Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
உலகக்கோப்பை கால்பந்து- துனிசியாவை வீழ்த்தியது இங்கிலாந்து | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Thursday , 7 July 2022
Home » முக்கிய செய்திகள்: » உலகக்கோப்பை கால்பந்து- துனிசியாவை வீழ்த்தியது இங்கிலாந்து

உலகக்கோப்பை கால்பந்து- துனிசியாவை வீழ்த்தியது இங்கிலாந்து

TELEMMGLPICT000166789218-xlarge_trans_NvBQzQNjv4BqC_LLCXkS_z-CZqgOMP7Be9WPY3Z_26YLrAU_gL4_dbYஉலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ஸ்வீடன் அணி, தென்கொரியாவையும், இரண்டாவது ஆட்டத்தில் பெல்ஜியம் அணி, பனாமாவையும் வீழ்த்தியது. இதையடுத்து நடைபெற்ற மூன்றாவது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து – துனிசியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டி தொடங்கியது முதலே இங்கிலாந்து வீரர்கள் அடுத்துடுத்து கோல் போட முயற்சித்தனர். முதல் ஐந்து நிமிடத்திற்குள் இரண்டு கோல் போடும் வாய்ப்புகளை இங்கிலாந்து அணி தவறவிட்டது. முதல் பாதிநேர ஆட்டத்தின் 11-வது நிமிடத்தில் இங்கிலாந்து கேப்டன் ஹாரி கேன் கோல் அடித்தார். இதனால் இங்கிலாந்து அணி 1-0 என முன்னிலை பெற்றது.இதையடுத்து துனிசியா வீரர்களும் கோல் அடிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கினர். 35-வது நிமிடத்தில் துனிசியா அணிக்கு ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பில் துனிசியா அணியின் பெர்சானி சஸ்சி கோல் அடித்தார். இதனால் ஆட்டம் சமனானது. முதல் பாதிநேர ஆட்டம் முசிடில் போட்டி, 1-1 என சமனில் இருந்தது. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தில் கூடுதலாக வழங்கப்பட்ட நேரத்தில் இங்கிலாந்து கேப்டன் ஹாரி கேன் இரண்டாவது கோல் அடித்தார். அதன்பின் துனிசியா அணியினர் கோல் அடிக்கவில்லை. இதனால் இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 2-1 என வெற்றி பெற்றது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com