ராஜ்கோட்டில் நடைபெற்ற இங்கிலாந்துடனான முதல் டெஸ்ட் போட்டியின் போது விராட் கோலி எச்சிலை கொண்டு பந்தை மெருகேற்றியதாக புகார் எழுந்தது. அதையடுத்து விராட் கோலி மீது விசாரணை நடத்த வேண்டும் என்று எழுந்த கோரிக்கையை சர்வதேச கிரிக்கெட் வாரியம் நிராகரித்துள்ளது. ஆஸ்திரேலியவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது தென்னாப்பிரிக்க அணிக் கேப்டன் டூ பிளஸ்ஸி பந்தை சேதப்படுத்திய பிரச்னை விஸ்வரூம் எடுத்ததை தொடர்ந்து, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நிர்வாகிகள் டூ பிளஸ்ஸியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் வாயில் ஜெல்லியை மென்று, அதனை ... Read More »
விளையாட்டு
வெற்றி முனைப்பில் இந்தியா …மீதமுள்ள 4 விக்கெட்டுகளை கைப்பற்ற பந்து வீட்ச்சாளர்கள் தீவிரம்
இந்தியா – இங்கிலாந்து அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியின், 4-வது நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளையின் போது இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 204 ரன்கள் எடுத்திருந்தது . இதன்மூலம் இங்கிலாந்து அணிக்கு 405 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி. கேப்டன் விராட் கோலி 56 ரன்களுடனும், ரஹானே 22 ரன்களுடனும் களத்தில் இருந்த நிலையில் இந்திய அணி இன்று 4-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. சீரான இடைவெளியில் இந்திய அணி வீரர்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். எனினும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ... Read More »
இந்திய வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்கமுடியாமல் இங்கிலாந்து வீரர்கள் தினற்றம்
இந்தியா – இங்கிலாந்து இடையேயான 2 வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்கமுடியாமல் இங்கிலாந்து வீரர்கள் தடுமாறி வருகின்றனர். விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 455 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சிறப்பாக விளையாடிய கேப்டன் விராட் கோலி 167 ரன்கள் குவித்தார். பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி இந்திய வீரர்களின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.அந்த அணியில் ஜோ ரூட் அதிகபட்சமாக 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.2 ஆம் ... Read More »
மகளிர் கிரிக்கெட் போட்டி;மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3-ஆவது ஒரு நாள் ஆட்டத்தில் இந்தியா வெற்றி
மகளிர் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3-ஆவது ஒரு நாள் ஆட்டத்தில் 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது இந்தியா. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி, மேற்கிந்தியத் தீவுகளை “ஒயிட் வாஷ்’ ஆக்கியது. விஜயவாடாவில் புதன்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக வேதா கிருஷ்ணமூர்த்தி 71 ரன்களும், ... Read More »
உற்சாகத்தோடு களமிறங்குகிறது இந்திய அணி ;இரண்டாவது டெஸ்ட் இன்று தொடக்கம்
இந்தியா-இங்கிலாந்து இடையிலான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் வியாழக்கிழமை தொடங்குகிறது. முதல் போட்டி டிராவில் முடிந்த நிலையில், விசாகப்பட்டினத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் வென்று தொடரில் முன்னிலை பெறும் முனைப்பில் களமிறங்குகிறது இந்தியா. அதேநேரத்தில் இங்கிலாந்து அணி, கடந்தப் போட்டியில் இந்தியாவை தோல்வியின் விளிம்பு வரை கொண்டு சென்றது. அதனால் அந்த அணியும் அபாரமாக ஆட முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியைப் பொறுத்தவரையில் காயத்திலிருந்து முழுமையாக குணமடைந்துவிட்ட தொடக்க வீரர் கே.எல்.ராகுல் இந்த ஆட்டத்தில் களமிறங்குகிறார். அதனால் கடந்தப் போட்டியில் தொடக்க ... Read More »
