Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
ரூ.20,000க்கு விற்கப்பட்ட பெண் குழந்தையை ஒரு மணி நேரத்தில் மீட்ட அரசு அலுவலர்கள் | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Saturday , 24 September 2022
Home » தமிழ்நாடு » ரூ.20,000க்கு விற்கப்பட்ட பெண் குழந்தையை ஒரு மணி நேரத்தில் மீட்ட அரசு அலுவலர்கள்

ரூ.20,000க்கு விற்கப்பட்ட பெண் குழந்தையை ஒரு மணி நேரத்தில் மீட்ட அரசு அலுவலர்கள்

சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அருகே, பிறந்து சில நாட்களில், 20 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்ட பெண் குழந்தை, அரசு அலுவலர்களால், ஒரு மணி நேரத்தில் மீட்கப்பட்டது.

இந்த குழந்தையை பெற்றெடுத்த தம்பதிக்கு ஏற்கனவே, இரண்டு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளன. 4ஆவதாக, பிறந்த பெண் குழந்தையை வளர்க்க முடியாமல், டேனிஷ்பேட்டையைச் சேர்ந்த 15 ஆண்டுகளாக குழந்தைபேறு இல்லாத தம்பதிக்கு 20 ஆயிரம் ரூபாய்க்கு விற்றுவிட்டதாக கூறப்படுகிறது.

இதையறிந்த கிராம நிர்வாக அலுவலர், அந்த தம்பதியை அழைத்து ஒரு மணி நேரத்தில் குழந்தையை ஒப்படைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, தாங்கள் வாங்கிய பணத்தை திருப்பி கொடுத்துவிட்டு, அந்த தம்பதி தங்கள் குழந்தையை திரும்ப பெற்றனர். இனி குழந்தையை விற்க முயற்சித்தால், குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த தம்பதிக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com