பிரபல கால்பந்து வீரர் மெஸ்ஸி மீதான வரிஏய்ப்பு வழக்கின் விசாரணை ஸ்பெயின் நீதிமன்றத்தில் தொடங்கியது.
எனினும் விசாரணையின் போது மெஸ்ஸி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக மெஸ்ஸியால் விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை என அவரது தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்களில் ஒருவர் தெரிவித்தார்.
பார்சிலோனா அணிக்கான ஒப்பந்தம் மற்றும் விளம்பரங்கள் வாயிலாக கிடைத்த வருமானத்திற்கான வரியை முறையாக கட்டவில்லை என மெஸ்ஸி மீது வழக்கு தொடரப்பட்டது. பார்சிலோனா கிளப் அணிக்காக விளையாடி வரும் அர்ஜென்டினாவை சேர்ந்த மெஸ்ஸி, கடந்த 2000-ஆம் ஆண்டு முதல் ஸ்பெயினில் வசித்து வருகிறார். 2005-ஆம் ஆண்டு அந்நாட்டின் சிறப்பு குடியுரிமையும் மெஸ்ஸிக்கு வழங்கப்பட்டது.