பிரபல கால்பந்து வீரர் மெஸ்ஸி மீதான வரிஏய்ப்பு வழக்கின் விசாரணை ஸ்பெயின் நீதிமன்றத்தில் தொடங்கியது. எனினும் விசாரணையின் போது மெஸ்ஸி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக மெஸ்ஸியால் விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை என அவரது தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்களில் ஒருவர் தெரிவித்தார். பார்சிலோனா அணிக்கான ஒப்பந்தம் மற்றும் விளம்பரங்கள் வாயிலாக கிடைத்த வருமானத்திற்கான வரியை முறையாக கட்டவில்லை என மெஸ்ஸி மீது வழக்கு தொடரப்பட்டது. பார்சிலோனா கிளப் அணிக்காக விளையாடி வரும் அர்ஜென்டினாவை சேர்ந்த மெஸ்ஸி, கடந்த 2000-ஆம் ஆண்டு முதல் ... Read More »
விளையாட்டு
கங்குலியின் யோசனைக்கு தலையசைப்பார்களா ? இந்திய கிரிக்கெட் வீரர்கள்….
கவுண்டி தொடர் போன்ற தொடர்களில் இந்திய வீரர்கள் பங்கேற்க வேண்டும் என்று பிசிசிஐ-யின் தொழில்நுட்பக் கமிட்டியின் தலைவரும், இந்திய அணியின் முன்னாள் வீரருமான சவுரவ் கங்குலி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பேசிய கங்குலி, ரோகித் ஷர்மா, ஷிகர் தவாண், ரவிச்சந்திரன் அஸ்வின், உமேஷ் யாதவ் மற்றும் வருண் ஆரோண் உள்ளிட்ட வீரர்கள் இங்கிலாந்தில் நடக்கும் கவுண்டி கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதன் மூலம் இந்திய அணியின் சிறந்த வீரர்களாக உருவெடுக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் அனுராக் தாக்கூர் உள்ளிட்ட ... Read More »
வரலாறு படைத்த இந்திய கால்பந்து வீரர்
நார்வே கால்பந்து லீக் தொடரில் ஸ்டபக் அணிக்கான ஒப்பந்தம் செய்யப்பட்ட குர்பீரித் சிங், ஸ்டார்ட் அணியுடனான போட்டியில் விளையாடினார். இதன்மூலம் ஐரோப்பிய டிவிஷன் லீக் போட்டியில் விளையாடிய இந்தியாவை சேர்ந்த முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். அந்தப்போட்டியில் ஸ்டபக் அணி ஐந்துக்கு பூஜ்யம் என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து, ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் லாவோஸ் அணியை விளையாடவுள்ள இந்திய அணியில் அவர் இணைகிறார். 24 வயதாகும் குர்பீரித் சிங், உள்நாட்டு தொடரில் ஈஸ்ட் பெங்கால் அணிக்காக விளையாடிய ... Read More »
ஆந்திராவில் புதிதாக 2 கிரிக்கெட் மைதானங்கள்: அனுராக் தாக்கூர் திறந்து வைத்தார்
ஆந்திராவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இரண்டு கிரிக்கெட் மைதானங்களை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் அனுராக் தாக்கூர் திறந்து வைத்தார். வீரர்கள் பயிற்சி பெற வசதியாக நவீன வசதிகளுடன் கூடிய இரண்டு மைதானங்கள் ஆந்திர கிரிக்கெட் சங்கம் மற்றும் கிருஷ்ணா மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் கட்டப்பட்டன. இந்த மைதானங்களை பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்கூர் தொடங்கி வைத்தார். அப்போது வீரர்களுடன் சிறிது நேரம் விளையாடி மகிழ்ந்தார். அதனைத் தொடர்ந்து பேசிய அனுராக், இந்தியாவில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாத வகையில் கிரிக்கெட் மைதானங்களை சீரமைக்க ... Read More »
கிரிக்கெட் வீரர்களுக்கான விருது: சிறந்த பந்துவீச்சாளர் அஸ்வின், சிறந்த வீரர் கோலி
சிறந்த கிரிக்கெட் வீரர்களுக்கான சியட் விருதுகள் வழங்கும் விழா மும்பையில் நடைபெற்றது. வாழ்நாள் சாதனையாளர் விருது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் திலிப் வெங்சர்க்காருக்கு வழங்கப்பட்டது. 2015ஆம் ஆண்டின் சர்வதேச கிரிக்கெட் வீரருக்கான சிறந்த விருதினை இங்கிலாந்தின் ஜோ ரூட் வென்றார். சிறந்த பந்துவீச்சாளருக்கான விருது ரவிச்சந்தின் அஸ்வினுக்கு வழங்கப்பட்டது. 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளுக்கான சிறந்த வீரர் விருதினை விராட் கோலி வென்றார். இந்தியாவின் சிறந்த வீரருக்கான விருது ரோகித் ஷர்மாவுக்கு வழங்கப்பட்டது. அஜிங்கே ரஹானேவுக்கு சிறப்பு விருது அளிக்கப்பட்டது. Read More »
