சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) ஒருநாள் கிரிக்கெட் தர வரிசைப்பட்டியலில் ஏற்கனவே 12 அணிகள் உள்ளன.தற்பேது மேலும் 4 புதிய அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஸ்காட்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், நெதர்லாந்து, நேபாளம் ஆகிய அணிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனஸ்காட்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய அணிகள் 13-வது மற்றும் 14-வது அணிகளாக இணைக்கப்பட்டு உள்ளார். தரவரிசைப்பட்டியலில் இணைய குறைந்தது 4 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் ஆடி இருக்க வேண்டும்.நெதர்லாந்து, நேபாளம் ஆகிய அணிகள் இத்தனை போட்டிகளில் ஆடிய பிறகு தரவரிசையில் சேர்க்கப்படும்.இந்த புதிய அணிகள் சேர்க்கையினால் ... Read More »
விளையாட்டு
இடைநீக்கம் செய்ததை எதிர்த்து இந்திய பளுதூக்குதல் சம்மேளனத்தின் ஆதரவுடன் அப்பீல் செய்வேன்’
ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் கடந்த ஏப்ரல் மாதத்தில் நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பெண்களுக்கான பளுதூக்குதலில் 53 கிலோ உடல் எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை சஞ்சிதா சானு தங்கப்பதக்கம் வென்றார். மணிப்பூரை சேர்ந்த சஞ்சிதா சானு காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் வென்ற 2-வது தங்கப்பதக்கம் இதுவாகும்.இந்த நிலையில் சஞ்சிதா சானுவிடம் போட்டி இல்லாத நேரத்தில் நடத்தப்பட்ட ஊக்க மருந்து பரிசோதனையில் அவர் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தி இருப்பது தெரியவந்ததாகவும், இதனால் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டு இருப்பதாகவும் சர்வதேச பளுதூக்குதல் சம்மேளனம் நேற்று ... Read More »
காமன்வெல்த் போட்டியில் இந்தியாவிற்கு 4 – பதக்கங்கள்
காமன்வெல்த் போட்டியில் ஆடவருக்கான 69 கிலோ எடைபிரிவில் இந்திய வீரர் தீபக் லேதர் வெண்கலப்பதக்கம் வென்றார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் தொடரில் ஆடவருக்கான 69 கிலோ எடைப்பிரிவு போட்டியில் இந்திய வீரர் தீபக் லேதர் ஸ்னேட்ச் பிரிவில் 136 கிலோ எடையையும். கிளியர் அண்ட் ஜெர்க் (clear and jerk) பிரிவில் 159 கிலோ எடையையும் தூக்கினார். இரண்டையும் சேர்த்து 295 கிலோ எடையை தூக்கிய தீபக் லேதர் 3-வது இடம் பிடித்து வெண்கலப்பதக்கம் வென்றார். இதன்மூலம், காமன்வெல்த் தொடரில் இதுவரை இந்தியா ... Read More »
2017-ம் ஆண்டின் சிறந்த விளையாட்டு வீராங்கனையாக மிதாலி ராஜ் தேர்வு
தெலுங்கான விளையாட்டு பத்திரிக்கையாளர்கள் சங்கம் சார்பில் இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ்-க்கு 2017-ம் ஆண்டின் சிறந்த விளையாட்டு வீராங்கனை விருது வழங்கப்பட்டது. தெலுங்கான விளையாட்டு பத்திரிக்கையாளர்கள் சங்கம் சார்பில் 2017-ம் ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இதற்கான விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது. அதில், 2017-ம் ஆண்டின் சிறந்த விளையாட்டு வீராங்கனை விருதுக்கு இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் தேர்வு செய்யப்பட்டார். தெலுங்கான மாநில ஆலோசகர் வழங்கிய அந்த விருதை மிதாலியின் பெற்றோர் பெற்றுக்கொண்டனர். ... Read More »
பத்ம பூஷண் விருது பெற்றார் தோனி
இந்திய கிரிக்கெட் அணியின் கூல் கேப்டன் என்றழைக்கப்படும் மகேந்திர சிங் தோனி பத்ம பூஷண் விருதை பெற்றுக்கொண்டார். பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நாட்டின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் உள்ளிட்ட பத்ம விருதுகள் மத்திய அரசால் வழங்கி கவுரவிக்கப்படுகின்றன. அதன்படி, 2018ஆம் ஆண்டு 84 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதற்கான, விழா குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் டெல்லியில் உள்ள மாளிகையில் நடைபெற்றது. அதில், விளையாட்டுத் துறையில் சாதனைகள் படைத்த, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ... Read More »
