வரும் ஜூன் 1-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை மும்பை மகிந்திரா ஸ்டேடியத்தில் 12-வது குரு தெக் பகதூர் அகில இந்திய தங்கக் கோப்பை ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற உள்ளது. இதில், 10 முதல் 12 அணிகள் வரை விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, ஏர் இந்தியா, சி.ஏ.ஜி, பஞ்சாப் நேஷனல் வங்கி, வெஸ்டர்ன் ரெயில்வே, சென்ட்ரல் ரெயில்வே, மும்பை கஸ்டம்ஸ், யூனியன் பேங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட அணிகள் இடம்பெற உள்ளதாக தெரிகிறது. எனினும், இன்னும் இரண்டு நாட்களுக்குள் இந்த போட்டியில் பங்குபெற உள்ள அணிகளின் முழுவிபரமும் வெளியாகிவிடும்.
Home » விளையாட்டு » இந்திய தங்கக்கோப்பை ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் ஏர் இந்தியா அணி இடம்பெறுகிறது