Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
விளையாட்டு | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News | Page 22
Thursday , 7 July 2022
Home » விளையாட்டுpage 22

விளையாட்டு

பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் – கால் இறுதிக்கு ஜோகோவிச் தகுதி

பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் 4-6, 6-2, 6-3 என்ற செட் கணக்கில் டிமிட்ரோவை (பல்கேரியா) வீழ்த்தி கால்இறுதிக்கு தகுதி பெற்றார். அவர் கால்இறுதியில் மரீன் சிலிச்சை (குரோஷியா) எதிர்கொள்கிறார்.இதேபோல் கால் இறுதியில் ஆன்டிமுர்ரே (இங்கிலாந்து) தாமஸ் பெர்டிச் (செக்குடியரசு), ரோனிக் (கனடா)- சோங்கா (பிரான்ஸ்), இஸ்னர்-சோக் (அமெரிக்கா) மோதுகிறார்கள். Read More »

தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா ; நியூசிலாந்துக்கு எதிரான 4 வது ஆட்டம்

இந்திய-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் இன்று நடைபெறுகிறது. இந்நிய- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 4-வது ஒருநாள் கிரிக்கெட் ராஞ்சியில் இன்று மதியம் ஒன்றரை மணியளவில் தொடங்குகிறது. இந்த தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. எனவே இன்றைய போட்டியிலும் வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றி விடலாம் என்ற முனைப்புடன் இந்திய அணி களமிறங்க உள்ளது. அதே நேரத்தில் ஏற்கனேவ ஒரு போட்டியில் வென்றுள்ள நியூசிலாந்து அணி இன்றைய ஆட்டத்தை ... Read More »

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி‎: இந்தியா வெற்றி

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கியில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான விறுவிறுப்பு நிறைந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. மலேசியாவின் குவண்டன் நகரில் நடைபெற்ற போட்டியில் நடப்புச் சாம்பியனான பாகிஸ்தான் அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடியது. இந்த போட்டிக்கு இரு நாட்டு ரசிகர்களிடமும் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது.ஆட்டத்தின் 22-வது நிமிடத்தில் பர்தீப் மோர் கோல் அடித்து இந்திய அணியை முன்னிலை பெற செய்தார்.இதன்பின்னர் ரிஸ்வான், இர்பான் ஆகியோர் அடுத்தடுத்து கோல் அடித்து பாகிஸ்தான் அணியை முன்னிலை பெற செய்தனர். பாகிஸ்தான் வீரர்கள் அடுத்தடுத்து ... Read More »

9,000 ரன்களை எட்டி டோனி சாதனை….

இந்திய கிரிக்கெட் அணிக் கேப்டன் தோனி, சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 9.000 ரன்களை கடந்து சாதனை புரிந்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் கேப்டன் தோனி 22 ரன்கள் எடுத்திருந்த போது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 9,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார். இப்போட்டியில் தொடர்ந்து விளையாடிய அவர், 80 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார். இதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 9.000 ரன்களை கடந்த ஐந்தாவது இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை தோனி பெற்றார். இதற்கு ... Read More »

உலகக்கோப்பை கபடி போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா – ஈரான் பலப்பரீட்சை

அஹமதாபாத்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கபடி போட்டியில் இன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் இந்தியா – ஈரான் அணிகள் மோதுகின்றன. நேற்று நடைபெற்ற அரையிறுதியில் ‘ஏ’ பிரிவில் 2வது இடம்பிடித்த இந்திய அணி, ‘பி’ பிரிவில் முதலிடம் பிடித்த தாய்லாந்து அணியை எதிர்த்து விளையாடியது. இந்தப்போட்டியில் இந்திய அணியின் தாக்குதல் ஆட்டத்திற்கும், தடுப்பாட்டத்திற்கும் முன்னால் தாய்லாந்து அணியில் போட்டி கொடுக்க முடியவில்லை. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி முடிவில் 53 புள்ளிகள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை ஈட்டியது. இதேபோல், அனல்பறந்த மற்றொரு ... Read More »

சாதனைப் பயணத்தில் அடுத்த மைல்கல்லை எட்டுவார் தோணி ;கிரிக்கெட் ரசிகர்கள் நம்மிக்கை

