை லீ இரண்டாவது செட்டை 21-17 என கைப்பற்றினார். இதனால் வெற்றியை தீர்மானிக்கும் 3-வது செட்டில் இருவரும் ஆக்ரோஷமாக விளையாடினார்கள். இதனால் இருவரும் மாறிமாறி ... Read More »
ஐ.பி.எல். கிரிக்கெட்: கேன் ரிச்சர்ட்சன் விலகல்
ராயல்ஸ் அணிக்காக விளையாடி வந்த வேகப்பந்து வீச்சாளர் கேன் ரிச்சர்ட்சன் (ஆஸ்திரேலியா) திடீரென இந்த சீசனில் இருந்து விலகியுள்ளார். 24 வயதான ரிச்சர்ட்சன் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘தனிப்பட்ட விஷயம் காரணமாக இந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் விளையாட இயலாது என்பதை வருத்தமுடன் தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு ஆதரவாக இருந்த ராஜஸ்தான் அணி நிர்வாகத்திற்கு நன்றி’ என்றார். Read More »
உணவு பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்த, மாநிலங்களுக்கு மேலும் 6 மாத கால அவகாசம்!
உணவு பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்த மாநிலங்களுக்கு மேலும் 6 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு மானிய விலையில் உணவு தானியங்கள் கிடைப்பதை உறுதி செய்யும் உணவு பாதுகாப்புச் சட்டத்தை முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நிறைவேற்றியது. எனினும், 26 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இந்தச் சட்டத்தை அமல்படுத்த தயக்கம் காட்டி வருகின்றன. இந்நிலையில், இந்தச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கான காலக்கெடுவை மத்திய அரசு மேலும் 6 மாத காலத்துக்கு நீட்டித்துள்ளது. இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் ... Read More »
மியாமி ஓபன் டென்னிஸ்: ஜோகோவிக் 3வது சுற்றுக்கு தகுதி
மியாமி ஓபன் டென்னிஸ் போட்டிகளில் நடப்பு சாம்பியன்களான ஜோகோவிக்கும், செரினா வில்லியம்சும் 3வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.5வது மியாமி மாஸ்டர் பட்டத்தை எதிர்பார்க்கும் உலகின் முதல் நிலை வீரரான ஜோகோவிக் நேற்று நடைபெற்ற ஆண்கள் 2வது சுற்று ஆட்டத்தில் ஸ்லோவாக்கியாவின் கிளிசானை 6-0, 5-7, 6-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தி 3வது சுற்றுக்கு தகுதி பெற்றார். அதே போல் பெண்கள் பிரிவில் நடைபெற்ற 2வது சுற்று ஆட்டத்தில் முதல் நிலை வீராங்கனையான செரினா வில்லியம்ஸ், ரோமானியாவின் மோனிகா நிகுலெஸ்குவை 6-3, 6-1 என்ற ... Read More »
உலகக்கோப்பை கிரிக்கெட் – ஆஸ்திரேலியா சாம்பியன்
உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா- நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் மெக்கல்லம் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்தது.தாங்களுக்கு கிடைத்த அருமையான வாய்ப்பை பயன்படுத்த நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் தவறினார்கள். மெக்கல்லம் 3 பந்தில் ரன் ஏதும் எடுக்காமலும், குப்தில் 15 ரன்னிலும், வில்லியம்சன் 12 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.அதன்பின் வந்த டெய்லர் ஓரளவிற்கு தாக்குப்பிடித்து 40 ரன்கள் எடுத்தார். ஆனால், எதிர்முனையில் விளையாடிய எலியாட் சிறப்பாக விளையாடி 83 ரன்கள் குவித்தார்.அதன்பின் வந்த வீரர்கள் ... Read More »
உலக கோப்பையின் இறுதி ஆட்டத்துடன் ஒரு நாள் போட்டிகளில் இருந்து கிளார்க் ஓய்வு
ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் மைகேல் கிளார்க் உலக கோப்பையின் இறுதி ஆட்டத்துடன் ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக தெரிவித்துள்ளார்.மைகேல் கிளார்க் தொடர்ந்து காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். முதுகு வலியுடன் நீண்டநாள் விளையாடி வரும் அவர், இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது காலில் காயம் ஏற்பட்டது. இதனால் டெஸ்ட் தொடரில் இருந்து விலகிய அவர் அதன் பிறகு முத்தரப்பு ஒரு நாள் தொடரிலும் பங்கேற்கவில்லை. ஆகவே, உலகக்கோப்பை அணியில் இடம்பெறுவாரா? என்ற சந்தேகமும் எழுந்தது. ஆனால், அவர் உடல்தகுதியை நிரூபித்ததால் அணியில் ... Read More »
வசதி படைத்தவர்கள் சமையல் எரிவாயு, நேரடி மானியத்திட்டத்தை கைவிட வேண்டும்!
வசதி படைத்தவர்கள் சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்டத்தை கைவிட வேண்டும் என பிரதமர் நரேந்திரமோடி வலியுறுத்தியுள்ளார். டெல்லியில எரிசக்தி பாதுகாப்பு குறித்த மாநாடு நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது, வசதி படைத்தவர்கள் சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்டத்தை கைவிட வேண்டும் என்றும், இதன் மூலம் அவர்கள் ஏழைகளுக்கு மறைமுகமாக உதவ முடியும் என்றும் பிரதமர் தெரிவித்தார். மேலும் 2 லட்சத்து 80 ஆயிரம் பேர் இதுவரை சமையல் எரிவாயு மானியத்தை கைவிட்டுள்ளதாகவும், இதனால் அரசுக்கு 100 ... Read More »
ஷாட் தேர்வு மிகவும் மோசமாக இருந்தது – கவாஸ்கர்
இந்திய அணி தோற்றது குறித்து முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் கூறியதாவது:–ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரை இறுதியில் இந்திய அணி அனைத்து துறையிலும் தோல்வி அடைந்து விட்டது. ஒரு பலமான பார்டனர் ஷிப்பை அமைக்க தவறவிட்டனர்.இந்திய வீரர்கள் தேவையில்லாத, பொறுப்பற்ற ஷாட்களை ஆடி அவுட் ஆனார்கள். அவர்களது ஷாட் தேர்வு மிகவும் மோசமாக இருந்தது. மேலும் ஒருவித நெருக்கடியில் இருந்தனர்.வீராட்கோலி புல் ஷாட்டை அடிப்பதில் இன்னும் முன்னேற்றம் தேவை. இந்த வெற்றிக்கு ஆஸ்திரேலியா தகுதி ஆனது. அவர்கள் எந்த ஒரு கட்டத்திலும் ஓங்கிய கையை ... Read More »