Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
குல்பூஷண் ஜாதவ் மேல்முறையீடு செய்ய பாகிஸ்தான் ராணுவ சட்டத்தை மாற்றியமைக்க முடிவு | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Saturday , 24 September 2022
Home » இந்தியா » குல்பூஷண் ஜாதவ் மேல்முறையீடு செய்ய பாகிஸ்தான் ராணுவ சட்டத்தை மாற்றியமைக்க முடிவு

குல்பூஷண் ஜாதவ் மேல்முறையீடு செய்ய பாகிஸ்தான் ராணுவ சட்டத்தை மாற்றியமைக்க முடிவு

சிவில் நீதிமன்றத்தில் தண்டனைக்கு எதிராக குல்பூஷண் ஜாதவ் மேல்முறையீடு செய்ய பாகிஸ்தான் ராணுவ சட்டத்தை மாற்றியமைக்கிறது.

இஸ்லாமாபாத்,

இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவ் (வயது 49). இவர் இந்திய கடற்படையில் பணிபுரியும் அதிகாரி என்றும், தங்கள் நாட்டில் உளவு வேலை பார்த்தார் என்றும் பாகிஸ்தான் அபாண்டமாக பழி சுமத்தி, 2016-ம் ஆண்டு, மார்ச் மாதம் 3-ந்தேதி அவரை கைது செய்து சிறையில் அடைத்தது. இதுகுறித்த தகவலை இந்தியாவுக்கு 22 நாட்கள் கழித்து தெரிவித்தது.

ஆனால் குல்பூஷண் ஜாதவ், இந்திய கடற்படையின் ஓய்வு பெற்ற அதிகாரி, ஈரானில் வர்த்தகம் செய்து வந்தார். அவரை பாகிஸ்தான் ஏஜெண்டுகள் கடத்தி வந்து இந்த பழியை அபாண்டமாக சுமத்துகின்றனர் என இந்தியா கூறியது. இருப்பினும் குல்பூஷண் ஜாதவ் மீதான வழக்கை பாகிஸ்தான் ராணுவ கோர்ட்டு அவசர கோலத்தில் விசாரித்து, அவருக்கு மரண தண்டனை விதித்து 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தீர்ப்பு வழங்கியது.

இந்த தீர்ப்பால் அதிர்ந்து போன இந்தியா, அதே ஆண்டின் மே மாதம் 8-ந்தேதி, நெதர்லாந்து நாட்டின் திஹேக் நகரில் உள்ள சர்வதேச கோர்ட்டை நாடியது. சர்வதேச கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பளிக்கப்பட்டது.

சர்வதேச கோர்ட்டு நீதிபதிகள், குல்பூஷண் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறுத்தி வைத்து அதிரடி தீர்ப்பு அளித்தனர். மேலும், அவர் மீதான தண்டனையை மறு ஆய்வு செய்யவும் பாகிஸ்தானுக்கு உத்தரவிட்டனர்.

இந்த நிலையில் பாகிஸ்தானில் இம்ரான் கான் அரசும் விரைவில் தனது ராணுவச் சட்டத்தில் மாற்றம் செய்கிறது. அவ்வாறு செய்யப்பட்டால் குல்பூஷண் ஜாதவ் ஒரு சிவில் நீதிமன்றத்தில் தனது தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்ய அனுமதிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

பாகிஸ்தான் அரசாங்கம் ராணுவச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்யப்போவதாகவும், குல்பூஷண் ஜாதவ் சிவில் நீதிமன்றத்தில் தண்டிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com