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 9 ஆயிரம் ரன்களைக் கடந்த 5ஆவது இந்திய வீரர் என்ற சாதனையைப் படைக்க தோனிக்கு இன்னும் 22 ரன்களே தேவை. இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3ஆவது ஒருநாள் போட்டி பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் நாளை நடக்கிறது. இந்த போட்டியில் 22 ரன்கள் எடுப்பதன் மூலம் 9 ஆயிரம் ரன்களை என்ற மைல்கல்லை எட்டும் இந்திய அணியின் கேப்டன் தோனி, சர்வதேச அளவில் இந்த சாதனையைப் படைக்கும் 17ஆவது வீரர் என்ற பெருமையைப் பெறுவார். இந்திய அளவில் சச்சின் டெண்டுல்கர், சவுரவ் ... Read More »

நியூசி.யுடனான 2வது ஒரு நாள் போட்டி: இந்தியா தோல்வி

நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி  தோல்வி அடைந்தது. இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது ஒரு நாள் போட்டி டெல்லி பெரோஷ்ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது.டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் தோனி, பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து பேட்டிங்கைத் தொடங்கிய நியூசிலாந்து அணி, ரன் கணக்கை தொடங்கும் முன்பே, முதல் விக்கெட்டை இழந்தது. தொடக்க வீரர் மார்டின் கப்தில், உமேஷ் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து கேப்டன் கேன் வில்லியம்சனும், டாம் லாதமும் நிதானமாக ... Read More »

டெஸ்ட் தரவரிசையில் இந்தியா மீண்டும் முதலிடம்..

இந்தூர் டெஸ்ட் முடிவுக்குப் பின்னர் டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான தண்டாயுதத்தினை கிரிக்கெட் ஜாம்பவான் கவாஸ்கர் இந்திய அணிக்கு வழங்குவார் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது. நியூசிலாந்து அணிக்கெதிரான முதல் 2 போட்டிகளையும் வென்ற இந்திய அணி, சர்வதேச டெஸ்ட் தரவரிசையில் பாகிஸ்தானைப் பின்னுக்குத் தள்ளி மீண்டும் முதலிடம் பிடித்தது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டியின் முடிவுக்குப் பின்னர் வெளியிடப்பட இருக்கிறது. இதையடுத்து சர்வதேச டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்த இந்திய அணிக்கு டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான தண்டாயுதம் வழங்கப்பட ... Read More »

இந்தூரில் இந்தியா அபார வெற்றி: அஷ்வினின் அபார பந்து வீச்சால் 321 ரன்கள் வித்தியாசத்தில் நியூசி.யை வீழ்த்தியது

நியூசிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 321 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றது. மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் நடந்த இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 557 ரன்களும், நியூசிலாந்து அணி 299 ரன்களும் எடுத்தன. இதையடுத்து 259 ரன்கள் முன்னிலையுடன் 2ஆவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி, 3 விக்கெட் இழப்புக்கு 216 ரன்களில் டிக்ளேர் செய்து 475 ரன்களை நியூசிலாந்து அணிக்கு வெற்றி ... Read More »

சீன ஓபன் டென்னிஸ் – முர்ரே, ராட்வன்ஸ்கா சாம்பியன்

சீன ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி பீஜிங் நகரில் கடந்த ஒரு வார காலமாக நடந்து வந்தது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் அக்னீஸ்கா ராட்வன்ஸ்காவும் (போலந்து), ஜோஹன்னா கோன்டாவும்(இங்கிலாந்து) மோதினர். அபாரமாக ஆடிய அனுபவம் வாய்ந்த ராட்வன்ஸ்கா 6-4, 6-2 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று பட்டத்தை தனதாக்கினார். தரவரிசையில் 3-வது இடம் வகிப்பவரான ராட்வன்ஸ்கா சீன ஓபன் பட்டத்தை வெல்வது 2-வது முறையாகும். ஏற்கனவே 2011-ம் ஆண்டிலும் இங்கு வாகை சூடியிருக்கிறார். மொத்தத்தில் இது அவரது ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com