இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா தனது மனைவி ரீவா சோலங்கியுடன் காரில் சென்ற போது விபத்தில் சிக்கினார். இங்கிலாந்துடனான டி20 தொடரிலிருந்து ரவீந்திர ஜடேஜாவுக்கு ஒய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் தனது குடும்பத்தினருடன் நேரங்களை செலவழித்து வருகிறார். இந்நிலையில் குஜராத் மாநிலம் ஜாம்நகரில் ரவீந்திர ஜடேஜா தனது மனைவி ரீவா சோலங்கியுடன் காரில் சென்று கொண்டிருந்த போது பீரீத்தி சர்மா என்ற கல்லூரி மாணவியின் இரு சக்கர வாகனத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காயமடைந்த பீரீத்தி சர்மாவை ... Read More »
விளையாட்டு
”ஒன்றுக்கு ஓன்று” சளைத்ததில்லை ;இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அபாரம் !!
இங்கிலாந்து அணிக்கெதிரான 2ஆவது டி20 போட்டியில் இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. நாகபூரில் நடந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி, கே.எல்.ராகுலின் 71 ரன்கள் உதவியுடன் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு, அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி நெஹ்ரா அதிர்ச்சி அளித்தார். இந்த இழப்பிலிருந்து கடைசிவரை மீளாத இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 139 ... Read More »
முதல் டி20 கிரிக்கெட்- இந்தியாவை வீழ்த்தியது இங்கிலாந்து
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் இன்று கான்பூரில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன் பீல்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் ரெய்னா, புதுமுக வீரராக பர்வேஸ் ரசூல் ஆகியோர் இடம்பிடித்தனர்.முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் சேர்த்தது. பின்னர் 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணியின் ராய், பில்லிங்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ... Read More »
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் – இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் வீனஸ் வில்லியம்ஸ்
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இன்று மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் ஒரு ஆட்டத்தில் அமெரிக்காவின் முன்னணி வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ், சக நாட்டு வீராங்கனை கோகோ வேன்டேவேக் இருவரும் பலப்பரீட்சை நடத்தினர்.விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் வீனஸ் வில்லியம்ஸ் 6-7 (3-7) 6-2 6-3 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.மற்றொரு அரையிறுதியில் வீனசின் சகோதரியான செரீனா வில்லியம்ஸ், குரோஷியாவின் மிர்ஜானா லூசிக் பரோனி இருவரும் விளையாடி ... Read More »
தோனி, பி.வி.சிந்துவுக்கு பத்ம விருதுகள்;கௌரவிக்கும் மத்திய அரசு
இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி, ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற பாட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து உள்ளிட்டோருக்கு இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பல்வேறு துறைகளில் அளப்பரிய சாதனைப் படைத்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்ம விபூஷண் ஆகிய பத்ம விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் பெறுவோரின் பட்டியலை மத்திய அரசு தயாரித்து வருகிறது. இந்த விருதுகளுக்கு விளையாட்டுத் துறை சார்பில் கிரிக்கெட் வீரர் மகேந்திர ... Read More »
புதிய வீரர்களுக்கு வாய்ப்பு ;அஸ்வின், ரவீந்திர ஜடேஜாவுக்கு ஓய்வு !!
இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்குப் பதிலாக பர்வீஸ் ரசூல், அமித் மிஸ்ரா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: சீனியர் தேர்வுக் குழுவும், இந்திய அணி நிர்வாகமும் கலந்தாலோசித்த பிறகு சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின், ஜடேஜா ஆகியோருக்கு ஓய்வளிப்பது என முடிவெடுக்கப்பட்டது என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியா-இங்கிலாந்து இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் ... Read More »
பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா வெற்றி-தொடரை கைப்பற்றியது
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஒடிசா மாநிலத்தில் உள்ள கட்டாக்கில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பீல்டிங் தேர்வு செய்தது.இதனையடுத்து விளையாடிய இந்திய அணி யுவராஜ் சிங்(150) மற்றும் டோனி(134) ஆகியோரின் அபார சதத்தால் 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 381 ரன்கள் குவித்தது.பின்னர் 382 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் இங்கிலாந்து அணி விளையாட தொடங்கியது. ஆனால் அந்த அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 366 ரன்கள் ... Read More »
மீண்டும் அணித்தலைவர் பொறுப்பேற்கிறார் தோனி ….
இந்தியா ஏ அணியுடனான பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி இன்று விளையாடுகிறது. ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய தோனியின் தலைமையில் இந்தியா ஏ அணி களமிறங்குகிறது. மற்றொரு அனுபவ வீரரான யுவராஜ் சிங்கும் இந்தப்போட்டியில் களமிறங்கவுள்ளார். மும்பையில் நடைபெறும் இந்தப்பேட்டி மதியம் 1.30 மணியளவில் தொடங்குகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்த இங்கிலாந்து அணி 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடியது. இதில் அபாரமாக விளையாடிய இந்திய அணி 0–4 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளும் ... Read More »
தோனி ஒரு சிறந்த அணித்தலைவர் யுவராஜ் சிங் புகழாரம் ….
இந்திய அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து தோனி விலகியது சரியான முடிவு என்று யுவராஜ் சிங் கூறியுள்ளார். இதுதொடர்பாக பேசிய யுவராஜ் சிங், தோனியின் தலைமையின் கீழ் டி20 உலகக்கோப்பை, ஒருநாள் போட்டி உலகக் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் கோப்பை ஆகியவற்றை இந்திய அணி வென்றுள்ளது. அதுமட்டுமில்லாமல் தோனியின் தலைமையின் கீழ் இந்திய அணி சர்வதேச டெஸ்ட் ரேங்கிங்கில் முதலிடம் பிடித்தது. எல்லா கேப்டன்களாலும் இந்த சாதனையை சாத்தியமாக்க முடியாது. கேப்டன் பொறுப்பிலிருந்து தோனி விலக முடிவு செய்தது சரியானதே என்றார். 2019ம் ஆண்டு உலகக் ... Read More »
டோனியின் முடிவை நான் மதிக்கிறேன்;சச்சின் டெண்டுல்கர்
இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் அணித்தலைவர் டோனி நேற்று திடீரென்று பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இந்நிலையில் அவரின் ரசிகர்கள் பலரும் இந்த முடிவை ஏற்க மறுத்து வரும் நிலையில், இந்திய அணியின் மாஸ்டர் ப்ளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் டோனியின் முடிவை நான் மதிக்கிறேன் என்று புகழாரம் சூட்டியுள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், மிகச் சிறந்த கேப்டனாக இந்தியாவிற்கு பல வெற்றிகளை பெற்று தந்தவர் டோனி.இந்திய அணியில் அதிரடி ஆட்டக்காரராய் நுழைந்த இவர் கேப்டனாக மாறிய வளர்ச்சியை நான் அருகிலிருந்தே பார்த்திருக்கிறேன். இப்படிபட்ட கூல் ... Read More »