Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
மர்ம கும்பலால் கடத்தப்பட்ட கால் பந்து வீரர் ஆலன் பத்திரமாக மீட்பு | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Thursday , 7 July 2022
Home » விளையாட்டு » மர்ம கும்பலால் கடத்தப்பட்ட கால் பந்து வீரர் ஆலன் பத்திரமாக மீட்பு

மர்ம கும்பலால் கடத்தப்பட்ட கால் பந்து வீரர் ஆலன் பத்திரமாக மீட்பு

201605301541580673_Alan-Pulido-Seized-Mexico-footballer-freed_SECVPFமெக்ஸ்கோவில் நேற்று மர்ம கும்பலால் கடத்தப்பட்ட சர்வதேச கால் பந்து வீரர் ஆலன் புலிடோவை மெக்ஸிகோ போலீசார் பத்திரமாக மீட்டுள்ளனர்.

ஒலிம்பியாகோஸ் என்ற கிரேக்க கிளப்புக்காக விளையாடும் ஆலன், நேற்று ஞாயிற்றுக்கிழமை தனது காதலியுடன் மெக்சிகோ நகரில் உள்ள பார்க்கில் சென்றுள்ளார். அப்போது 6 பேர் கொண்ட கும்பல் அவரை வலுக்கட்டாயமாக கடத்தி சென்றனர். இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் ஆலனை கடத்தி சென்றவர்களை வலைவீசி தேடினர். அப்போது அவர் மர்ம கும்பலிடம் இருந்து பத்திரமாக மீட்கபட்டார். ஆனால் அவர் எவ்வாறு மீட்கப்பட்டார் என்ற விவரங்களை மெக்ஸிகோ போலீசார் வெளியிட மறுத்துவிட்டனர்.

அவருக்கு தற்போது மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.  பேண்டேஜ் துணியால் கட்டப்பட்ட கையை செய்தியாளர்களிடம் ஆலன் புலிடோ காட்டினார். மேலும் நான் நலமுடன் இருக்கிறேன் கடவுளுக்கு நன்றி என்று அவர் கூறினார்.

கால் பந்து வீரர் மர்ம கும்பல் கடத்தி சென்றது மெக்சிகோவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

போதை மருந்து கடத்தல் தொர்பான கும்பலால், மெக்ஸிகோவில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கானோர் கடத்தப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com