ரியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய அணிக்கு பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நல்லெண்ண தூதுவராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனை இந்திய தடகள சங்கம் இன்று அறிவித்துள்ளது.
கிரிக்கெட் நாயகன் சச்சின், துப்பாக்கிச்சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா, பாலிவுட் நட்சத்திரம் சல்மான் கான் ஆகியோரைத் தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது இந்திய அணிக்கான நல்லெண்ண தூதுவர் பொறுப்பை ஏற்றுள்ளார்.
ஒலிம்பிக் போட்டிகள் வரும் ஆகஸ்ட் மாதம் 5-ந்தேதி தொடங்கி 21-ஆம் தேதி வரை பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெறவுள்ளது. இதில் 100-க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகளுடன் இந்திய அணி கலந்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.