ரியோ டி ஜெனீரோவில் அடுத்த மாதம் நடக்கும் ஒலிம்பிக் போட்டிக்கான ஆஸ்திரேலிய மல்யுத்த அணியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த வினோத்குமார் (66 கிலோ) இடம் பெற்று இருந்தார். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் அல்ஜீரியாவில் நடந்த ஒலிம்பிக் தகுதி சுற்று போட்டியில் நடத்தப்பட்ட பரிசோதனையில் வினோத்குமார் ஊக்க மருந்து பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. இதனால் அவருக்கு 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து ஒலிம்பிக் அணியில் இருந்து வினோத்குமாரை நீக்கும்படி ஆஸ்திரேலிய மல்யுத்த சம்மேளனத்துக்கு அந்த நாட்டு ஒலிம்பிக் கவுன்சில் கேட்டுக்கொண்டுள்ளது. இதனால் வினோத்குமார் ... Read More »
விளையாட்டு
வெளிநாடுகளில் மினி ஐபிஎல் கிரிக்கெட்;இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் திட்டம்
இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து வெளிநாடுகளில் மினி ஐபிஎல் கிரிக்கெட் தொடரை நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் திட்டமிட்டுள்ளது. ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத்தில் இந்தப் போட்டியை நடத்துவது என தர்மசாலாவில் நடந்த செயற்குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரில் விளையாடும் 8 அணிகளும், மினி ஐபிஎல் போட்டிகளிலும் பங்கேற்கும் என பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். இரண்டு முதல் 3 வாரங்களுக்குள் போட்டிகளை நடத்தி முடிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தொடர் நடைபெறும் தேதி, வடிவம் ... Read More »
இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக கும்ப்ளே தேர்வு
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக அனில் கும்ப்ளே தேர்வு செய்யப்பட்டுள்ளார். தலைமை பயிற்சியாளர் பதவிக்கு 57 பேர் விண்ணப்பித்திருந்தனர். அதில் சச்சின், லட்சுமணன், கங்குலி ஆகியோர் அடங்கிய குழுவின் பரிந்துரையை ஏற்று, பிசிசிஐ அனில் கும்ப்ளேவைத் தேர்வு செய்தது. அதன் படி ஒரு ஆண்டுகால ஒப்பந்தத்தில் தலைமை பயிற்சியாளராக அனில் கும்ப்ளே இருப்பார். கும்ப்ளே 132 டெஸ்ட், 271 ஒரு நாள் போட்டிகளில் விளையாயுள்ளார். இதில் டெஸ்ட் போட்டிகளில் 619 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டிகளில் 337 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். Read More »
ரிக்கி பாண்டிங்-கின் சாதனையை சமன் செய்தார் டோனி இந்திய அணிக் கேப்டன் தோனி
சர்வதேச கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் கேப்டனாக பணியாற்றியுள்ள ஆஸ்திரேலியாவை சேர்ந்த முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங்-கின் சாதனையை, இந்திய அணிக் கேப்டன் தோனி சமன் செய்துள்ளார். ஜிம்பாப்வே அணியுடனான மூன்றாவது ட்வெண்டி ட்வெண்டி போட்டியில் இந்த சாதனையை தோனி நிகழ்த்தினார். டெஸ்ட், ஒருநாள், ட்வெண்டி ட்வெண்டி என மூன்று வகையான கிரிக்கெட்டிலும் இதுவரை 324 ஆட்டங்களில் தோனி கேப்டனாக செயல்பட்டுள்ளார். Read More »
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் யார் ? அனில் கும்ப்ளே, ரவி சாஸ்திரி ஆகியோருக்கு பயிற்சியாளர் பட்டியலில் இடம் .
