முன்னாள் நட்சத்திர வீரர்களான சச்சின், கங்குலி, லஷ்மண் ஆகியோரை ஆலோசனை குழுவில் இணைத்துள்ள இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலை முத்தையா முரளிதரன் வரவேற்றுள்ளார். இந்திய கிரிக்கெட் வாரியத்தினால் உருவாக்கப்பட்ட ஆலோசனை குழுவில் முன்னாள் ஜாம்பவான்களான சச்சின், கங்குலி, லஷ்மண் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். இது தொடர்பாக இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரன் கூறுகையில், நட்சத்திர வீரர்களாக உள்ள சச்சின், கங்குலி, லஷ்மண் ஆகியோரை வைத்து ஆலோசனை குழு உருவாக்கப்பட்டது பிசிசிஐ செய்த சிறந்த செயலாகும். சிறந்த அனுபவங்களை கொண்ட இவர்கள் ... Read More »
விளையாட்டு
இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரோஹித் சர்மா- ரித்திகா நிச்சயதார்த்தம்.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் ரோஹித் சர்மா- ரித்திகா நிச்சயதார்த்தம் மும்பையில் நேற்று முன் தினம் நடந்தது. ரோஹித் சர்மாவின் கிரிக்கெட் விவகாரங்கள் மற்றும் விளம்பரங்களை கவனிக்கும் மேலாளராக ரித்திகா கடந்த 6 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ரித்திகாவுடன் ஆரம்பத்தில் நட்புடன் பழகிய ரோஹித் சர்மாவுக்கு அதுவே நாளடைவில் காதலாக மாறியது. இந்நிலையில் கடந்த மாதம் தனது பிறந்த நாள் தினத்தன்று இருவருக்கும் இடையே உள்ள உறவை டுவிட்டரில் ரோஹித் சர்மா தெரிவித்திருந்தார். இந்நிலையில் மும்பை பொரிவலி ஸ்போர்ட்ஸ் கிளப்பில், இவர்களது நிச்சயதார்த்தம் ... Read More »
இந்தியா முழுவதும் திடிரென பிரபலமானது Dubsmash App.
இந்தியா முழுவதும் திடிரென பிரபலமானது Dubsmash App. பாலிவுட் திரையுலகில் சல்மான்கான், அலியா பட் தென்னிந்தியாவில் சிம்பு, ஸ்ருதிஹாசன் போன்ற பல சினிமா பிரபலங்களும் இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தினர். தற்போது இந்த வரிசையில் பேட்மிண்டன் தரவரிசையில் நம்பர் 1 இடத்தில் உள்ள சாய்னா நெஹ்வால் இணைந்துள்ளார். இவர் தனது சகவீரர் அக்ஷய் குமாருடன் இணைந்து பிரபல பாலிவுட் பட வசனங்களுக்கேற்ப அடிப்பது போல் நடித்துள்ளார். Read More »
டோனியுடன் என்னை ஒப்பிட வேண்டாம் – விராட் கோஹ்லி
டோனியுடன் என்னை ஒப்பிட வேண்டாம் என்று இந்திய அணியின் டெஸ்ட் தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடந்த அவுஸ்திரேலிய தொடரின் பாதியில் டோனி டெஸ்ட் போட்டிகளில் இருந்து திடீரென ஓய்வை அறிவித்தார். இதனையடுத்து டெஸ்ட் அணித்தலைவராக கோஹ்லி அறிவிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து டோனி போல கோஹ்லியால் சிறப்பான அணித்தலைவராக செயல்பட முடியுமா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இது தொடர்பாக கோஹ்லி கூறுகையில், இளம் வயதிலேயே, மூத்த வீரர்கள் அடங்கிய அணியை அவர் வழிநடத்திய விதம் வியக்கத்தக்கது. அதற்கான உத்தியை அவர் ... Read More »
இலங்கை டெஸ்ட் தொடரில் இருந்து சயீத் அஜ்மல் நீக்கம்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 5 ஒருநாள், இரண்டு 20 ஓவர் போட்டி தொடரில் விளையாடுகிறது. முதலாவது டெஸ்ட் போட்டி காலேவில் வருகிற 17-ந் திகதி தொடங்குகிறது. டெஸ்ட் போட்டி தொடருக்கான பாகிஸ்தான் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. பந்து வீச்சு சர்ச்சையில் சிக்கி மீண்ட முன்னாள் நம்பர் ஒன் சுழற்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மல் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். தொடக்க ஆட்டக்காரர் அகமது ஷேசாத், ஷான் மசூத் ஆகியோர் அணிக்கு திரும்பி இருக்கிறார்கள். வேகப்பந்து வீச்சாளர்கள் ரஹாத் அலி, ... Read More »
பிஃபா தலைவர் ராஜினாமா, தலைவர் பத்விக்கு அதிகளவிலான போட்டி
