Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
பாஜக அரசின் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு சிவசேனா ஆதரவு | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Saturday , 24 September 2022
Home » இந்தியா » பாஜக அரசின் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு சிவசேனா ஆதரவு

பாஜக அரசின் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு சிவசேனா ஆதரவு

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கும் நிலையில், அக்கட்சியின் புதிய கூட்டாளியான சிவசேனா ஆதரித்து வாக்களித்திருக்கிறது.

அண்மையில், பாஜகவுடனான கூட்டணியிலிருந்து விலகிய சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரசோடு இணைந்து, மகாராஷ்டிராவில் கூட்டணி ஆட்சி அமைத்தது.

இந்நிலையில், குடியுரிமை சட்டத்திருத்த மசோதா, மக்களவையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது, 18 உறுப்பினர்களை கொண்ட சிவசேனா, ஆதரவு தெரிவித்து வாக்களித்தது.

சட்டவிரோதமாக குடியேறியவர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டு, மண்ணின் மைந்தர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்ற, பால் தாக்கரேவின் கனவை நிறைவேற்றும் வகையிலேயே, மசோதாவை ஆதரித்திருப்பதாக, சிவசேனா தெரிவித்திருக்கிறது.

அகதிகளாக வருவோருக்கு, ஒருவேளை குடியுரிமை அளிக்கப்பட்டாலும், அவர்களுக்கு 25 ஆண்டுகளுக்கு, வாக்களிக்கும் உரிமை வழங்க கூடாது என்றும், சிவசேனா வலியுறுத்தியிருக்கிறது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com