நார்வே கால்பந்து லீக் தொடரில் ஸ்டபக் அணிக்கான ஒப்பந்தம் செய்யப்பட்ட குர்பீரித் சிங், ஸ்டார்ட் அணியுடனான போட்டியில் விளையாடினார்.
இதன்மூலம் ஐரோப்பிய டிவிஷன் லீக் போட்டியில் விளையாடிய இந்தியாவை சேர்ந்த முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். அந்தப்போட்டியில் ஸ்டபக் அணி ஐந்துக்கு பூஜ்யம் என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்றது.
இதனைத் தொடர்ந்து, ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் லாவோஸ் அணியை விளையாடவுள்ள இந்திய அணியில் அவர் இணைகிறார். 24 வயதாகும் குர்பீரித் சிங், உள்நாட்டு தொடரில் ஈஸ்ட் பெங்கால் அணிக்காக விளையாடிய அனுபவம் உள்ளவர்.