Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
உலக கோப்பை கால்பந்து – ரஷியா அணி 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Thursday , 7 July 2022
Home » முக்கிய செய்திகள்: » உலக கோப்பை கால்பந்து – ரஷியா அணி 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி

உலக கோப்பை கால்பந்து – ரஷியா அணி 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி

Soccer Football - World Cup - Group A - Russia vs Saudi Arabia - Luzhniki Stadium, Moscow, Russia - June 14, 2018   Russia's Yury Gazinsky celebrates scoring their first goal with team mates       REUTERS/Carl Recine

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான உலகக்கோப்பை கால்பந்து தொடர் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. கடைசியாக 2014-ம் ஆண்டு பிரேசிலில் நடந்த உலக கோப்பை போட்டியில் ஜெர்மனி அணி வாகை சூடியது.இந்த நிலையில் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் 21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் இன்றிரவு 8.30 மணிக்கு தொடங்கியது. இதில் ரஷியா – சவுதி அரேபியா பலப்பரீட்சை நடத்தின.முன்னதாக இரவு 8 மணிக்கு கோலாகலமான தொடக்க விழாவுடன் உலகக் கோப்பை தொடர் தொடங்கியது. இங்கிலாந்தின் பிரபல பாப் பாடகர் ராப்பி வில்லியம்ஸ் இசை விருந்து அளித்தார். அப்போது பிரேசில் முன்னாள் வீரர் ரொனால்டோ பந்தை உதைத்து போட்டியை தொடங்கி வைத்தார். அதன்பின் ஜிம்னாஸ்டிக்ஸ் கலைஞர்களின் சாகசமும் நடைபெற்றது. இந்த போட்டியை ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், சவுதி அரேபியா இளவரசர் மொகமது பின் சல்மான், பீபா அமைப்பின் தலைவர் ஜியான்னி இன்பாண்டினோ ஆகியோர் கண்டுகளித்தனர். இப்போட்டி தொடங்கிய 12-வது நிமிடத்தில் ரஷியா அணியின் கசின்ஸ்கீ கோல் அடித்தார். அதைத்தொடர்ந்து 43-வது நிமிடத்தில் டென்னிஸ் செரிஷேவ் இரண்டாவது கோல் அடித்தார். இதனால் முதல்பாதி நேர ஆட்டத்தில் ரஷியா அணி 2-0 என முன்னிலை பெற்றது.தொடர்ந்து நடந்த இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் 71-வது நிமிடத்தில் ரஷியா அணியின் டிசியூபா கோல் அடித்தார். இறுதிநேர ஆட்டத்தில் ரஷியாவின் டென்னிஸ் செரிஷேவ் தனது இரண்டாவது கோலை அடித்தார். அதன்பின் ரஷியாவில் கோலோவின் மேற்கொண்டு ஒரு கோல் அடித்தார். சவுதி அரேபியா அணியினர் இறுதிவரை முயன்றும் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இறுதியில் ரஷியா அணி 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று 3 புள்ளிகளை தட்டிச்சென்றது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com