மருத்துவமனையில் ரோகித் ஷர்மா…
இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் ஷர்மா அறுவை சிகிச்சைக்கு பின், தான் மருத்துவமனை படுக்கையில் இருக்கும் போட்டைவை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி நியூசிலாந்துக்கு எதிராக விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 5-ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் ஷர்மாவுக்கு வலது தொடைப்பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து இந்திய கிரிக்கெட் வாரியம் கருத்து தெரிவிக்கையில், ரோகித் ஷர்மா தொடைப்பகுதி காயம் காரணமாக லண்டன் சென்று மருத்துவ நிபுணரை சந்தித்து ஆலோசிக்க உள்ளதாகவும், அவருக்கு அறுவை சிசிக்சை மேற்கொள்ளப்படலாம் ... Read More »
ஐ.பி.எல். கிரிக்கெட் – வீரர்களின் ஏலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 4-ந்தேதி நடைபெறும்
ஐ.பி.எல். ஆட்சி மன்ற குழு கூட்டம் அதன் தலைவர் ராஜீவ் சுக்லா தலைமையில் டெல்லியில் நேற்று நடந்தது. பின்னர் ராஜீவ் சுக்லா நிருபர்களிடம் கூறுகையில், ‘10-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2017) ஏப்ரல் 5-ந்தேதி தொடங்குவதற்கு பரிந்துரை செய்துள்ளோம். இதையொட்டி வீரர்களின் ஏலம் பெங்களூருவில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 4-ந்தேதி நடைபெறும்’ என்றார். Read More »
ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்கா முதல் டெஸ்ட் கிரிக்கெட் – தென்ஆப்பிரிக்கா அபார வெற்றி
ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்றது. முதல் இன்னிங்சில் தென்ஆப்பிரிக்கா 242 ரன்னும், ஆஸ்திரேலியா 244 ரன்னும் எடுத்தன. 2 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்கா டுமினி, எல்கர் ஆகியோரின் அபார சதத்தால் 8 விக்கெட் இழப்புக்கு 540 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. இதனால் ஆஸ்திரேலியாவுக்கு 539 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா நேற்றைய 4-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு ... Read More »
ஆசிய கிளப் கால்பந்து – பெங்களூரு எப்.சி. அணி இறுதிப்போட்டியில் தோல்வி
ஆசிய கால்பந்து கூட்டமைப்பு கோப்பைக்கான கிளப் கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் தோகாவில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் பெங்களூரு எப்.சி. (இந்தியா), அல் குவா அல் ஜாவியா கிளப் (ஈராக் விமானப்படை) அணிகள் பலப்பரீட்சை நடத்தின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ஈராக் விமானப்படை அணியினர் வசம் பந்து அதிக நேரம் இருந்தாலும், பெங்களூரு எப்.சி. அணி தனது சிறப்பான தடுப்பு ஆட்டத்தின் மூலம் எதிரணியின் கோல் அடிக்கும் முயற்சிகளை முறியடித்தது. முதல் பாதியில் கோல் எதுவும் விழவில்லை. 69-வது நிமிடத்தில் ஈராக் விமானப்படை ... Read More »
ஆசிய பெண்கள் ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டி – : இறுதிப்போட்டியில் இந்தியா
பெண்களுக்கான 4-வது ஆசிய ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. 5 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் நேற்று நடந்த கடைசி லீக்கில் இந்தியா-சீனா அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 57-வது நிமிடம் வரை 2-2 என்ற கணக்கில் சமநிலை நீடித்தது. இந்திய அணியில் பூனம் ராணி, வந்தனா கோல் அடித்தனர். ஆட்டம் முடிய 2 நிமிடம் இருக்கையில் சீனாவின் ஜிஸியாவ் கோல் அடித்து வெற்றியை தட்டிப்பறித்தார். முடிவில் 2-3 என்ற கோல் கணக்கில் இந்தியா தோல்வியை தழுவியது. லீக் முடிவடைந்த ... Read More »