கவுண்டி தொடர் போன்ற தொடர்களில் இந்திய வீரர்கள் பங்கேற்க வேண்டும் என்று பிசிசிஐ-யின் தொழில்நுட்பக் கமிட்டியின் தலைவரும், இந்திய அணியின் முன்னாள் வீரருமான சவுரவ் கங்குலி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து பேசிய கங்குலி, ரோகித் ஷர்மா, ஷிகர் தவாண், ரவிச்சந்திரன் அஸ்வின், உமேஷ் யாதவ் மற்றும் வருண் ஆரோண் உள்ளிட்ட வீரர்கள் இங்கிலாந்தில் நடக்கும் கவுண்டி கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதன் மூலம் இந்திய அணியின் சிறந்த வீரர்களாக உருவெடுக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் அனுராக் தாக்கூர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்ட கூட்டத்தில் பேசிய கங்குலி, கவுண்டி கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றதன் மூலம் ஜாகீர் கான், தனது திறமையை திறம்பட வளர்த்துக் கொண்டதை மேற்கோள் காட்டியுள்ளார். இதற்கு முன்னதாக, இந்திய கிரிக்கெட் வீரர்கள் வெளிநாடுகளில் நடக்கும் கவுண்டி தொடர் போன்ற கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்பதை பிசிசிஐ விரும்பியதில்லை.