ஒருநாள் மற்றும் டி20 அணியின் அணித்தலைவர் பதவியில் இருந்து மகேந்திரசிங் டோனி விலகியுள்ளார்.
டோனியின் இந்த அதிரடி முடிவு உலக ரசிகர்களையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
அதேவேளை இங்கிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் வீரராக கலந்து கொள்ள தயாராக இருப்பதாகவும் டோனி தெரிவித்துள்ளார்.
அணித்தலைவராக இருந்து இந்தியாவை உச்சத்துக்கு கொண்டு சென்றவர் டோனி என்றால் அதுமிகையல்ல.
ஆட்ட நுணுக்கத்திலும், அணியை வழிநடத்துவதிலும் டோனிக்கு நிகர் டோனி மட்டுமே.
இந்நிலையில் இவர் பதவி விலகியதை தொடர்ந்து சாக்ஷி டோனி டுவிட்டரி்ல், உன்னை நினைத்து பெருமைப்படுகிறேன் என தெரிவித்துள்ளார்