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு 57 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில், தகுதியான நபர்களைத் தேர்வு செய்து அறிக்கை அளிக்கும்படி, சச்சின் டெண்டுல்கர், சவுரங் கங்கூலி, வி.வி.எஸ். லட்சுமணன் ஆகியோர் அடங்கிய ஆலோசனைக் குழுவை பிசிசிஐ கேட்டுக்கொண்டது. அதன்படி அனில் கும்ப்ளே, ரவி சாஸ்திரி, டாம் மோடி, ஸ்டுவர்ட் லா உள்ளிட்டோரிடம் இந்தக் குழுவினர் நேர்காணல் நடத்தினர். இந்த ... Read More »
இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் ரியோ ஒலிம்பிக் போட்டியில் விளையாட அனுமதி மறுப்பு
ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் சிறப்பு அனுமதி மூலம் பங்கேற்க வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இந்திய குத்துச்சண்டை சம்மேளனத்தின் கோரிக்கையை , சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி நிராகரித்துள்ளதாக சர்வதேச குத்துச்சண்டை சம்மேளனம் அறிவித்துள்ளது. இதன் மூலம் ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் மேரி கோமின் கனவு தகர்ந்தது. தகுதிச் சுற்றில் மேரி கோம் தோல்வி அடைந்ததால், ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வைல்டு கார்டு எனப்படும் சிறப்பு அனுமதி மூலம் வாய்ப்பு அளிக்க கோரிக்கை வைக்கப்பட்டது. மேரி கோம் கடந்த 2012ஆம் ... Read More »
டி20 வரலாற்றில் இந்திய அணிக்கு 10 விக்கெட் வித்தியாசத்தில் முதல் வெற்றி இளம் வீரர்கள் அசத்தல்
ஜிம்பாப்வே அணியுடனான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை ஈட்டியது. ஹராரேவில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 99 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக பீட்டர் மூர் 31 ரன்கள் எடுத்தார். இந்திய அணியில் அறிமுக வீரராக களமிறங்கிய பரிந்தர் ஸ்ரன் சிறப்பாக பந்துவீசி 10 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா ... Read More »
சர்வதேச யோகா தினம் -தர்மசாலாவில் முன்னணி கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்ப்பு
இமாச்சலப் பிரதேசம் தர்மசாலாவில் நடந்த சர்வதேச யோகா நிகழ்ச்சியில் பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்குர் மற்றும் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர். சர்வதேச யோகா தினத்தின் 2 ஆம் ஆண்டு கொண்டாட்டங்கள் உலகம் முழுவதும் களைகட்டியுள்ளன. இதற்காக இந்தியா முழுவதும் சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதன் ஒருபகுதியாக இமாச்சலப்பிரதேசத்தின் தர்மசாலா மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த யோகா நிகழ்ச்சியில் பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்குர் மற்றும் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஆகியோர் கலந்துகொண்டு யோகா ... Read More »
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளருக்கான நேர்காணல் அனில் கும்ளே,ரவி சாஸ்திரி, ஆகியோர் பங்கேற்ப்பு
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளருக்கான நேர்காணல் மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் இன்று நடக்க உள்ளது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ளே, இந்திய அணியின் முன்னாள் இயக்குனர் ரவி சாஸ்திரி, முன்னாள் தேர்வுக் குழுத் தலைவர் சந்தீப் படேல் ஆகியோர் நேர்காணலில் பங்கேற்கின்றனர். இவர்களைத் தவிர விக்ரம் ராதோர், பிரவீன் ஆம்ரே, பல்விந்தர் சாந்து, வெங்கடேஷ் பிரசாத் உள்ளிட்ட 21 பேரும் பங்கேற்கின்றனர். இவர்களை சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, வி.வி.எஸ் லக்ஷ்மண் ஆகியோர் அடங்கிய இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் ... Read More »
இந்தியா-ஜிம்பாப்வே அணிகள் மோதும் முதல் 20 ஓவர் போட்டி இன்று தொடக்கம்
இந்தியா-ஜிம்பாப்வே அணிகள் மோதும் 3 ஆட்டம் கொண்ட 20 ஓவர் போட்டி தொடர் இன்று ஹராரேவில் தொடங்குகிறது. ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஒரு நாள் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. இந்நிலையில் இரு அணிகளும் மோதும் முதல் டி20 போட்டி ஹராரேவில் இந்திய நேரப்படி இன்று மாலை 4.30 மணிக்கு நடக்கிறது. ஒருநாள் போட்டி தொடரை இழந்த ஜிம்பாவே அணி நெருக்கடியில் உள்ளது. டி20 தொடரை வெல்லும் முனைப்பில் களம் இறங்கும் ... Read More »