அமெரிக்க தலைமை பிஃபா ஊழல் விவகாரம் வெளியானதைத் தொடர்ந்து பிஃபா தலைவர் பதவியை செப் பிளாட்டர் திடீரென ராஜினாமா செய்ததையடுத்து அப்பதவிக்கு போட்டி அதிகமாகியுள்ளது. 5-வது முறையாக சமீபத்தில் பிளாட்டர் பிஃபா தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதாவது அமெரிக்க தலைமை ரெய்டில் பிஃபா அதிகாரிகள் பலர் கைது செய்யப்பட்ட பிறகு தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் ஜூரிச்சில் அவர் தான் பதவி விலகுவதாக திடீர் அறிவிப்பு வெளியிட்டார். “பிஃபா அமைப்பில் ஆழமான மறுகட்டமைப்பு தேவை” என்று கூறினார் பிளாட்டர். ஊழல்வாதிகள் பட்டியலிலோ அதனுடன் இணைத்தோ பிளாட்டர் ... Read More »
சர்வதேச கிரிக்கெட் வாழ்வின் மிகப்பெரிய கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர்
தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்வில் தன்னுடன் ஆடிய 5 மிகப்பெரிய கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் பெயரை சேர்த்துள்ளார் மைக்கேல் கிளார்க், ட்விட்டரில் ரசிகர்களுடன் உரையாடல் நடத்திய ஆஸி. டெஸ்ட் கேப்டன் மைக்கேல் கிளார்க் தன் காலத்திய மிகச்சிறந்த வீரர்களாக 5 வீரர்களின் பெயர்களை வெளியிட்டார். இதில் சச்சின் டெண்டுல்கரை அவர் குறிப்பிட்டுள்ளார். ஷேன் வார்ன், கிளென் மெக்ரா, தென் ஆப்பிரிக்க ஆல்ரவுண்டர் ஜாக் காலிஸ், மற்றும் மே.இ.தீவுகளின் பிரையன் லாரா ஆகியோர் கிளார்க்கின் டாப்-5-ல் இடம்பெற்ற மற்ற வீரர்களாவர். தான் எதிர்கொண்ட ... Read More »
வரி செலுத்தாததால் மிஸ்பா உல்ஹக்கின் கார் பறிமுதல்.
பாகிஸ்தான் அணியில் நீண்டகாலமாக அணித்தலைவராக இருப்பவர் மிஸ்பா உல்ஹக். இவர் தனது land cruiser காருக்கு செலுத்த வேண்டிய ரூ. 39 லட்சம் வரி செலுத்தாததால் வருவாய் துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் பாகிஸ்தான் நிதித்துறை அமைச்சர் Ishaq Dar தலையிட்டதையடுத்து பிரச்சனை தீர்ந்தது. Read More »
ஐஸ்க்ரீம் பார்லர் முன்பு சிறுநீர் கழித்த, கால்பந்து உலகின் ஜாம்பவான் ரொனால்டோ
கால்பந்து விளையாட்டைப் பற்றி எதுவும் தெரியாத ஒரு சாமானியனுக்குக் கூட கிறிஸ்டினோ ரொனால்டோ என்ற பெயர் தெரியும். ரியல் மாட்ரிட் அணியின் சூப்பர் ஸ்டாரும் கால்பந்து உலகின் ஜாம்பவான்களில் ஒருவருமான ரொனால்டோ தனது மோசமான நடத்தையால் பொலிஸார் முன்பு அவமானப்பட்டு தலைகுனிந்துள்ளார். பரபரப்பான ’லா லிகா’ கால்பந்து தொடர் சமீபத்தில் நடந்து முடிந்ததையடுத்து, ப்ரான்சின் கடற்கரை நகரமான செயிண்ட் ட்ரோபஸ்க்கு நண்பர்களுடன் விடுமுறையைக் கொண்டாடச் ரொனால்டோ சென்றிருந்தார். அங்குள்ள இரவு விடுதி ஒன்றில், நேற்று பார்ட்டி முடிந்து இரவில் வெளியே வந்த ரொனால்டோ எதிரில் ... Read More »
இலங்கையில் விதிமுறைகளுக்கு புறம்பாக பந்துவீசிய 128 பந்துவீச்சாளர்களுக்கு தடை
இலங்கையில் நடத்தப்பட்ட பந்துவீச்சு சோதனையில், விதிமுறைகளுக்கு புறம்பாக பந்துவீசியதாக அடையாளம் கண்டுபிடிக்கப்பட்ட 128 பந்துவீச்சாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐ.சி.சி.க்கும் இலங்கை கிரிக்கெட் வாரியத்துக்குமிடையே ஏற்பட்ட ஒப்பந்தப்படி, விதிகளுக்கு மாறாக பந்துவீசுபவர்களை உள்ளுருரிலேயே அடையாளம் காணும் பணி நடைபெற்றது. கடந்த 2014-15 ஆண்டுகளில் இலங்கை உள்ளுர் கிரிக்கெட் அளவில் 170 பந்துவீச்சாளர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டு அவர்களது பந்துவீச்சு பரிசோதனைக்குட்படுத்தப்பட்டது. இதில் 42 பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சு முறை சரியாக இருந்ததால் அவர்கள் தடையில் இருந்து தப்பினர். விதிகளுக்கு முரணாக பந்துவீசிய 128 பந்துவீச்சாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. ... Read More »