Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
உலகக்கோப்பை கால்பந்து-ரேசில், சுவிட்சர்லாந்து போட்டி டிரா | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Thursday , 7 July 2022
Home » முக்கிய செய்திகள்: » உலகக்கோப்பை கால்பந்து-ரேசில், சுவிட்சர்லாந்து போட்டி டிரா

உலகக்கோப்பை கால்பந்து-ரேசில், சுவிட்சர்லாந்து போட்டி டிரா

brazil-afp_625x300_1529264433066உலகக்கோப்பை கால்பந்து தொடரில் நேற்று மூன்று ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டத்தில் செர்பியா, கோஸ்டா ரிகா அணியையும், இரண்டாவது ஆட்டத்தில் மெக்சிகோ, ஜெர்மனி அணியையும் வீழ்த்தியது. தொடர்ந்து நடைபெற்ற மூன்றாவது லீக் ஆட்டத்தில் ‘ஈ’ பிரிவில் இடம்பிடித்துள்ள பிரேசில் – சுவிட்சர்லாந்து அணிகள் மோதின.இப்போட்டியின் முதல் பாதி நேர ஆட்டத்தின் 20-வது நிமிடத்தில் பிரேசில் அணியின் பிலிப்பே கவுடின்ஹோ கோல் அடித்தார். இதனால் பிரேசில் அணி 1-0 என முன்னிலை பெற்றது. சுவிட்சர்லாந்து அணியினர் எவ்வளவு முயன்றும் முதல் பாதிநேர ஆட்டத்தில் கோல் அடிக்க முடியவில்லை.தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் 50-வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து அணியின் ஸ்டீவன் ஜூபர் கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 1-1 என சமனானது. அதன்பின் இரு அணியினரும் கோல் போடும் முயற்சியில் தீவிரமாக இறங்கினர். ஆனால் இறுதிவரை இரு அணிகளும் மேற்கொண்டு கோல் அடிக்கவில்லை. இதனால் இந்த போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com