இந்திய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர் ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற தகுதிச் சுற்றில் , நான்காவது இடம் பிடித்ததின் மூலம் ஒலிம்பிக் போட்டிக்கான இடத்தினை அவர் உறுதி செய்தார். ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை என்ற சிறப்பை தீபா கர்மாகர் பெற்றுள்ளார். ரியோ ஒலிம்பிக் போட்டி வரும் ஆகஸ்ட் 6ஆம் தேதி தொடங்கவுள்ளது Read More »
விளையாட்டு
இலங்கையின் முன்னணி சுழற்பந்துவீச்சாளர் ரங்கனா ஹெராத் ஓய்வு அறிவிப்பு
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்துவீச்சாளர் ரங்கனா ஹெராத், சர்வதேச ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அதேநேரம், இலங்கை அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடத் திட்டமிட்டுள்ளதாக ஹெராத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இலங்கை கிரிக்கெட் வாரியத்துக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், 2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடருக்குத் தாயாராகும்வகையில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கவே இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இலங்கை அணியில் முத்தையா முரளிதரனின் ஓய்வுக்குப் பிறகு ஏற்பட்ட பெரிய வெற்றிடத்தைத் தனது சுழற்பந்துவீச்சால் நிரப்பிய பெருமை ... Read More »
நான் பயந்த தருணம்:சச்சின் ஓபன் டாக்
உலகின் மிகச்சிறந்த வேகப்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வதை விட கேமிராவை எதிர்கொள்வதே பயத்தை ஏற்படுத்தியதாக கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். கிரிக்கெட் வீரர்கள் முகமது அசாருதீன் மற்றும் மகேந்திரசிங் தோனி ஆகியோரை அடுத்து, சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கை வரலாறு பாலிவுட் படமாகிறது. சச்சின்:ஏ பில்லியன் டிரீம்ஸ் என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இங்கிலாந்தின் முன்னணி இயக்குனர் ஜேம்ஸ் எர்ஸ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் மூலம் சச்சின் டெண்டுல்கர் நடிகராகவும் அறிமுகமாகிறார். படத்துக்கு ஆஸ்கர் தமிழன் ஏ.ஆர்.ரஹ்மான் ... Read More »
அஸ்லான் ஷா ஹாக்கி;இந்தியா, இன்று ஆஸ்திரேலியாவுடன் பலப்பரீட்சை
மலேசியாவில் நடைபெற்று வரும் சுல்தான் அஸ்லான் ஷா ஹாக்கி தொடரில் மலேசிய அணியை வீழ்த்தி, இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. கடைசி லீக் போட்டியில் மலேசிய அணியை வென்றால் மட்டுமே இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியும் என்ற கட்டாயத்துடன் இந்திய அணி களமிறங்கியது. ஆட்டத்தின் 2ஆவது நிமிடத்திலேயே இந்தியாவின் எஸ்.வி.சுனில் முதல் கோலை அடித்தார். தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி மேலும் 5 கோல்களை அடித்தது. மலேசியாவால் ஒரு கோல் மட்டுமே அடிக்க முடிந்தது. இறுதியில் 6-1 என்ற கோல் ... Read More »
அகில இந்திய கூடைப்பந்து: ஓ.என்.ஜி.சி, கேரள மின்வாரியம் சாம்பியன்
சென்னை, அகில இந்திய கூடைப்பந்து போட்டி சென்னை மயிலாப்பூரில் உள்ள சாந்தோம் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. கடைசி நாளான நேற்று நடந்த பெண்கள் பிரிவின் இறுதி ஆட்டத்தில் கேரள மின்வாரிய அணி 59–48 என்ற புள்ளி கணக்கில் தெற்கு ரெயில்வேயை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. கேரள அணியில் அதிகபட்சமாக ஜீனா 20 புள்ளிகளும், ஷில்ஜி 19 புள்ளிகளும் சேர்த்தனர். இதன் பின்னர் இரவில் நடந்த ஆண்கள் பிரிவின் இறுதி ஆட்டத்தில் ஓ.என்.ஜி.சி. அணி 72–59 என்ற புள்ளி கணக்கில் ஐ.ஓ.பி. அணியை வீழ்த்தி ... Read More »
புனே அணியின் கேப்டன் தோனி உருக்கம் ;சிஎஸ்கே-வின் மஞ்சள் நிற ஜெர்சி-க்காக மனம் உருகியதாக தகவல் .
