Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
விளையாட்டு | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News | Page 7
Thursday , 7 July 2022
Home » விளையாட்டுpage 7

விளையாட்டு

தோனியின் பாலிசியை பின்பற்றும் கேப்டன் விராட் கோலி …

முன்னாள் இந்திய கேப்டன் தோனியின் பாலிசியை தற்போதைய கேப்டன் விராட் கோலியும் பின்பற்ற துவங்கியுள்ளார். இந்தியா வந்த நியூசிலாந்து கிரிக்கெட் அணி, 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இத்தொடரை இந்திய அணி, 2-1 என கைப்பற்றி அசத்தியது. இத்தொடரின் முடிவில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி, முன்னாள் கேப்டன் தோனியின் பாலிசியை பின்பற்றினார். ஒருதொடரில் கோப்பை வென்ற பின் இளம் வீரர்களிடன் கோப்பையை வழங்கிவிட்டு, அணி வீரர்களுடன் நிற்பதை வழக்கமாக வைத்திருந்தார் தோனி. Read More »

மும்பை அணிக்கு எதிரான ரஞ்சிக்கோப்பை போட்டி…

மும்பை அணிக்கு எதிரான ரஞ்சிக்கோப்பை போட்டியில், பரோடா அணி எல்லா பீல்டர்களையும், பேட்ஸ்மேன் அருகில் நிறுத்தி மிரட்டியது. இந்தியாவில் தற்போது உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சிக்கோப்பை கிரிகெட் தொடர் நடக்கிறது. மும்பையில் நடந்த போட்டியில் மும்பை அணி தனது 500வது போட்டியில், பரோடா அணியை எதிர் கொண்டது. இதில் மும்பை அணி முதல் இன்னிங்சில், 171 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பரோடா அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 575 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து களமிறங்கிய மும்பை அணி, இரண்டாவது இன்னிங்சில் ... Read More »

தமிழ்நாடு இறகுப்பந்து சங்க தலைவரானார் அன்புமணி இராமதாஸ்…

தமிழ்நாடு இறகுப்பந்து சங்கத்தின் தலைவராக அன்புமணி இராமதாஸ் 2-வது முறையாக போட்டியின்றி  தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழ்நாடு இறகுப்பந்து சங்கத்தின் ஆண்டுப்பொதுக்குழு கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. அந்த பொதுக்குழுவில், தமிழ்நாடு சங்கத்தின்  தலைவர் பதவிக்கான  தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் சங்கத் தலைவராக அன்புமணி இராமதாஸ் 2வது  முறையாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது, இந்திய இறகுபந்து சங்கத்தின் செயலாளர் திரு. புனியா சௌத்ரி, கர்நாடக இறகுப்பந்து சங்கத்தலைவர் N.C.சுதிர் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக டேனியல் ஆகியோர் கலந்துகொண்டனர். பின்னர் பேசிய அன்புமணி ராமதாஸ், ... Read More »

9 ஆயிரம் ரன்களைக் கடந்து கோஹ்லி சாதனை…

நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் கேப்டன் விராட் கோலி,  குறைந்த போட்டிகளில் 9 ஆயிரம் ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனையை  படைத்தார். அதாவது, 194 இன்னிங்சில் அவர் கோலி இச்சாதனையைப் படைத்தார். இதற்கு முன்னர் தென்னாப்பிரிக்கா அணி வீரர் ஏ.பி.டி. வில்லியர்ஸ் 205 இன்னிங்ஸ்சுகளில் 9 ஆயிரம் ரன்களைக் கடந்திருந்தார். தொடர்ந்து ஆடிய விராட் கோலி, 32-வது சதத்தைப் பதிவு செய்தார்.இளம் வீரராக இருந்து குறைந்த போட்டியில் பல்வேறு சாதனைகளை கோஹ்லி நிகழ்த்திவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது . Read More »

