விக்கெட் கீப்பரை ஸ்டம்பினால் தாக்கி கொலை செய்த பேட்ஸ்மேனை பங்களாதேஷ் போலீஸார் தேடிவருகின்றனர். பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் இளைஞர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தனர். பதினாறு வயது நிரம்பிய பாபுல் ஷிக்தார் என்ற வாலிபர் விக்கெட் காப்பாளராக விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது, பேட்ஸ்மேன் அவுட்டானார். ஆனால், அது நோபால் என நடுவர் கூறியதால் பேட்ஸ்மேன் தொடர்ந்து ஆடினார். அடுத்த பந்திலும் அதே பேட்ஸ்மேன் அவுட் ஆனார். அப்போதும் அது நோபால் என நடுவர் கூறியதையடுத்து, நடுவர் பேட்ஸ்மேனுக்கு சாதகமாகத் தீர்ப்பு சொல்கிறார் என்று ஷிக்தார் குற்றஞ்சாட்டினார். இதனால் ... Read More »
விளையாட்டு
ரியோ ஒலிம்பிக் போட்டியின் நல்லெண்ண தூதுவராக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்
ரியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய அணிக்கு பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நல்லெண்ண தூதுவராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனை இந்திய தடகள சங்கம் இன்று அறிவித்துள்ளது. கிரிக்கெட் நாயகன் சச்சின், துப்பாக்கிச்சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா, பாலிவுட் நட்சத்திரம் சல்மான் கான் ஆகியோரைத் தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது இந்திய அணிக்கான நல்லெண்ண தூதுவர் பொறுப்பை ஏற்றுள்ளார். ஒலிம்பிக் போட்டிகள் வரும் ஆகஸ்ட் மாதம் 5-ந்தேதி தொடங்கி 21-ஆம் தேதி வரை பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெறவுள்ளது. இதில் 100-க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகளுடன் ... Read More »
தோனிக்குப் பதிலாக கோலியை கேப்டனாக நியமிக்க தயங்குவது ஏன் ?’கங்குலி
ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டன் தோனி, 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை வரையில் அந்தப் பதவியில் நீடித்தால் அது தனக்கு ஆச்சரியமளிக்கும் விஷயமாக இருக்கும் என்று அணியின் முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலி தெரிவித்துள்ளார். இதுகுறித்து, பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது: இந்திய அணியின் கேப்டனாக தோனி 9 ஆண்டுகளாக இருந்து வருகிறார். உண்மையிலேயே இது நீண்ட காலமாகும். ஒரு கேப்டனாக அவர் தனது பணியை மிகச் சிறப்பாக செய்திருக்கிறார். ஆனால், அடுத்த உலகக் கோப்பை ... Read More »
அன்னையர் தினத்தில் மகன் தாயாகி அடைந்த நெகிழ்ச்சி.
நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட்டில் பெங்களூரு ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடி வரும் விராட் கோலி, உலக அன்னையர் தினமான இன்று அனைத்து தாய்மார்களுக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரின் வீடியோ பதிவில், எந்தவித எதிர்பார்ப்புகளும் இல்லாமல் அன்பு செலுத்துவது இவ்வுலகில் தாய் மட்டுமே. எனவே நாம் அனைவரும் கூட எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் அம்மா மீது அன்பு செலுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். கடவுள் நமக்கு தந்த மிகப்பெரிய பரிசு அம்மா எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ... Read More »
இந்தியா – ஜிம்பாப்வே கிரிக்கெட் தொடர் : போட்டி அட்டவணை வெளியீடு
ஐ.பி.எல் தொடர் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்த மாதம் இந்திய அணி ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது. ஜூன் 11-ம் தேதி தொடங்கி ஜூன் 22-ம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. ஒருநாள் போட்டி அட்டவணை : ஜூன் 11 : முதல் ஒருநாள் போட்டி ஜூன் 13 : 2வது ஒருநாள் போட்டி ஜூன் 15 : 3வது மற்றும் கடைசி ஒருநாள் ... Read More »
‘ராஜீவ்காந்தி கேல்ரத்னா’ விருதுக்கு விராட்கோலி பெயர் பரிந்துரை.