9-வது ஐபிஎல் தொடரின் மும்பை அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில், சென்னை அணியின் மஞ்சள் நிற ஜெர்சியை அணியாமல் களத்தில் இறங்கும் போது மிகுந்த உணர்சிவயப்பட்டதாக தோனி தெரிவித்துள்ளார். சூதாட்ட விவகாரத்தில் சிக்கியதன் காரணமாக ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த 8 ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளாயாடி ரசிகர்கள் மனதை கவர்ந்த தோனி இந்தாண்டு புனே அணியின் கேப்டனாக விளையாடுகிறார். புனே அணிக்கு ... Read More »
தான் பிறந்த நாட்டில் விளையாட தயாராகும் கெவின் பீட்டர்சன் ?
இங்கிலாந்து அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டுள்ள கெவின் பீட்டர்சன், தென்னாப்பரிக்க அணி மூலமாக சர்வதேச போட்டிகளுக்குத் திரும்ப முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இங்கிலாந்து அணியின் முன்னணி வீரராக வலம்வந்த பீட்டர்சன், அந்த அணியின் முன்னாள் கேப்டன் ஸ்ட்ராஸ் குறித்து தென்னாப்பிரிக்க வீரர்களுக்கு சர்ச்சைக்குரிய கருத்துகளை குறுஞ்செய்தி அனுப்பியதாக புகார் எழுந்தது. இதையடுத்து கடந்த 2014 ஆம் ஆண்டில் இங்கிலாந்து அணி நிர்வாகம் அவரை ஓரங்கட்டியது. சமீபத்தில் நடந்த உலகக்கோப்பை டி20 தொடருக்கான இங்கிலாந்து அணியில் மீண்டும் வாய்ப்பு கிட்டும் என்று எண்ணியிருந்த பீட்டர்சனுக்கு ஏமாற்றமே ... Read More »
பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராவதர்க்கு தயார் – வினோத் காம்ப்ளி விருப்பம்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளி விருப்பம் தெரிவித்துள்ளார். உலகக்கோப்பை டி20 தொடரில் சூப்பர் டென் சுற்றுடன் பாகிஸ்தான் அணி வெளியேறியதை அடுத்து, அந்த அணியின் பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்தார்.இதையடுத்து பாகிஸ்தான் அணிக்கு புதிய பயிற்சியாளரைத் தேடும் பணியில் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில் பயிற்சியாளர் தேர்வு குறித்த அறிவிப்பை இணையதளத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டது. இந்திய அணியின் முன்னாள் வீரரும், சச்சின் டெண்டுல்கரின் ... Read More »
உலகக்கோப்பை தோல்வி குறித்து ரசிகர்கள் விமர்சனம் -”நோ”பால் குறித்து அஸ்வின் பதில்.
உலககோப்பை டி 20 அரையிறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான போட்டியில் வீசிய ஒரு நோபாலுக்காக என்னை வில்லானாகச் சித்தரிக்காதீர்கள் என்று இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறினார். ஒன்பதாவது ஐபிஎல் போட்டிகள் நாளை தொடங்க உள்ளது. இதில், மகேந்திர சிங் தோனி தலைமையிலான ரைசிங் புனே சூப்பர்ஜியாண்ட்ஸ் அணியில் அஸ்வின் இடம்பெற்றுள்ளார். போட்டிக்கு முந்தைய செய்தியாளர் சந்திப்பில் பேசிய அஸ்வின் இவ்வாறு தெரிவித்தார். மேலும், தோல்விக்குப் பிந்தைய இரண்டு,மூன்று நாட்களுக்கு பத்திரிகைகளை வாசிக்கவில்லை என்று குறிப்பிட்ட அவர், அந்த ஒரு நிகழ்வை ... Read More »
அரையிறுதியில் சாய்னா நேவால் தோல்வி-இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றம் .
மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் சாய்னா நேவால் தோல்வி அடைந்தார். தொடரின் மூன்றாம் நிலை வீராங்கனையான சாய்னா நேவால், இன்று நடைபெற்ற போட்டியில் சீனத் தைபேயின் டாய் சு யிங்-கை எதிர்த்து விளையாடினார். விறுவிறுப்பு நிறைந்த இந்தப் போட்டியின் முதல் செட்டை 21-19 என சீனத் தைபே வீராங்கனை கைப்பற்றினார். இரண்டாவது செட்டிலும் ஆதிக்கம் செலுத்திய அவர், 21-13 என எளிதில் கைப்பற்றி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். Read More »