Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த கணவன் கைது | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Saturday , 24 September 2022
Home » தமிழ்நாடு » மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த கணவன் கைது

மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த கணவன் கைது

சென்னை ஆதம்பாக்கத்தில் குடும்பத் தகராறு காரணமாக மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி எரித்தவனை போலீசார் கைது செய்தனர்.

கக்கன் நகரைச் சேர்ந்த ராஜனுக்கும் மனைவி பஞ்சவர்ணத்துக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் நடந்து வந்துள்ளது. சம்பவத்தன்று தீயில் எரிந்து அலறி துடித்த பஞ்சவர்ணத்தை அப்பகுதி மக்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இதுதொடர்பான புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட மாஜிஸ்திரேட்டிடம் பஞ்சவர்ணம் அளித்த வாக்குமூலத்தில் தனது கணவனே தன் மீது உள்ள ஆத்திரத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி சிகரெட்டால் தீவைத்து கொளுத்தி விட்டதாக கூறியுள்ளார். அதனடிப்படையில் ஆதம்பாக்கம் போலீசார் ராஜனை கைது செய்து கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com