நாட்டின் உயரிய விளையாட்டு விருதான ‘ராஜீவ்காந்தி கேல்ரத்னா’ விருதுக்கு இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் விராட்கோலியின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு உதவி வரும் விராட் கோலியின் பெயரை ‘ராஜீவ்காந்தி கேல்ரத்னா’ விருதுக்கு பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளது. இதேபோல், மற்றொரு இளம் வீரரான ரஹானேவின் பெயர் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. Read More »
ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய துடுப்புப்படகு வீரர் ;கரைசேர வாய்ப்பு
இந்தியாவை சேர்ந்த துடுப்புப்படகு வீரர் தத்து பொக்கானல் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். தென்கொரியாவில் நடைபெற்ற ஆசிய ஓசியானியா பிரிவு தகுதிச்சுற்றில் அவர் வெள்ளிப்பதக்கம் வென்றார். 25 வயது வீரரான தத்து பொக்கானல் தனிநபர் ஸ்கல்ஸ் பிரிவில் பங்கெற்றார். பந்தய இலக்கை 7 நிமிடங்கள் ஏழு புள்ளி நான்கு ஒன்பது நொடிகளில் கடந்து அவர் இரண்டாவது இடம் பிடித்தார். இதையடுத்து, வரும் ஆகஸ்ட் மாதம் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள தத்து பொக்கானல் தகுதி பெற்றார். Read More »
பிசிசிஐ க்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கண்டனம் ;அனைத்து மாநில வீரர்களுக்கும் சம வாய்ப்பு வழங்கும்படி அறிவுரை
இளம் வீரர்கள் பலர், தோனி போலவும், கோலி போலவும் உருவாக விரும்புகின்றனர் என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) நிர்வாகத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி லோதாவின் பரிந்துரைகளை அமல்படுத்துவது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் தலைமையிலான அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இளம்வீரர்கள் பலரும் மகேந்திர சிங் தோனி போலவும், விராட் கோலி போலவும் வளர விரும்புகிறார்கள். ஆனால் அவர்களுக்கு சரியான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. நாடுமுழுவதும் உள்ள அனைத்து ... Read More »
ஒலிம்பிக் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி ,ஒலிம்பிக் கமிட்டித் தலைவர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
ஒலிம்பிக் போட்டிக்கான தீபம் ஏற்றும் பாரம்பரிய நிகழ்ச்சி கிரேக்கத் தலைநகர் ஏதென்ஸில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டித் தலைவர் தாமஸ் பாக் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்னர் 2 ஆயிரத்து 600 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஹெரா வழிபாட்டுத் தலத்தில், பாரம்பரிய வழக்கத்துடன் தீபம் ஏற்றப்பட்டது. மதகுருக்கான உடையணிந்த பெண், ஒலிம்பிக் தீபத்தை ஏற்றினார். இதன்பின்னர் ஒலிம்பிக் தீபம் கீரிஸை சேர்ந்த புகழ்பெற்ற ஜிம்னாஸ்டிக் வீரர் பிரிட்டோனியஸ்-சிடம் ஒப்படைக்கப்பட்டு ஒலிம்பிக் ஜோதி ஓட்டம் தொடங்கப்பட்டது. ஒலிம்பிக் ஜோதி பல்வேறு நாடுகளுக்கு ... Read More »
ஜடேஜாவின் திருமணத்தில் துப்பாக்கிச்சூடு; விழா கொண்டாட்டம் என உறவினர்கள் பதில்.
கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் திருமணக் கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக, அவரது உறவினர்களால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவுக்கு, அவரது பால்யகால தோழியான ரிவா சோலங்கிக்கும் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள ஜடேஜாவின் உணவகத்தில் வெகுவிமரிசையாகத் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணக் கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக, அவரது உறவினர்கள் துப்பாக்கியால் சுட்டு கொண்டாடியதாகப் புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினருக்குக் கிடைத்த தகவலை அடுத்து சம்பவம் குறித்து ராஜ்கோட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உரிமம் பெற்ற துப்பாக்கியாக இருந்தாலும், தற்காப்புக்காக மட்டுமே சுட ... Read More »