பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால், கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் 200-வது வெற்றியை ருசித்து சாதனை வரிசையில் இணைந்தார். ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ‘நம்பர் ஒன்’ வீரர் நோவக் ஜோகோவிச் (செர்பியா), பெல்ஜியத்தின் ஸ்டீவ் டார்சிஸ்சுடன் மோதினார். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய அனுபவம் வாய்ந்த ஜோகோவிச் 7-5, 6-3, 6-4 என்ற ... Read More »
விளையாட்டு
ஒரு ஓவரில் 6 சிக்சர்கள் அடித்து யுவராஜ் சிங் சாதனையை சமன் செய்த இங்கிலாந்து வீரர்
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க வீரர் ஹெர்செல்லே கிப்ஸ், இந்திய வீரர் யுவராஜ் சிங் ஆகியோர் மட்டுமே ஒரு ஓவரில் 6 சிக்சர்கள் விளாசி சாதனை படைத்துள்ளனர். இந்நிலையில் இங்கிலாந்தில் மெர்ல்ன்போர்ன் கிரிக்கெட் கிளப்புபாக விளையாடிய 19 வயதேயான கிளென் பிலிப்ஸ் ஒரு ஓவரில் 6 சிக்சர்கள் அடித்து இவர்கள் சாதனையை சமன் செய்துள்ளார். தொடர்ந்து அசத்திய அவர் டியூக் ஆ நோர்போல்ச் லெவன் அணிக்கு எதிரான அந்தப் போட்டியில் 123 பந்தில் 201 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். தென் ஆப்பிரிக்காவில் ... Read More »
16 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் இடம் பிடிக்கிறார் சச்சின் மகன் அர்ஜுன்
ஓய்வுபெற்ற கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூனுக்கு 16 வயதுக்குட்பட்டோருக்கான மேற்கு மண்டல அணியில் இடம் கிடைத்துள்ளது. தேசிய அளவிலான 16 வயதுக்குட்பட்ட மண்டல அணிக்களுக்கு இடையேயான உள்ளூர் தொடர் கர்நாடக மாநிலத்தின் ஹூப்ளியில் வருகிற 24 ஆம் தேதி முதல் ஜூன் 6 வரை நடைபெற உள்ளது. இதில், ஓ.எம்.போசாலே தலைமயிலான மேற்குமண்டல அணியில் இடம் கிடைத்துள்ளது. சச்சின் போல் இல்லாமல் இடதுகை வேகப்பந்து வீச்சாளராகவும், பேட்ஸ்மேனாகவும் உருவெடுத்துள்ள அர்ஜூன் டெண்டுல்கரை, அகில இந்திய ஜூனியர் கிரிக்கெட் தேர்வுக் குழு மேற்குமண்டல ... Read More »
ஐபிஎல் தொடரிலும் கெய்லுக்கு சிக்கல் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் தொடர்வாரா ?
பெண் பத்திரிகையாளரிடம் சர்ச்சைக்குரிய முறையில் எழுந்த குற்றச்சாட்டை அடுத்து பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி வீரர் கிறிஸ் கெய்லுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. முன்னதாக ஆஸ்திரேலியாவில் நடந்த பிக் பாஷ் டி20 தொடரின்போது, பெண் பத்திரிகையாளரிடம் சர்ச்சைக்குரிய முறையில் பேசி கெய்ல் சர்ச்சையில் சிக்கினார். இதனால், மெல்போர்ன் ரெனேகேட்ஸ் அணி கெய்ல் உடனான ஒப்பந்தத்தை நீடிக்கப் போவதில்லை என்று அறிவித்துவிட்டது. இந்தநிலையில், பிரிட்டன் நாளிதழான ‘தி டைம்ஸ்’ பத்திரிகையின் பெண் செய்தியாளர் சார்லோட்டே எட்வர்ட்ஸ்-சிடம் சர்ச்சையான முறையில் கெய்ல் பேசியதாக அடுத்த சர்ச்சை எழுந்துள்ளது. இதுகுறித்து ... Read More »
ஐசிசி தரவரிசை பட்டியலில் அஷ்வின் மீண்டும் ‘நம்பர் – 2’
ஐசிசி டெஸ்ட் பவுலர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் துபாயில் வெளியிட்டது. இந்த பட்டியலில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் 871 புள்ளிகளுடன் தொடர்ந்து ‘நம்பர் 2’ இடத்தில் உள்ளார். ‘நம்பர் 1’ இடத்தில் இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட் 872 புள்ளிகளுடன் நீடிக்கிறார். இதையடுத்து இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டார்சன் 3 வது இடத்தில் உள்ளார். பேட்ஸ்மேன்களுக்கான வரிசைப் பட்டியலில் முதல் இடத்தில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்தும், இரண்டாம் இடத்தில் இங்கிலாந்தின் ஜோ ரூடும், மூன்றாம் இடத்தில் நியூசிலாந்தின் வில்லியம்சன்னும் உள்ளார். Read More »
தோனி தலைமையிலான ஜிம்பாப்வே-இந்தியா மோதும் ஒருநாள் மற்றும் 20/20 ஆட்டம்