கோஹ்லி கேப்டனாகும் நேரம் வந்துவிட்டது ;ரவி சாஸ்திரி
டெல்லி: அனைத்து வகை ஆட்டத்திற்கும் விராத் கோஹ்லியே கேப்டனாக செயல்படலாம். அதற்கான நேரம் வந்து விட்டது. ஒரே சாதாரண வீரராக டோணி தனது ஆட்டத்தை ரசித்து ஆட வாய்ப்பு தரலாம் என்று இந்திய அணியின் முன்னாள் இயக்குநர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நான் தேர்வுக் குழுத் தலைவராக இருந்திருந்தால் இதைத்தான் செய்திருப்பேன் என்றும் சாஸ்திரி கூறியுள்ளார். டோணி கிரிக்கெட்டை அனுபவித்து ஆடும் நேரம் வந்து விட்டது. கேப்டன் பொறுப்பை கோஹ்லியிடம் கொடுக்கும் நேரமும் வந்து விட்டது என்றும் சாஸ்திரி கூறியுள்ளார். Read More »
மர்ம கும்பலால் கடத்தப்பட்ட கால் பந்து வீரர் ஆலன் பத்திரமாக மீட்பு
மெக்ஸ்கோவில் நேற்று மர்ம கும்பலால் கடத்தப்பட்ட சர்வதேச கால் பந்து வீரர் ஆலன் புலிடோவை மெக்ஸிகோ போலீசார் பத்திரமாக மீட்டுள்ளனர். ஒலிம்பியாகோஸ் என்ற கிரேக்க கிளப்புக்காக விளையாடும் ஆலன், நேற்று ஞாயிற்றுக்கிழமை தனது காதலியுடன் மெக்சிகோ நகரில் உள்ள பார்க்கில் சென்றுள்ளார். அப்போது 6 பேர் கொண்ட கும்பல் அவரை வலுக்கட்டாயமாக கடத்தி சென்றனர். இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் ஆலனை கடத்தி சென்றவர்களை வலைவீசி தேடினர். அப்போது அவர் மர்ம கும்பலிடம் இருந்து பத்திரமாக மீட்கபட்டார். ... Read More »
இந்திய தங்கக்கோப்பை ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் ஏர் இந்தியா அணி இடம்பெறுகிறது
வரும் ஜூன் 1-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை மும்பை மகிந்திரா ஸ்டேடியத்தில் 12-வது குரு தெக் பகதூர் அகில இந்திய தங்கக் கோப்பை ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற உள்ளது. இதில், 10 முதல் 12 அணிகள் வரை விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, ஏர் இந்தியா, சி.ஏ.ஜி, பஞ்சாப் நேஷனல் வங்கி, வெஸ்டர்ன் ரெயில்வே, சென்ட்ரல் ரெயில்வே, மும்பை கஸ்டம்ஸ், யூனியன் பேங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட அணிகள் இடம்பெற உள்ளதாக தெரிகிறது. எனினும், இன்னும் இரண்டு நாட்களுக்குள் இந்த போட்டியில் பங்குபெற ... Read More »
பந்துவீச்சாளர் நெஹராவுக்கு லண்டன் மருத்துவமனையில் ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்தது
இந்திய அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹரா, ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐதராபாத் அணிக்காக ஆடிய போது வலது கால் முட்டியில் காயமடைந்தார். காயத்துக்கு ஆபரேஷன் செய்யும்படி லண்டனைச் சேர்ந்த எலும்பு முறிவு சிகிச்சை நிபுணர் ஆண்ட்ரூ வில்லியம்சன் அறிவுரை வழங்கினார். இந்த நிலையில் நெஹராவுக்கு லண்டனில் உள்ள ஆஸ்பத்திரியில் வெற்றிகரமாக ஆபரேஷன் நடந்து முடிந்துள்ளது. அவர் சீக்கிரம் குணமடைய வாழ்த்துவதாக ஐதராபாத் அணியின் ஆலோசகர் வி.வி.எஸ். லட்சுமண் ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியுள்ளார். Read More »
அகில இந்திய ஆக்கி போட்டி: சென்னை, மும்பை அணிகள் அரை இறுதிக்கு தகுதி
அகில இந்திய ஆக்கி போட்டியில் சென்னை, மும்பை அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றன. மும்பை அணி வெற்றி கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் லட்சுமி அம்மாள் நினைவு கோப்பைக்கான 8–ம் ஆண்டு அகில இந்திய ஆக்கி போட்டி கடந்த 19–ந்தேதி தொடங்கியது. 8–ம் நாளான நேற்று நடந்த முதலாவது கால் இறுதி போட்டியில் மும்பை ஆர்.சி.எப். அணியும், பெங்களூரு ஆக்கி அணியும் மோதின. ஆட்டத்தின் 23–வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி மும்பை அணி வீரர் விஜய் தபா ... Read More »