தமிழகத்தைச் சேர்ந்த பளுதூக்குதல் வீரர் சதீஷ் சிவலிங்கம் ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். மகளிர் பிரிவில் மணிப்பூரைச் சேர்ந்த மீராபாய் சானுவும் ஒலிம்பிக் வாய்ப்பை பெற்றுள்ளார். உஸ்பெகிஸ்தானில் கடந்த ஏப்ரலில் நடந்த ஆசிய சீனியர் பளுதூக்குதல் போட்டியின் மூலம் ஒலிம்பிக் போட்டிக்கான இரண்டு இடங்களை இந்தியா உறுதி செய்திருந்தது. இவ்விரு இடங்களுக்கான வீரர், வீராங்கனையை தேர்வு செய்யும் தகுதிப் போட்டி பாட்டியாலாவில் நடந்தது. தகுதிச் சுற்றில் சிறப்பாக செயல்பட்ட சதீஷ் சிவலிங்கமும், மீராபாய் சானுவும் ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்பார்கள் ... Read More »
விளையாட்டு
ஜிம்பாப்வே அணி உடனான தொடரை முழுமையாக கைப்பற்றியது இந்திய அணி
ஜிம்பாப்வே அணி உடனான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி எளியதாக வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை மூன்றுக்கு பூஜ்யம் என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. ஹராரேவில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 123 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 124 ரன்கள் வெற்றி இலக்கை இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 22 ஆவது ஓவரிலேயே எட்டியது. Read More »
முதல் ஒருநாள் போட்டியிலேயே சதமடித்த முதல் இந்திய கிரிக்கெட் வீரர்!
தான் பங்கேற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலேயே சதமடித்த முதல் இந்திய கிரிக்கெட் வீரர் என்ற சிறப்பை லோகேஷ் ராகுல் பெற்றுள்ளார். ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று 20ஓவர் போட்டிகளில் பங்கேற்கிறது. இரு அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று ஹராரேவில் நடைபெற்றது. இளம்வீரர்கள் கொண்ட அணியுடன் கேப்டன் தோனி தலைமையிலான இந்திய அணி பங்கேற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனை அடுத்து, முதலில் களமிறங்கிய ... Read More »
2-வது முறையாக சாம்பியன் பட்டம் : சாய்னா நேவாலுக்கு பிரதமர் மோடி பாராட்டு 2-வது முறையாக சாம்பியன் பட்டம் : சாய்னா நேவாலுக்கு பிரதமர் மோடி பாராட்டு
ஆஸ்திரேலிய ஓபன் பேட்மின்டனில் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீராங்கனை சாய்னா நேவாலுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். சாய்னா எதிர்காலத்தில் மேலும் பல பட்டங்களை வென்று நாட்டுக்கும் தெலங்கானாவுக்கும் பெருமை சேர்ப்பார் என சந்திரசேகர ராவ் தனது பாராட்டுச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். சிட்னியில் நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் பேட்மின்டன் போட்டி இறுதி ஆட்டத்தில் சீன வீராங்கனை சன் யு – வை வீழ்த்தி இந்திய வீராங்கனை சாய்னா கோப்பையை கைப்பற்றியிருந்தார். Read More »
ஆஸ்திரேலிய அணியின் இந்திய சுற்றுப் பயணம் அறிவிப்பு
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியா வருகிறது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியாவிற்கு வரும் ஆஸ்திரேலிய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணியுடன் விளையாடவுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான போட்டிகள் பெங்களூரு, தர்மசாலா, ராஞ்சி, புனே ஆகிய நகரங்களில் நடைபெறவுள்ளன. Read More »
கோஹ்லி செய்த ஒரு காரியத்தால் கண்ணீர் விட்ட சச்சின்
