இந்திய கிரிக்கெட் அணியின் டைட்டில்உரிமத்தை பே.டி.எம். என்ற இணையதள வர்த்தக நிர்வனம் ரூ. 203.28 கோடி கொடுத்து பெற்றுள்ளது.2014-15-ம் ஆண்டுக்கான ஒரு வருட டைட்டில் உரிமத்தை மைக்ரோமேக்ஸ் நிறுவனம் பெற்றிருந்தது. இதற்கான காலம் முடிவடைய இருப்பதால் புதிய டெண்டர் கோரப்பட்டது. இதில் மைக்ரோமேக்ஸ் மற்றும் பே.டி.எம். நிறுவனங்கள் கலந்து கொண்டனர். கலந்து கொண்டவர்களின் விண்ணப்பங்கள் பி.சி.சி.ஐ.-யின் வணிகக்குழு முன் இன்று திறக்கப்பட்டது. அப்போது மைக்ரோமேக்ஸ் தாக்கல் செய்திருந்த விண்ணப்பம் சரியாக பூர்த்தி செய்யாததால் அது தள்ளுபடி ஆனது.மற்றொரு நிறுவனமான பே.டி.எம். டைட்டில் உரிமத்தை தட்டிச்சென்றுள்ளது. ... Read More »
விளையாட்டு
‘‘நம்நாடு சிறந்த தலைவரை இழந்திருக்கிறது’ – தெண்டுல்கர்
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நேற்று மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் நடந்த ஐஐஎம் விழாவில் பேசிக் கொண்டிருந்த போது மாரடைப்பால் மரணம் அடைந்தார்.அவரது மறைவிற்கு அனைத்து தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கிரிக்கெட் வீரர்களும் தங்கள் இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளனர். தெண்டுல்கர் தனது டுவிட்டரில் ‘‘நம்நாடு சிறந்த தலைவரை இழந்திருக்கிறது’’ என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன் டெல்லியில் உள்ள அவரது வீட்டிற்கு நேராகச் சென்று அவரது உட லுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். ‘‘தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவரும், வெல்லமுடியாத உத்வேகம் கொண்டவருமான கலாம், ஏராளமானவர்களுக்கு ... Read More »
இந்தியா–பாகிஸ்தான் போட்டியைவிட தேசிய பாதுகாப்பே முக்கியம்
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (பி.சி.சி.ஐ) செயலாளர் அனுராக் தாக்கூர் அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:–பாகிஸ்தானுடன் கிரிக்கெட் போட்டி எதுவும் இப்போதைக்கு இல்லை. இதற்கு முன்னரே இந்த தொடர் நடத்தப்படுமா? என்பது பற்றி எந்த முடிவும் எடுக்கவில்லை. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தான் இந்தியாவிடம் கோரிக்கை விடுத்து வருகிறது.தற்போது பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர். இது கண்டனத்துக்கு உரியது. இந்த சூழ்நிலையில் ஒரு இந்தியராக பாகிஸ்தான் தொடருக்கான சாத்தியக் கூறுகள் தற்போது இல்லை.இந்தியா–பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியைவிட தேசிய பாதுகாப்பே முக்கியம். ... Read More »
தங்கம் விலை மீண்டும் சரிவுவிலை மீண்டும் சரிவு
தங்கம் விலை மீண்டும் சரிந்து பவுன் ரூ.18,960–க்கு விற்கிறது.கடந்த நில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. கடந்த 18–ந்தேதி பவுன் ரூ.19 ஆயிரத்து 472 ஆக இருந்தது. பின்னர் படிப்படியாக குறைந்து 22–ந்தேதி ரூ.19 ஆயிரத்துக்கு கீழ் விற்றது. அன்று பவுன் ரூ.18 ஆயிரத்து 752 ஆக இருந்தது.நேற்று முன்தினம் பவுனுக்கு ரூ.264 உயர்ந்து ரூ.19 ஆயிரத்து 16 ஆக இருந்தது. இன்று மீண்டும் விலை சரிந்துள்ளது. பவுனுக்கு ரூ.56 குறைந்தது. ஒரு பவுன் ரூ.18 ஆயிரத்து 960–க்கு விற்கிறது.கிராமுக்கு ... Read More »
ஸ்ரீசாந்த் விடுதலையானது கடவுள் தந்த தீர்ப்பு
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில் விளையாடிய கேரளாவை சேர்ந்த ஸ்ரீசாந்த் மற்றும் அஜீத் சண்டிலா, அங்கீத் சவான் ஆகிய 3 வீரர்களும் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டனர்.இதுதொடர்பான வழக்கு டெல்லி கோர்ட்டில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி, ஸ்ரீசாந்த் உள்பட 3 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பு அளித்தார்.இதைதொடர்ந்து ஸ்ரீசாந்த் தனது சொந்த ஊரான கொச்சிக்கு திரும்பினார். அவரை அவரது பெற்றோர் சாந்தகுமார் நாயர் – சாவித்திரிதேவி ஆகியோர் ஆனந்த கண்ணீருடன் வரவேற்றனர்.ஸ்ரீசாந்த் விடுதலையானது பற்றி அவரது பெற்றோர் ... Read More »
