Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
இந்திய மகளிர் ஹாக்கி அணி அபார வெற்றி!! | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Thursday , 7 July 2022
Home » இந்தியா » இந்திய மகளிர் ஹாக்கி அணி அபார வெற்றி!!

இந்திய மகளிர் ஹாக்கி அணி அபார வெற்றி!!

womens hockey teamமகளிர் ஹாக்கி போட்டியில் ஸ்பெயின் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

ஸ்பெயினுக்கு எதிரான ஹாக்கி தொடரின் 5-வது ஆட்டத்தில், இந்திய மகளிர் அணி 4-1 என அபார வெற்றி பெற்று தொடரை 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது.
உலகக் கோப்பை மகளிர் ஹாக்கிப் போட்டி லண்டனில் வரும் ஜூலை மாதம் நடைபெற உள்ளது. இதற்கு தயாராகும் வகையில் இந்திய மகளிர் அணி ஸ்பெயின் அணிக்கு எதிரான 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் பங்கேற்றது.
முன்னதாக ஸ்பெயின் அணி இரு ஆட்டங்களிலும், இந்திய அணி ஒரு ஆட்டத்திலும் வெற்றி பெற்றிருந்தன. மற்றொரு ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.இந்நிலையில் தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் 5-வது ஆட்டம் நேற்று நடந்தது. இதில் இந்திய கேப்டன் ராணி ராம்பால், குர்ஜித் கவுர் ஆகியோர் அற்புத ஆட்டத்தால் 4-1 என்ற கோல் கணக்கில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் ராணி, குர்ஜித் ஆகியோர் தலா 2 கோல்களை அடித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டனர். ஸ்பெயின் அணியின் சார்பில் லோலா ரியரா ஒரு கோல் அடித்தார். இந்திய அணி பெற்ற இந்த வெற்றி மூலம் ஹாக்கி தொடர் 2-2 என சமனில் முடிவடைந்தது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com