சொந்த ஊருக்கு திரும்பியது போல் உள்ளது: பிராவோ
சூப்பர் கிங்ஸ் அணியுடன் இணைந்து எல்லோ ஆர்மி (Yellow Army) அறிமுக நிகழ்ச்சியில் சி.எஸ்.கே வீரர்கள் முரளி விஜய் மற்றும் பிராவோ கலந்துகொண்டனர். சென்னை அடையாறில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இணைந்து தனியார் சிறு நிதி வங்கி ”எல்லோ ஆர்மி” என்ற புதிய சேமிப்பு கணக்கை அறிமுகம் செய்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சென்னை அணி வீரர் முரளி விஜய், சென்னை அணிக்காக மீண்டும் களமிறங்குவது பழைய நினைவுகளை நினைவு படுத்துவதாக கூறினார். ஐ.பி.எல் தொடரில் விளையாடும் போது கடுமையான போட்டி நிலவும். ... Read More »
சர்வதேச பேட்மிண்டன்: காலிறுதிக்கு முன்னேறினார் பி.வி சிந்து…
ஆல் இங்கிலாந்து ஓபன் சர்வதேச பேட்மிண்டன் தொடரில் இந்திய வீராங்கனை சிந்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, தாய்லாந்து வீராங்கனை நிச்சன் ஜின்டாபோல் உடன் விளையாடினார். இந்த போட்டியில் முதல் செட்டை 21-13, என சிந்து வெல்ல, 2-வது செட்டை 21-13 என ஜிண்டாபோல் கைப்பற்றினார். அடுத்து 3-வது செட்டை சிந்து 21-18 என தனதாக்கி காலிறுதிக்கு முன்னேறினார். Read More »
இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முன்னேற்றம் …
முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டியில் வங்காளதேச அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முன்னேறியுள்ளது. இலங்கை, இந்தியா, வங்காளதேசம் அணிகள் மோதும் முத்தரப்பு டி20 தொடர் இலங்கையில் நடந்து வருகிறது. இந்நிலையில்,கொழும்புவில் நேற்று நடைபெற்ற போட்டியில் வங்காளதேசத்துடன் இந்தியா மோதியது. இதில், முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி, 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழந்து 176 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரோகித் சர்மா 89 ரன்களும், சுரேஷ் ரெய்னா 47 ரன்களும் எடுத்தனர். இதையடுத்து 177 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ... Read More »
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகம்மது ஹபீஸ் பந்துவீச ஐசிசி தடை…
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகம்மது ஹபீஸ் பந்துவீச ஐசிசி தடைவிதித்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆல் – ரவுண்டர் முகமது ஹபீஸ், பந்துவீசும்போது முழங்கையை 15 டிகிரி கோணத்திற்கும் மேல் வளைப்பதாக சர்ச்சையில் சிக்கினார். கடந்த மாதம் இலங்கைக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியின்போது, அவரது பந்துவீச்சு குறித்து களநடுவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், முகமது ஹபீஸின் பந்து வீச்சு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இந்நிலையில் அவர் வீசிய பெரும்பாலான பந்துகள் விதிமீறலாக இருந்தது, தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, முகம்மது ஹபீஸ் பந்து வீச ஐசிசி ... Read More »
தொடர்ந்து முதலிடம் ; ரஃபேல் நடாலுக்கு உலக நம்பர்1.கோப்பை …
ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால் சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் ஆண்டு இறுதி வரை முதலிடத்தில் நீடித்ததற்காக உலக நம்பர்1 (World No.1) கோப்பையை பெற்றார். ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பிரபல முன்னணி டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால். 31வயதான இவர், இதுவரை 16 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். மேலும், சர்வதேச டென்னிஸ் தரவரிசையிலும் முதல் இடத்தில் நீடிக்கிறார். இந்நிலையில், சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் ஆண்டு இறுதி வரை முதலிடத்தில் நீடித்ததற்காக உலக நம்பர்1 கோப்பை நடாலுக்கு வழங்கப்பட்டது. இந்த கோப்பையை ATP நிர்வாக தலைவர் ... Read More »