Friday , 14 May 2021
Home » சினிமா » கைதி படம் உருவாக அந்த இரண்டு படங்கள் தான் காரணம்- லோகேஷ் கனகராஜ்

கைதி படம் உருவாக அந்த இரண்டு படங்கள் தான் காரணம்- லோகேஷ் கனகராஜ்

கார்த்தி நடித்துள்ள கைதி படம் உருவாக இரண்டு படங்கள் முன்னுதாரணமாக இருந்ததாக படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

கைதி படம் உருவாக அந்த இரண்டு படங்கள் தான் காரணம்- லோகேஷ் கனகராஜ்
கார்த்தி
மாநகரம் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் கைதி. இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடி யாரும் கிடையாது. முக்கிய கதாபாத்திரத்தில் நரேன் நடித்துள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். ஒரு இரவில் நடக்கும் சம்பவத்தை ஆக்‌ஷன் திரில்லராக உருவாகியுள்ள கைதி படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 25ம் தேதி திரைக்கு வர உள்ளது.

கார்த்தி, கமல்

இந்நிலையில், படம் குறித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறுகையில், ‘கைதி படத்தில் இடம்பெற்றுள்ள கார்த்தியின் கதாபாத்திரம் கமலின் விருமாண்டி மற்றும் ஹாலிவுட் படமான டை ஹார்ட் ஆகியவற்றை முன்னுதாரணமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இரு படங்களுக்கும் டைட்டிலில் கெளரவம் அளிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com