Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
இந்திய பெண்கள் ஆக்கி அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.. | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Thursday , 7 July 2022
Home » முக்கிய செய்திகள்: » இந்திய பெண்கள் ஆக்கி அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது..

இந்திய பெண்கள் ஆக்கி அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது..

gettyimages-588144516இந்திய பெண்கள் ஆக்கி அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணியுடன் 3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் இந்தியா–ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது ஆக்கி போட்டி மெல்போர்னில் நேற்று நடந்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் உலக தர வரிசையில் 12–வது இடத்தில் இருக்கும் இந்திய அணி 1–0 என்ற கோல் கணக்கில் 4–வது இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. 21–வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி இந்திய அணி கேப்டன் ராணி ராம்பால் வெற்றிக்கான கோலை அடித்தார். கடைசியாக ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை சந்தித்தது. அதில் ஆஸ்திரேலிய அணி 6–1 என்ற கோல் கணக்கில் இந்தியாவை தோற்கடித்ததது. அந்த தோல்விக்கு இந்திய அணி நேற்று பழிதீர்த்தது.

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் 4 நாடுகள் இடையிலான ஆண்கள் ஆக்கி போட்டி தொடரில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி 2–3 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி கண்டது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com