காயத்துக்கு பிறகு களமிறங்கும் உசேன் போல்ட்
உலகின் அதிவேக வீரர் உசேன் போல்ட். ஜமைக்காவை சேர்ந்த இவர் 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டத்தில் உலக சாதனையாளர் ஆவார்.100 மீட்டரில் 9.58 வினாடியில் கடந்தும், 200 மீட்டரில் 19.19 வினாடியில் கடந்தும் சாதனை படைத்தார். காயத்தால் அவதிப்பட்ட அவர் அதற்காக சிகிச்சை பெற்றார். அதன்பின் தீவிர பயிற்சியில் ஈடுபட்டார். தற்போது காயத்தில் இருந்து மீண்டுள்ள அவர் நீண்ட காலத்துக்கு பிறகு களம் இறங்குகிறார்.லண்டனில் இன்று ஒலிம்பிக் ஸ்டேடியத்தில் இன்று தடகள போட்டி தொடங்குகிறது. இதில் உசேன் போல்ட் களம் இறங்குகிறார். அதிவேக ... Read More »
இலங்கை டெஸ்ட் தொடர் – இந்திய அணிக்கு பயிற்சியாளர் கிடையாது
உலக கோப்பை போட்டியுடன் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் டங்கன் பிளட்சரின் பதவி காலம் முடிவடைந்தது. அதன் பிறகு இந்திய அணி தலைமை பயிற்சியாளர் யாரும் இல்லாமல் வங்காளதேசம், ஜிம்பாப்வே ஆகிய இரண்டு வெளிநாட்டு தொடர்களில் விளையாடியது. இந்த நிலையில் இலங்கை டெஸ்ட் தொடருக்கும் இந்திய அணி தலைமை பயிற்சியாளர் இல்லாமல் தான் பயணிக்க இருக்கிறது. அதே சமயம் அணியின் இயக்குனர் ரவிசாஸ்திரி மற்றும் உதவி பயிற்சியாளர்கள் அணியுடன் இருப்பார்கள். இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் அனுராக் தாகூர் கூறுகையில், ‘கடந்த மாதங்களை போல் ... Read More »
இலங்கைக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டி – தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரை பாகிஸ்தான் 2-1 எனக் கைப்பற்றியது. தற்போது ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற மூன்று போட்டிகள் முடிவில் 2-1 என பாகிஸ்தான் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இரு அணிகளும் மோதும் 4-வது ஒருநாள் போட்டி இன்று கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. துவக்க வீரர் பெரேரா ரன் எதுவும் ... Read More »
டேவிஸ் கோப்பை டென்னிஸ் – செக்குடியரசுடன் மோதுகிறது இந்தியா
சமீபத்தில் நடந்த டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில், ஆசிய-ஓசியானா குரூப்1 சுற்றில் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தி, உலக குரூப் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறியது. இந்த நிலையில் உலக குரூப் ‘பிளே-ஆப்’ சுற்று போட்டி அட்டவணை லண்டனில் நேற்று வெளியிட்டது. இதில் இந்தியாவுக்கு போட்டி அட்டவணை கடினமாக அமைந்துள்ளது. இந்திய அணி உலக குரூப் ‘பிளே-ஆப்’ சுற்றில் மூன்று முறை சாம்பியனான செக்குடியரசை சந்திக்கிறது. இந்த ஆட்டம் செப்டம்பர் 18-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை டெல்லி அல்லது புனே ஆகிய ... Read More »
டேவிஸ் கோப்பை டென்னிஸ் – இந்தியா உலக பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேற்றம்
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் ஆசிய-ஓசியானா குரூப்-1 சுற்று போட்டியில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதிய ஆட்டம் நியூசிலாந்தில் உள்ள கிறைஸ்ட்சர்ச் நகரில் நடந்தது. இதில் 3-வது மற்றும் கடைசி நாளான நேற்று மாற்று ஒற்றையர் ஆட்டங்கள் நடந்தது. இதில் முதலாவது மாற்று ஒற்றையர் ஆட்டத்தில் இந்திய வீரர் சோம்தேவ் தேவ்வர்மன், மார்கஸ் டேனியலை (நியூசிலாந்து) சந்தித்தார். கடைசி நேரத்தில் ஜோஸ் ஸ்டாதம் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதால் அவருக்கு பதிலாக மார்கஸ் டேனியல் களம் கண்டார். வாழ்வா-சாவா? என்ற சூழ்நிலையில் களம் கண்ட சோம்தேவ் தேவ்வர்மன் நெருக்கடிக்கு ... Read More »