வெஸ்ட் இண்டீஸ் வீரர் சுனில் நரைனின் பந்துவீச்சுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் அவர் விளையாட உள்ளார். இதனால் கொல்கத்தா அணி வீரர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். கடந்த ஆண்டு இலங்கை அணியுடனான போட்டியின்போது சுனில் நரைனின் பந்துவீச்சு குறித்து சந்தேகம் எழுந்ததால், தடைவிதிக்கப்பட்டிருந்தது. அவரின் பந்துவீச்சு குறித்து சோதனை நடத்திய சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், விதிகளுக்கு உட்பட்டே பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் ஒன்பதாவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்த்தா நைட் ... Read More »
விளையாட்டு
இந்திய பயிற்சியாளர் பதவிக்கு இப்போது தயாராக இல்லை: ராகுல் டிராவிட் பேட்டி
இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு இப்போது தயாராக இல்லை என முன்னால் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார் . டிராவிட் டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது பயிற்சியாளர் பதவி ஆசையா? என கேட்டதற்கு ,எனது வாழ்க்கையில் இந்த காலக்கட்டத்தில் நான் எடுக்கும் எந்த முடிவும் எனது தகுதி மற்றும் மனநிலையை பொறுத்தே இருக்கும். இது பற்றி முடிவு எடுக்க கால அவகாசம் தேவைப்படும். இப்போது பயிற்சியாளர் பொறுப்புக்கு நான் தயாராக இருக்கிறேனா அல்லது இல்லையா? என்பதை உறுதியாக கூற முடியாது. அது ஒரு அனுபவம். தினமும் கற்றுக்கொள்ளக்கூடிய விஷயம். செய்து ... Read More »
சொந்தவீட்டில் சூனியம் வைத்ததுபோல் – சி .எஸ் .கே ரெய்னா வருத்தம்
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் புதிய அணிக்காக விளையாட இருப்பது பூர்வீக வீட்டில் இருந்து குடிபெயர்வது போல் இருப்பதாக சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். கடந்த 8 ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி விட்டு, தற்போது குஜராத் லயன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட இருப்பது வித்தியாசமான உணர்வை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார். சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிய அனுபவ வீரர்களிடம் இருந்து பல்வேறு விஷயங்களை கற்றுக்கொண்டுள்ளதாகவும் ரெய்னா கூறியுள்ளார். Read More »
கேப்டன் பதவியிலிருந்து விலகினார் ஷாகித் அப்ரிதி
பாகிஸ்தான் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து ஷாகித் அப்ரிதி விலகியுள்ளார்.டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி மோசமாக விளையாடியதன் எதிரொலியாக கேப்டன் பதவியிலிருந்து விலகியுள்ளார் அப்ரிதி. இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது: பாகிஸ்தான் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகிவிட்டேன் என்பதை பாகிஸ்தான் மற்றும் உலகம் முழுவதும் உள்ள எனது ரசிகர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். கேப்டன் பதவியை திறம்பட ஆற்றுவதற்கு எனக்கு அன்பும், கருணையும் காட்டிய இறைவனுக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ... Read More »
டி20 உலகக் கோப்பையை வென்றது வெஸ்ட் இண்டீஸ்
20 ஓவர் உலக கோப்பை போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது. அரை இறுதியில் இங்கிலாந்து அணி நியூசிலாந்தையும், வெஸ்ட் இண்டீஸ் இந்தியாவையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறின.கோப்பையை வெல்ல போவது யார் என தீர்மானிக்க போகும் ஆட்டம் கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீச முடிவு செய்தது. தொடக்க ஆட்டகாரர்களாக ஜேசன் ராய் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் களமிறங்கினார்கள். கடந்த ஆட்டத்தில் அசத்திய ஜேசன் ராய் பத்திரி பந்தில் ஸ்டேம்பை பறிக்கொடுத்தார். ... Read More »
