தில்லியில் உள்ள பிரபல மேடம் துஸ்ஸாட்ஸ் அருங்காட்சியகத்தில் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலியின் மெழுகுச் சிலை புதன்கிழமை முதல் பார்வையாளர்கள் காட்சிக்கு வைக்கப்பட்டது.
லண்டனை அடிப்படையாகக் கொண்ட மேடம் துஸ்ஸாட்ஸ் அருங்காட்சியகத்தின் ஒரு கிளை இந்தியத் தலைநகர் தில்லியிலும் செயல்பட்டு வருகிறது. மெழுகுச் சிலைகளுக்கு பெயர்பெற்ற இந்த அருங்காட்சியங்களில் உலக பிரபலங்கள் பலரின் தத்ரூப சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.
இதில் தில்லியில் உள்ள அருங்காட்சியகத்தில் லயோனல் மெஸ்ஸி, கபில் தேவ், உசைன் போல்ட் ஆகியோரின் வரிசையில் விராட் கோலியின் சிலை தற்போது நிறுவப்பட்டுள்ளது. இந்த மெழுகுச் சிலை வடிவமைப்புக்காக கோலியின் உருவ அடிப்படையில் 200 அளவைகளும், சில புகைப்படங்களும் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.