ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் தமிழக வீரர் தங்கராசு நடராஜனை 3 கோடி ரூபாய்க்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஏலம் எடுத்துள்ளது. சர்வதேச போட்டிகளில் விளையாடிய அனுபவமே இல்லையென்ற போதிலும், வேகப்பந்து வீச்சில் காட்டிய திறமையால் ஐபிஎல் ஏலத்தில் தமிழக வீரர் தங்கராசு நடராஜன் 3 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளார். அவரின் அடிப்படை விலையாக 10 லட்சம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், பெங்களூருவில் நடைபெற்ற வீரர்கள் ஏலத்தில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, 3 கோடி ரூபாய்க்கு நடராஜனை ஏலம் எடுத்தது. சேலம் ... Read More »
விளையாட்டு
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ‘பூம் பூம்’ அப்ரிடி ஓய்வு
பாகிஸ்தான் ஆல் ரவுண்டரான சாகித் அப்ரிடி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 36 வயதான அப்ரிடி, டெஸ்ட் போட்டிகளில் இருந்து கடந்த 2010ல் ஓய்வு பெற்றுவிட்டார். இதனை தொடர்ந்து ஒரு நாள் போட்டிகளிலிருந்து 2015ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். கடந்த ஆண்டு டி20 போட்டிகளின் கேப்டன் பதவியிலிருந்து விலகியிருந்தார். இந்நிலையில் தனது 21 வருட சர்வதேச கிரிக்கெட் பயணத்தை முடித்து கொள்வதாக அவர் அறிவித்தார். சர்வதேச கிரிக்கெட்டில் இலங்கை அணிக்கு எதிராக 37 பந்துகளில் சதமடித்த அப்ரிடியை ’பூம் பூம்’ ... Read More »
சொல்லிட்டானே இவன் காதலை !! விராத் கோஹ்லி அடித்த காதல் சதம்
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியும் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் காதலித்து வருகிறார்கள். இவர்கள் காதலில் அடிக்கடி பிரிவுகள் ஏற்படுவதால் பல சந்தேகங்கள் உண்டாகின. இந்நிலையில் காதலர் தினத்தன்று அனுஷ்கா சர்மா மீதான தன் காதலை சமூகவலைத்தளம் மூலமாக வெளிப்படுத்தினார் கோலி. உன் விருப்பம் இருந்தால் எல்லா நாள்களும் காதலர் தினமே… எல்லா நாள்களையும் அதுபோல எனக்கு மாற்றுகிறாய் என்று காதல் உணர்வுடன் காதலர் தின வாழ்த்தை தன் காதலி அனுஷ்கா சர்மாவுக்கு வெளிப்படுத்தியுள்ளார் கோலி. Read More »
விமான நிலையத்தில் உதவ ஆளில்லை: அதிருப்தியில் ஆஸி. வீரர்கள் கவலை
இந்திய அணியுடனான டெஸ்ட் தொடரில் பங்கேற்க மும்பை வந்த ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான இந்திய அணிக்கு உரிய முறையில் வரவேற்பு அளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உலகின் பணக்கார விளையாட்டு அமைப்புகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ), வெளிநாட்டு வீரர்களுக்கு வரவேற்பு அளிப்பதில் புகழ்பெற்றது. ஆனால், மும்பை விமான நிலையத்தில் ஆஸ்திரேலிய அணி வீரர்களுக்கு உரிய முறையில் வரவேற்பு அளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. துபாயில் இருந்து விமானம் மூலம் மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையம் வந்த ஸ்டீவன் ... Read More »
250 விக்கெட்டுகளை வீழ்த்தி அஸ்வின் புதிய சாதனை…
இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திர அஸ்வின் டெஸ்ட் அரங்கில் குறைந்த போட்டியில் 250 விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய சாதனை படைத்துள்ளார். இந்தியா- வங்கதேச இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முஷ்பிகுர் ரஹிம் விக்கெட்டை வீழ்த்தி இந்த சாதனையை அவர் படைத்துள்ளார். கடந்த 2011 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான போட்டியில் அஸ்வின் அறிமுகமானார். இதுவரை 45 டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ள அஸ்வின் 250 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதன் மூலம் குறைந்த டெஸ்ட் போட்டியில் இந்த மைல்கல்லை எட்டி அஸ்வின் சாதனை படைத்துள்ளார். இதற்கு ... Read More »
