டெல்லி: அனைத்து வகை ஆட்டத்திற்கும் விராத் கோஹ்லியே கேப்டனாக செயல்படலாம். அதற்கான நேரம் வந்து விட்டது. ஒரே சாதாரண வீரராக டோணி தனது ஆட்டத்தை ரசித்து ஆட வாய்ப்பு தரலாம் என்று இந்திய அணியின் முன்னாள் இயக்குநர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நான் தேர்வுக் குழுத் தலைவராக இருந்திருந்தால் இதைத்தான் செய்திருப்பேன் என்றும் சாஸ்திரி கூறியுள்ளார். டோணி கிரிக்கெட்டை அனுபவித்து ஆடும் நேரம் வந்து விட்டது. கேப்டன் பொறுப்பை கோஹ்லியிடம் கொடுக்கும் நேரமும் வந்து விட்டது என்றும் சாஸ்திரி கூறியுள்ளார்.