Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4 பேரும் திகார் சிறைக்கு மாற்றம் | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Saturday , 24 September 2022
Home » இந்தியா » நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4 பேரும் திகார் சிறைக்கு மாற்றம்

நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4 பேரும் திகார் சிறைக்கு மாற்றம்

நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 4 பேரும் டெல்லி திகார் சிறைக்கு மாற்றப்பட்டனர்.

இதையடுத்து எந்நேரமும் அவர்களுக்கு தண்டனை நிறைவேற்றப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. டெல்லியில் 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற, நிர்பயா கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பான வழக்கில் பவன்குமார் குப்தா, முகேஷ் சிங், வினய் ஷர்மா, அக்சய் ஆகியோருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதில் வினய் ஷர்மா என்பவன் மட்டும் கருணை கோரி, குடியரசுத் தலைவரிடம் மனு அளித்தான். அதை குடியரசுத் தலைவர் நிராகரித்து விட்டார். கருணை மனு நிராகரிக்கப்பட்ட 14 நாளில் குற்றவாளிகள் தூக்கிலிடப்படுவது விதியாகும். இந்நிலையில் 4 பேரும் திகார் சிறைக்கு மாற்றப்பட்டிருப்பதால், எந்நேரமும் அவர்கள் தூக்கிலிடப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com