பார்வையற்றோருக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம்
பார்வையற்றோருக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. பார்வையற்றோருக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நேற்று பெங்களூரில் நடைபெற்றது. இதில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதி கொண்டன. இதில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இதற்கு முன்பு 2007 மற்றும் 2012 ஆம் ஆண்டும் இரண்டு முறை பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடதக்கது. Read More »
விராத் கோஹ்லி சாதனை ;தொடர்கிறது இரட்டை சத தரவரிசை …
இந்தியா-வங்கதேச அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியின் 2ஆவது நாளான நேற்று இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி 204 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதன்மூலம் தொடர்ந்து நான்கு டெஸ்ட் தொடர்களில் இரட்டை சதமடித்த முதல் வீரர் என்ற சாதனையை விராத் கோலி படைத்தார். இந்திய அணியின் கேப்டனாக விராத் கோலியின் 4ஆவது இரட்டை சதம் இதுவாகும். ஒட்டுமொத்தமாக இந்திய அணியின் கேப்டன்கள் டெஸ்ட் போட்டிகளில் இதுவரை 8 இரட்டை சதங்களைப் பதிவு செய்துள்ளனர். அதில் 23 போட்டிகளில் ... Read More »
கிரிக்கெட் வீரர்களுக்கு ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விதிப்படி கிரிக்கெட் வீரர் தான் எங்கு இருக்கிறார் என்று விளையாட்டு அமைப்பு அல்லது தேசிய ஊக்க மருந்து தடுப்பு அமைப்பிடம் தெரிவிக்க வேண்டும்.வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்ரவுண்டர் ஊக்க மருந்து தடுப்பு விதிமுறைகளை மீறியுள்ளார். எங்கு இருக்கிறார் என்ற விவரத்தை தெரிவிக்காமல் அவர் இருந்துள்ளார். 11 மாத காலத்தில் அவர் 3 முறை இந்த விதிமுறையை மீறி இருக்கிறார்.2015-ம் ஆண்டில் ரஸ்சல் 3 தடவை தேசிய ஊக்க மருந்து மையத்துக்கு வர தவறிவிட்டார். ... Read More »
‘எதிரணியை ஒருபோதும் குறைத்து மதிப்பிடக்கூடாது – சச்சின் தெண்டுல்கர்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடுகிறது. இதில் முதலாவது டெஸ்ட் போட்டி புனேயில் வருகிற 23-ந் தேதி தொடங்குகிறது. மும்பையில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சச்சின் தெண்டுல்கர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் குறித்து கருத்து தெரிவிக்கையில், ‘எதிரணியை ஒருபோதும் குறைத்து மதிப்பிடக்கூடாது. ஆஸ்திரேலியா வலுவான அணியாகும். இந்திய சூழ்நிலையில் ஆடுவது கடினம் என்பதை அவர்களே ஒப்புக்கொண்டு இருக்கிறார்கள். இதனால் நாம் மெத்தனமாக இருந்து ... Read More »
உயிரிழந்தவர்களுக்கு ஆழ்த்த இரங்கல் ;கைகளில் கருப்புப் பட்டையுடன் களமிறங்கினர் இந்திய அணி வீரர்கள்
பத்தொன்பது வயதுக்குட்பட்டோருக்கான இந்திய கிரிக்கெட் அணியின் உடற்பயிற்சியாளர் ராஜேஷ் சவந்த் மற்றும் முகமது ஷமியின் தந்தை ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இந்திய வீரர்கள் கைகளில் கருப்புப் பட்டை அணிந்து விளையாடினர் பத்தொன்பது வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியின் உடற்பயிற்சியாளரான ராஜேஷ் சவந்த், மும்பையில் ஹோட்டல் அறையில் உயிரற்ற நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். மாரடைப்பால் அவர் உயிரிழந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. மேலும், இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமியின் தந்தை சமீபத்தில் மரணமடைந்தார். இவர்களது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக ... Read More »