ஜிம்பாப்வே-யில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஒருநாள் மற்றும் ட்வெண்டி ட்வெண்டி போட்டிக்காக தோனி தலைமையில் 16 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கோலி, ரோகித் ஷர்மா, தவான் ஆகிய முக்கிய வீரர்களுக்கு இந்தத் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. தோனி தலைமையிலான அணியில், மணீஷ் பாண்டே, அம்பத்தி ராயுடு, ரிஷி தவான், அக்ஷர் படேல், தவல் குல்கர்னி, ஜஸ்பிரித் பும்ரா, கேதர் ஜாதவ், ஜெய்தேவ் உனட்கட், பரிந்தர் ஸ்ரன் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். ஃபயஸ் ஃபசல், யுஸ்வேந்திர சாஹல், ஜெயந்த் யாதவ், கருண் நாயர், மன்தீப் சிங் ஆகியோர் ... Read More »
கால்பந்து களத்தில் உயிரிழந்த வீரர்: எதிரணி வீரர் கீழே தள்ளியதில் உயிரிழந்தார்
அர்ஜென்டினாவில் நடைபெற்ற உள்நாட்டு கால்பந்து தொடரின் போது, எதிரணி வீரர் மோதியதில் கீழே விழுந்த வீரர் உயிரிழந்தார்.சான் ஜார்ஜ்,DEFENSORES ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியின் போது இந்தச்சம்பவம் நடந்தது. SAN JORGE அணி வீரர் MICHAEL FAVRE-வை, எதிரணி வீரர் GERONIMO QUINTANA-காலிடறி கீழே விழச்செய்தார். இதில் கீழே விழுந்த அவர் எழுந்து நின்ற போது DEFENSORES அணியை சேர்ந்த மற்றொரு வீரர் FAVIO LARROSA தமது முழங்கையால் தாக்கி மீண்டும் கீழே விழச் செய்தார். தலையில் காயமேற்பட்டு சுயநினைவின்றி கீழே விழுந்த, ... Read More »
கிரிக்கெட் வாரியத் தலைவராக அனுராக் தாக்கூர் நியமனம்
கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் புதிய தலைவராக அனுராக் தாக்கூர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மும்பையில் இன்று நடைபெற்ற கிரிக்கெட் வாரிய சிறப்புப் பொதுக்குழுக் கூட்டத்தில் அனுராக் தாக்கூரின் பெயர் முன்மொழியப்பட்டது. இதையடுத்து, வேறு யாரும் போட்டியிடாத நிலையில், தாக்கூர் ஒருமனதாக தேர்வானதாக அறிவிக்கப்பட்டது. கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்த சஷாங்க் மனோகர் அண்மையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதனால், அந்தப் பதவி காலியான நிலையில், கிரிக்கெட் வாரிய பொதுச் செயலாளராக இருந்த அனுராக் தாக்கூரை தலைவராக தேர்வு செய்ய பெரும்பாலான உறுப்பினர்கள் ... Read More »
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 17 சிறுவர்களை சந்தித்தார் யுவராஜ் சிங்
புற்றுநோய்க்கு ஆளாகி, வெற்றிகரமாக அதில் இருந்து மீண்டிருக்கும் இந்திய கிரிக்கெட் அணி வீரர் யுவராஜ் சிங், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 17 சிறுவர்களை நேற்று சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது, புற்றுநோயை வெற்றிகொள்வதற்கான குறிப்புகள் சிலவற்றையும் அவர் அந்தச் சிறுவர்களுக்கு வழங்கினார். சந்திப்பின்போது ஒரு சிறுவன், “மீண்டும் நீங்கள் ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்கள் அடிப்பீர்களா?” என்று கேட்டதற்கு, “நீங்கள் பிரார்த்தனை செய்தால் நிச்சயமாக ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்களை விளாசுவேன்” என்று சிரித்தபடி கூறினார். யுவராஜ் சிங், இங்கிலாந்துக்கு எதிராக 2007-ஆம் ஆண்டு ஒரே ஓவரில் ... Read More »
ஐபிஎல் தொடங்கி 9 ஆண்டுகளில் முதல்முறையாக, ஒரு போட்டியை தவறவிட இருக்கிறார் ரெய்னா
ஐபிஎல் தொடரின் கடந்த 9 ஆண்டுகளில் சுரேஷ் ரெய்னா முதல்முறையாக, ஒரு போட்டியில் ஆடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய சுரேஷ் ரெய்னா, அந்த அணிக்காக ஒரு போட்டியைக் கூட மிஸ் செய்யாமல் ஆடி வந்தார். ஊழல் குற்றச்சாட்டால் சென்னை அணிக்குத் தடை விதிக்கப்பட்ட பின்னர், புதிதாக உருவாக்கப்பட்ட குஜராத் லயன்ஸ் அணியின் கேப்டனாக அவர் நியமிக்கப்பட்டார். அந்த அணிக்காக நடப்பு ஐபிஎல் தொடரில் அனைத்து போட்டிகளிலும் ரெய்னா பங்கேற்றார். இந்த நிலையில், சுரேஷ் ரெய்னாவின் கர்ப்பிணி ... Read More »