இறுதிவரை போராட வைத்த இறுதி போட்டி…

நியூசிலாந்திற்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது . இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி கான்பூரில் நடைபெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால்தான் தொடரை கைப்பற்ற முடியும் என்ற நிலையில் இரு அணிகளும் மோதின. இந்நிலையில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணியின் சார்பாக ரோகித் சர்மா, மற்றும் கேப்டன் கோலி ஆகியோர் சதமடித்ததை அடித்ததை அடுத்து, ... Read More »

இலங்கை உடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ள இந்திய அணி…

இலங்கை உடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இந்தியா வந்து மூன்று வகையான கிரிக்கெட் போட்டியிலும் விளையாடுகிறது. இதற்கான 15 பேர் கொண்ட இந்திய டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கோலி தலைமையிலான அணியில் ரோஹித் சர்மா, ரஹானே, ஷிகர் தவான், கே.எல்.ராகுல், முரளி விஜய், புஜாரா, விருத்திமான் சஹா, புவனேஷ்வர் குமார், ஹர்திக் பாண்டியா, கேதர் ஜாதவ் ஆகியோர் உள்ளனர். ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து உடனான தொடரில் ஓய்வு அளிக்கப்பட்ட அஸ்வின் ... Read More »

வெற்றி முனைப்பில் இந்தியா அணி களமிறங்குகிறது …

இந்தியா – ஆஸ்திரேலியா மோதும் முதல் ஒருநாள் போட்டி, சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று பிற்பகல் 1.30க்கு தொடங்குகிறது. இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. முதல் ஒருநாள் போட்டி சென்னையில் இன்று நடைபெறுகிறது. சமீபத்தில் இலங்கை அணிக்கு எதிராக நடந்த ஒருநாள் போட்டித் தொடரில் இந்தியா 5-0 என ஒயிட்வாஷ் சாதனை படைத்துள்ள நிலையில், பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் வெற்றியை தொடருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கேப்டன் கோஹ்லி, ரோகித், ரகானே, ... Read More »

கொரிய ஓபன் பேட்மிண்டன் போட்டி ; பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் …

கொரிய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றுள்ளார். ஜப்பான் வீராங்கனை ஓகுகாராவை 22-20, 11-21, 21-18 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். வெற்றி மூலம் உலக சாம்பியன்ஷிப் தோல்விக்கு பி.வி.சிந்து பழி தீர்த்துக்கொண்டார். கொரிய ஓபன் பேட்மிண்டனில் பட்டம் வெல்லும் முதல் இந்திய வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக அரை இறுதியில் சீனாவின் ஹி பிங்ஜியாவோவுடன் (7வது ரேங்க்) நேற்று மோதிய சிந்து, முதல் செட்டில் அதிரடியாக புள்ளிகளைக் குவித்து 21-10 என்ற கணக்கில் கைப்பற்றி முன்னிலை பெற்றார். அடுத்த ... Read More »

உலக லெவன் அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றி…

சொந்த மண்ணில் உலக லெவன் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் 20 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாதுகாப்பு காரணம் கருதி, பாகிஸ்தான் பயணத்தை கிரிக்கெட் விளையாடும் நாடுகள் தவிர்த்து வருகின்றன. இதை மாற்றும் வகையிலும், மற்ற நாடுகளுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையிலும், உலக லெவன் அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட சுதந்திர கோப்பை டி20 தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏற்பாடு செய்தது. முதல் போட்டி லாகூர் கடாபி ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற உலக லெவன் ... Read More »

கோலி விஷயத்தில் கவனமாக இருப்பேன் …

கடந்த டெஸ்ட் தொடரைப்போல கோலி விஷயத்தில் மீண்டும் முட்டாள் தனம் செய்ய விருப்பம் இல்லை என ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். இந்தியா வரும் ஆஸ்திரேலியா அணி இந்திய அணிக்கு எதிராக 5 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.  இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி, வரும் 17ல் சென்னையில் துவங்கவுள்ளது. இதில் பங்கேற்க சென்னை வந்துள்ள ஆஸ்திரேலிய அணி வீரர்கள், தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இத்தொடர் குறித்து ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் பேசுகையில், கடந்த ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com