50-வது சர்வதேச கோலை அடித்து மெஸ்ஸி சாதனை
பொலிவியாவுக்கு எதிரான உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியில், ஆர்ஜென்டினாவின் லயனல் மெஸ்ஸி தனது 50-வது சர்வதேச கோலை அடித்து சாதனைப் படைத்தார்.ஸ்பெயின் நாட்டில் உள்ள கார்வடோ நகரில் நேற்று நடைபெற்ற போட்டியின் போது மெஸ்ஸி இந்த சாதனையை நிகழ்த்தினார்.பொலிவியாவுக்கு எதிரான இந்த ஆட்டத்தில், 30-வது நிமிஷத்தில் ‘ஸ்பாட்-கிக்’ மூலம் கிடைத்த வாய்ப்பை கோலாக மாற்றினார் மெஸ்ஸி.இந்த ஆட்டத்தில் ஆர்ஜென்டினா அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் தென் அமெரிக்கா கண்டத்திலிருந்து உலகக் கோப்பை போட்டிக்கு அந்த ... Read More »
20 ஓவர் உலக கோப்பை – வங்காளதேசத்துடன் நாளை மோதல்
20 ஓவர் உலக கோப்பையில் டோனி தலைமையிலான இந்திய அணி ‘குரூப் 2’ பிரிவில் இடம் பெற்றுள்ளது.ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் ஆகிய அணிகளும் அந்த பிரிவில் உள்ளன.இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்திடம் 47 ரன்னில் தோற்றது. 2–வது ஆட்டத்தில் பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.இந்திய அணி 3–வது ஆட்டத்தில் வங்காள தேசத்தை நாளை (புதன் கிழமை) எதிர்கொள்கிறது. பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு இந்த ஆட்டம் நடைபெறுகிறது.அரை இறுதிக்கான வாய்ப்பில் தொடர்ந்து நீடிக்க இந்திய அணி வங்காளதேசத்தை ... Read More »
இண்டியன்வெல்ஸ் டென்னிஸ்- ஜோகோவிச் சாம்பியன்
அமெரிக்காவின் இண்டியன்வெல்ஸ் நகரில் பி.என்.பி. பரிபாஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதிப்போட்டியில் உலகின் முதல் நிலை வீரர் நோவாக் ஜோகோவிச் (செர்பியா), 12-ம் நிலை வீரர் மிலோஸ் ராவ்னிச்சை (கனடா) எதிர்கொண்டார். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிச் 6-2, 6-0 என்ற நேர்செட்டில் மிலோஸ் ராவ்னிச்சை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை மீண்டும் கைப்பற்றினார். ஜோகோவிச் இண்டியன் வெல்ஸ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றுவது இது 5-வது முறையாகும். ஏற்கனவே 2008, 2011, 2014, 2015-ம் ... Read More »
டி20 உலகக் கோப்பை – 6 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி
மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்ற டி20 உலகக் கோப்பை போட்டியில் கெயிலின் சிக்ஸர் மழையில் இங்கிலாந்து அணியை வெஸ்ட் இண்டீஸ் தோற்கடித்துள்ளது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்களை எடுத்தது. இங்கிலாந்து அணியில் ரூட் அதிகபட்சமாக 48 ரன்கள் எடுத்தார். பட்லர் 30 ரன்களையும், ஹால்ஸ் 28 ரன்களையும், மொர்கன் 27 ரன்களையும் எடுத்து ரன் குவிப்பிற்கு வித்திட்டனர். ... Read More »
47 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் இந்திய அணி தோல்வி
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் பிரதானச் சுற்று போட்டியின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் தோல்வியடைந்தது. முதல் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் இந்தியா, நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் பேட்டிங் தேர்வு செய்தார். நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் ஆண்டர்சன் அதிகபட்சமாக 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ரோன்சி 21 ரன்கள் எடுத்தார். இந்திய அணி சார்பில் ... Read More »