Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
தேனி மாவட்ட ஆவின் தலைவராக ஓபிஎஸ் சகோதரர் நியமனம் ரத்து | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Sunday , 16 January 2022
Home » தமிழ்நாடு » தேனி மாவட்ட ஆவின் தலைவராக ஓபிஎஸ் சகோதரர் நியமனம் ரத்து

தேனி மாவட்ட ஆவின் தலைவராக ஓபிஎஸ் சகோதரர் நியமனம் ரத்து

தேனி மாவட்ட ஆவின் நிர்வாகக்குழு தலைவராக, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா நியமிக்கப்பட்டதை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்துள்ளது.

தேனி மாவட்ட ஆவின் தலைவராக ஓபிஎஸ் சகோதரர் நியமனம் ரத்து
ஓ ராஜா
மதுரை:

தேனி மாவட்ட ஆவின் நிர்வாகக்குழு தலைவராக ஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்து, தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி தொடக்க பால் கூட்டுறவு சங்க தலைவர் அமாவாசை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆவின் விதிகளை மீறி ஓ.ராஜா மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டதாகவும், தலைவர், துணை தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகளுக்கு அதிமுகவினரை மட்டும் நியமித்துள்ளதாகவும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

ஐகோர்ட் மதுரை கிளை

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, தேனி ஆவின் தலைவராக ஓ.ராஜா மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் செயல்பட இடைக்கால தடை விதித்தது.

இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதிகள் இன்று தீர்ப்பு வழங்கினர். அப்போது, தேனி மாவட்ட ஆவின் தலைவராக ஓ.பி.எஸ். சகோதரர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டதை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ஆவின் விதிகளின்படி உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படாததால் நியமனம் ரத்து செய்யப்படுவதாகவும், தற்காலிக அல்லது நிரந்தர நிர்வாகக் குழுவை அமைப்பதுபற்றி ஆவின் ஆணைய தலைவர் முடிவு எடுக்கலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்

Facebook Auto Publish Powered By : XYZScripts.com