மும்பை: முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கோஹ்லி செய்த ஒரு காரியத்தால் கண்ணீர்விட்டுள்ளார். கிரிக்கெட் விளையாட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கருடன் விராட் கோஹ்லியை பலரும் ஒப்பிட்டு வருகிறார்கள். முதலில் கோஹ்லி 15 ஆண்டுகள் விளையாடட்டும் அதன் பிறகு அவரை சச்சினுடன் ஒப்பிடுவது பற்றி பார்க்கலாம். எனமுன்னாள்இலங்கைபந்துவீச்சாளர்முத்தையாமுரளிதரன்தெரிவித்துள்ளார். இது கடந்த 2013ம் ஆண்டு நடந்தது. மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியை முடித்துவிட்டு சச்சின் உடைமாற்றும் அறையில் அமர்ந்திருந்தார். அங்கு வந்த கோஹ்லி ஒரு கயிறை அவரிடம் கொடுத்து ... Read More »
கோடிகளை அள்ளும் விளையாட்டு வீரர்கள் பட்டியல் : கிறிஸ்டியானோ ரொனல்டோவிற்கு முதலிடம்
கடந்த ஓராண்டில் கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டிய விளையாட்டு வீரர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த பந்தயத்தில் கால்பந்து ஜாம்பவான்களான ரொனால்டோவும், மெஸ்ஸியும், முந்தி நிற்கின்றனர். விளையாட்டு என்பது வெறும் விளையாட்டல்ல.திறமையை நிரூபிக்கும் பட்சத்தில் போட்டிகள், விளம்பரங்கள் என பல்வேறு தளங்களில் வீரர்களுக்கு கோடிகளை ஈட்டித்தரும். அந்த வகையில் சர்வதேச அளவில் விளையாட்டு மூலம் அதிகம் சம்பாதிக்கும் வீரர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் இதழ் ஆசிரியர் வெளியிட்டார். இதில் போர்ச்சுகலை சேர்ந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனல்டோ முதலிடம் பிடித்துள்ளார். ஸ்பெயினின் ரியல் மேட்ரிட் அணிக்காக ... Read More »
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி: தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது இந்தியா
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டித்தொடர் அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறுகிறது. இந்த போட்டித்தொடரில் கிரிக்கெட் போட்டித்தொடரின் பரம வைரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே பிரிவில் இடம் பெற்றுள்ளன. ஈட்பங்ஸ்டன் மைதானத்தில் ஜூன் 4 ஆம் தேதி நடைபெறும் தனது முதல் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. ஜூன் 1 ஆம் தேதி துவங்கி 18 ஆம் தேதி வரை 18 நாட்கள் நடைபெறும் இந்த போட்டித்தொடரின் முதல் போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் போட்டியை நடத்தும் இங்கிலாந்து அணி வங்காளதேச அணியை ... Read More »
16 வயதுக்குட்பட்டோர் அணியில் சாதனை வீரரை ஓரம்கட்டி சச்சின் மகனுக்கு வாய்ப்பு
மும்பையை அடுத்த கல்யாணில் நடந்த பள்ளி அணிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் (16 வயதுக்குட்பட்டோர்) கே.சி.காந்தி மேல்நிலைப்பள்ளி மாணவர் பிரணவ் தனவாடே 1,009 ரன்கள் (323 பந்து, 129 பவுண்டரி, 59 சிக்சர்) குவித்து உலக சாதனை படைத்தார். பண்டாரி கோப்பைக்கான போட்டியில் ஆர்.கே.காந்தி பள்ளிக்காக ஆடிய அவர் ஆர்ய குருகுல பள்ளிக்கு எதிராக இந்த சாதனையை புரிந்தார்.10-ம் வகுப்பு மாணவ ரான பிரணவ் 396 நிமிடங் கள் களத்தில் நின்று 327 பந்துகளில் 1009 ரன்களை குவித்தார். இதில் 129 பவுண் டரிகளும், 59 ... Read More »
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து இலங்கை வீரர் குலசேகரா ஓய்வு
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி பந்து வீச்சாளர்களில் ஒருவரான நுவன் குலசேகரா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும், தொடர்ந்து ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் கவனம் செலுத்த உள்ளதாகவும், டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற இதுவே சரியான தருணம் என்றும் குலசேகரா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். 2005 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான குலசேகரா 21 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 48 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். கடைசியாக கடந்த ... Read More »