Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
கார்ட்டோசாட் 3 செயற்கைக்கோள் நாளை விண்ணில் ஏவப்படுகிறது-இஸ்ரோ சிவன் | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Saturday , 24 September 2022
Home » இந்தியா » கார்ட்டோசாட் 3 செயற்கைக்கோள் நாளை விண்ணில் ஏவப்படுகிறது-இஸ்ரோ சிவன்

கார்ட்டோசாட் 3 செயற்கைக்கோள் நாளை விண்ணில் ஏவப்படுகிறது-இஸ்ரோ சிவன்

கார்ட்டோசாட் 3 செயற்கைக்கோளை சுமந்து செல்லும் பிஎஸ்எல்வி சி-47 ராக்கெட்டை நாளை காலை 9.28 மணிக்கு விண்ணில் ஏவப்படுவதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இஸ்ரோ தலைவர் சிவன் இன்று காலை சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கார்ட்டோசாட் 3 செயற்கைக்கோளும், அமெரிக்காவை சேர்ந்த 13 நானோ செயற்கைக்கோள்களும் நாளை காலை 9.28 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளதாக தெரிவித்தார்.

ஸ்ரீஹரிகோட்டாவில் இதற்கான 26 மணி நேர கவுன்ட்-டவுன் இன்று காலை 7.28 மணிக்கு தொடங்கி வெற்றிகரமாக நடைபெற்று வருவதாக சிவன் கூறினார். சந்திராயன் -3 திட்ட ஆயத்த பணிகள் நடைபெற்று வருவதாகவும், கடந்த முறை போல லேண்டர் கடினமாகத் தரையிறங்குவதைத் தவிர்க்கும் வகையில் உரிய மாற்றங்கள் செய்யப்படும் என சிவன் தெரிவித்தார்.

ஆழ்துளைக் கிணறுகளில் விழுந்துவிடும் குழந்தைகளை மீட்கும் விவகாரத்தில் இஸ்ரோ ஏதேனும் உதவி செய்ய முடியுமா, அதுதொடர்பான கண்டுபிடிப்புகளை செய்ய முடியுமா என செய்தியாளர்கள் கேட்டனர். செயற்கைக்கோள் மூலம் செய்யக்கூடிய உதவிகளை இஸ்ரோ செய்யும் என சிவன் பதிலளித்தார்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com