Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
ஜடேஜாவின் திருமணத்தில் துப்பாக்கிச்சூடு; விழா கொண்டாட்டம் என உறவினர்கள் பதில். | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Tuesday , 16 August 2022
Home » விளையாட்டு » ஜடேஜாவின் திருமணத்தில் துப்பாக்கிச்சூடு; விழா கொண்டாட்டம் என உறவினர்கள் பதில்.

ஜடேஜாவின் திருமணத்தில் துப்பாக்கிச்சூடு; விழா கொண்டாட்டம் என உறவினர்கள் பதில்.

jadeja_engagement__largeகிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் திருமணக் கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக, அவரது உறவினர்களால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவுக்கு, அவரது பால்யகால தோழியான ரிவா சோலங்கிக்கும் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள ஜடேஜாவின் உணவகத்தில் வெகுவிமரிசையாகத் திருமணம் நடைபெற்றது.

இந்த திருமணக் கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக, அவரது உறவினர்கள் துப்பாக்கியால் சுட்டு கொண்டாடியதாகப் புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினருக்குக் கிடைத்த தகவலை அடுத்து சம்பவம் குறித்து ராஜ்கோட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உரிமம் பெற்ற துப்பாக்கியாக இருந்தாலும், தற்காப்புக்காக மட்டுமே சுட வேண்டும் என்பது சட்ட நடைமுறை என்றும், இந்த நடைமுறைகளை மீறும் போது 3 ஆண்டுகள் வரை தண்டனை அளிக்க சட்டத்தில் வழிவகை உள்ளதாகக் கூறப்படுகிறது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com