Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
பிசிசிஐ க்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கண்டனம் ;அனைத்து மாநில வீரர்களுக்கும் சம வாய்ப்பு வழங்கும்படி அறிவுரை | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Tuesday , 16 August 2022
Home » விளையாட்டு » பிசிசிஐ க்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கண்டனம் ;அனைத்து மாநில வீரர்களுக்கும் சம வாய்ப்பு வழங்கும்படி அறிவுரை

பிசிசிஐ க்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கண்டனம் ;அனைத்து மாநில வீரர்களுக்கும் சம வாய்ப்பு வழங்கும்படி அறிவுரை

Kohli-and-Dhoni-572x420இளம் வீரர்கள் பலர், தோனி போலவும், கோலி போலவும் உருவாக விரும்புகின்றனர் என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) நிர்வாகத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி லோதாவின் பரிந்துரைகளை அமல்படுத்துவது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் தலைமையிலான அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், இளம்வீரர்கள் பலரும் மகேந்திர சிங் தோனி போலவும், விராட் கோலி போலவும் வளர விரும்புகிறார்கள். ஆனால் அவர்களுக்கு சரியான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. நாடுமுழுவதும் உள்ள அனைத்து மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கும் சரிசமமான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என்று கண்டனம் தெரிவித்தனர்.

மேலும், கிரிக்கெட் போட்டிகளைக் கட்டுபடுத்தும் உயரிய அமைப்பாக பிசிசிஐ இருக்கும் நிலையில், ஒருதலைபட்சமாக நடந்துகொள்வது கண்டிக்கத்தக்கது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

பிசிசிஐ நிர்வாககுழுவில் ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.எம்.லோதா குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவது தொடர்பாக ஆலோசனைகளை வழங்க வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியத்தை நியமித்தும் உத்தரவிட்டனர்.

மேலும், இந்திய கிரிக்கெட் அணிக்கான வீரர்கள் தேர்வில் நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களுக்கும் சமவாய்ப்பு வழங்கப்படவில்லை என்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தினை கடுமையாகக் கண்டித்தனர்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com