Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
தமிழக மீனவர்களை சிறைபிடித்து ஆந்திர மீனவர்கள் தாக்குவதாக புகார் | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Saturday , 24 September 2022
Home » மாவட்டம் » நாகப்பட்டினம் » தமிழக மீனவர்களை சிறைபிடித்து ஆந்திர மீனவர்கள் தாக்குவதாக புகார்

தமிழக மீனவர்களை சிறைபிடித்து ஆந்திர மீனவர்கள் தாக்குவதாக புகார்

நாகை மாவட்ட மீனவர்கள் 9 பேரை சிறைப்பிடித்துள்ள ஆந்திர மீனவர்கள், அவர்களை தாக்குவது போன்ற வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை மீனவர்கள் 9 பேர் கடந்த 28 ஆம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். கடந்த ஒன்றாம் தேதி சென்னைக்கு அருகே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அவர்கள் தங்கள் பகுதிக்கு வந்ததாக கூறி ஆந்திர மீனவர்களால் சிறைபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் நாகை மீனவர்களை சிலர் தாக்குவது போன்ற வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

ஆந்திர மீனவர்களால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 9 பேரையும் அவர்களது விசைப்படகையும் மீட்டுத்தர கோரி அக்கரைப்பேட்டை மீனவர்கள் நாகை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com